"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

ஞாயிறு, ஜனவரி 31, 2010

"எனக்கு என்ன வேண்டும் என்பது என்னைவிட கடவுளுக்கு நன்றாகத்தெரியும்"- சாமான்னியன் சொல்வது
"எனக்கு என்ன வேண்டும் என்பது கடவுளைவிட எனக்கு நன்றாகத்தெரியும்" - சாதனையாளன் சொல்வது

சனி, ஜனவரி 30, 2010

தோல்வியில் துவங்கும் காதல்-1

என்னை காதலிப்பாயா என்றேன்
ஏன் உன்னை காதலிக்க வேண்டும் என்றாய்
நான் நல்லவன் உன்னை கண்ணுக்குள் வைத்து காப்பேன் என்றேன்
எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்றாய்
ஏன் நல்லவர்களை பிடிக்காதா என்றேன்
நல்லவர்களை பிடிக்கும் ஆனால்
தன்னை நல்லவன் என்று சொல்பவனை பிடிக்காது என்றாய்
நான் அதிர்ந்து மௌனம் ஆனேன்.
"தன்மீது நம்பிக்கை இல்லாத எவறும் தன்னை சுற்றி நடப்பவற்றை அணைத்தும் தவராகவே புரிந்து கொள்கின்றனர்"