"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், ஆகஸ்ட் 29, 2013

தென் பயணம் - 4 - மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இறங்கி சுற்றுல வழிகாட்டி மையம் எதாவது உள்ளதா என தேடி பார்த்தேன். அப்படியேதும் அங்கு இல்லை. ஆனால்  traffic constable  ஒருவர் ஒரு cabinனுள் இருந்தார் அவரிடம் விசாரித்ததில், சுற்றி என்னென்ன இடங்கள் இருக்கிறது, பேருந்துகளின் எண்கள் எல்லாவற்றையும் பொறுமையாக கூரினார்.

பேருந்து நிலையத்திலிருந்து தெரிந்த நண்பர் விட்டுக்கு சென்றேன்.ஒரு சிறிய விருந்தோம்பலுக்கு பிறகு அவரே தெரிந்த ஆட்டோ நண்பரை அறிமுகபடுத்தி அதில் ஏறிவிட்டார்.

ஆட்டோ நண்பரருக்கு  40 வயதுக்கு மேல் இருக்கும். பேருந்து நிலையத்தின் அருகிலேயே ஒரு நல்ல ஹோட்லுக்கு அழைத்து சென்றார். நகரத்தின் மையத்தில் உள்ள ஹோட்டல்கள் பழமையானவை விலையும் அதிகம் என்றார் . நாளை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகவேண்டும் வருவீரா என்றேன். கோவிலுக்கு போவதென்றால் காலை 6.00 மணிக்கு போகலாம் கூட்டம் இருக்காது என்றார். சரி என்றேன்.

 காலை 5.30க்கு செல்லில் என்னை அழைத்தார். 6.00 மணிக்கு கிளம்பினோம்.

போகும் வழியில் அவரிடம் பேசிக்கொண்டே போனேன்.   மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில முன்பு பெரிய  மாட்டு சந்தை இருந்ததாம், மாடு பேரம் பேசும் போது கை மேல் போடும் துணியின் பெயர் மாட்டுத்தாவணியாம்.

கோவிலுக்கு அருகில் ஒரு நீண்ட  தெருவில் பழ மார்க்கெட் இருந்தது. அது இரவு துவங்கி காலையில் முடியும்  மார்க்கெட், இரவு முழுவதும் மொத்த வியாபாரம் கோடிகளில் நடக்கும் என்றார். பகலில் அதே தெருவில் வேறு கடைகளும் மளிகை வியாபாரம் நடக்குமாம். ஆச்சிரியமாக இருந்தது. தூங்கா நகரம்.

கிழக்கு வாசலில் என்னை இறகிவிட்டுவிட்டு சென்றுவிட்டார். camera வை கோவிலுக்குள் நுழையும் போதே காவலர்கள் வாங்கிகொண்டனர் .

காலையில் கோவில் அமைதியாகவும் அழகாகவும் இருந்தது. அமைதியான தரிசனம். தமிழகவிருச்சத்தின் அடிமரம் போல இருந்தது கோவில்.
மீனாட்சி சன்னதிக்கு முதலில் சென்றேன். மீனாட்சி அம்மன் அவ்வளவு அழகு. கூட்டம் இல்லை. போ போ என்று தள்ளுவார் இல்லை. சன்னதியை கடந்து போகும் வரை ஒரு தியான நிலையில் இருந்தது மனது.

அதை முடித்து பெருமாள் சன்னதி.

இறுதியாக வெளிமண்டபத்தில் வந்து அமர்தேன். வெவ்வேறு சாமி சிலைகளால் ஆனது அந்த மண்டபம். ஒரு வெளிநாட்டு பெண்மணி அந்த மண்டபம் முழுவதையும் தன செல் போனில் படம் எடுத்துக்கொண்டு இருந்தார். அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் ஒவ்வொரு சிலையையும் ரசித்துக்கொண்டு இருந்தார்.

செல் போனில் படம் எடுக்க 50 ருபாய் கட்டணம். அந்த மண்டபம் வரை படம் எடுத்துகொள்ளலாம். அந்த சிலைகளை வடித்த சிற்பிகள் அந்த சிலைகளின் வழியே எதையோ சொல்ல துடித்திருக்கிறார்கள்.

கோவிலில் உள்ள அனைத்து சிலைகளும் எத்தனையோ நூற்றண்டுகள் , எத்தனையோ மனிதர்கள், மந்திரங்கள், கட்டுப்பாடுகள், பழக்கவழக்கங்களை பார்த்துக்கொண்டு மௌன சாட்சியாய் நிற்கின்றன . ரசிப்பது ஒரு கலை. கலைகள் வாழ்வின் மேல் ஒரு இர்பை ஏற்படுத்துகிறது. பயணங்கள் அதை பூர்தி செய்கிறது.




































திருபரங்குன்றம்

மதுரையிலிருந்து திருபரங்குன்றம் 8km. மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து திருபரங்குன்றம் அடைந்தேன்.

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் கோவில் அது . கூட்டம் இல்லை. மலையை குடைந்து மண்டபம் அமைத்து பெரிய பாறைகளில் சிலைகள் செதிக்கி உள்ளார்கள் . முருகன்  சிலையும் தனியாக நிற்கவில்லை,  ஒரு பெரிய பாறை குடைந்து செதுக்கப்பட்ட சிலை. அதன் அருகில் பிற தெய்வங்களும்  செதுக்கப்பட்டுள்ளது. மற்ற சன்னதிகளை விட இது வித்தியாசமாக இருந்தது.











திருமலை நாயக்கர் அரண்மனை 

போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம், அழகான குட்டிச்சுவர் போல் உள்ளது. இதில் அரசாங்கத்தை குறை சொல்வதைவிட மக்களிடம் குறைந்த ரசனை மற்றும் அறியாமை, பாழடைந்துள்ளது அரண்மனை.|

அழகையும் ரசனையும் கொட்டி நிறப்பி எழுப்பி இருக்கிறார்கள். ஒரு ராஜா இந்த அரண்மனையில் தன் சொந்தங்களோடு கூடி வாழ்ந்திருக்கிறார்.
 பெரிய பெரிய தூன்கள் , வளைவுகள் என அழகிய  அரண்மனை.  








                                               


                                       





























மதுரையோடு முடிந்தது இந்த பயணம்.  ஊர்வந்து சேர்ந்ததும் மனமும் உடலும் லேசானது போல இருந்தது. அதன் பின் பயணத்தின் நினைவுகள் பசித்த பறவைகள் போல மனத்தில் சுற்றித்திரிகிறது.

இப்போதும் தொலைந்து போகவே துடிக்கிறது மனது ..........,






ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

தென் பயணம் -3 - திருச்செந்தூர்


திருநல்வேலியில் இரவு தங்கினேன். மறுநாள் காலை 6.30 மணிக்கு திருச்செந்தூர் செல்ல  passenger இரயில் இருந்தது.  ஒரு passenger இரயில நாம புதுசா ஏறினா யாருமே தெரியாத ஒரு கல்யாண வீட்டுக்கு போனமாதிரி இருக்கும் . பள்ளி செல்லும் பசங்க பேசி சிரிக்கிறாங்க , ரெண்டு பெண்மணிகள் அவங்க தெருகதை பேசிகிட்டே வந்தாங்க , ஒரேஒரு தின தந்தி பேப்பர் நாலா  பிரிச்சி ஐந்து பேர் படிக்கிறாங்க , இன்னும் இன்னும் பல நிகழுவுகள், ஆனால் எதுக்கும் சம்மந்தம் இல்லாம நான் அமர்திருந்தேன்.

 திருச்செந்தூர் இரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ பிடித்து கோவிலுக்கு சென்றேன். வளர்ச்சி அடையாத ஊர் போலவே  இருந்தது  திருச்செந்தூர். போகும் போது கடல் திடீரென கண்ணுக்கு தெரிந்து மறைந்தது. இளம்பெண் உரசி கடந்தது போன்ற உணர்வு. கடல் பகுதி அல்லாது  நிலப்பரப்பிலிருந்து வரும் என்னை போன்றவனுக்கு பிச்சை எடுத்தாலும் காசுகிடைக்கும் ஆனா சொத்தே வித்தாலும் கடலை பார்க்கும் சுகம்மும் கடல் காற்றின்  இதமும் கிடைக்காது.

காலையில  நல்ல பசி. கோவில் தெருவின் ஆரம்பத்தில் ஒரு ஐயங்கார் ஹோட்டல் இருந்தது. நெய் தோசை சாப்பிட்டேன். என்னப்பா சுவை அடடா.  தோசை எப்படி இருக்கனும் தெரிமா கோபாலு , வெளில மொறு மொறுன்னு தங்க நிறத்தில இருக்கனும் , உள்ள மெதுவா இருக்கனும், ஆனா தொட்டா  ஒடைய கூடாது நம்ம ஐயங்கார் ஹோட்டல் தோசை மாதிரி.

சாப்பிடாம  கோவிலுக்கு போகலாமுன்னு நினைச்சேன் ஆனா பசி கடவுளோட மிகபெரிய ஆயுதம். அதுக்கு முன்னாடி நம்ம கடவுள் பக்தி ரொம்ப சின்னது.

 திருச்செந்தூர் முருகன் கோவில் முழுவதும் எளிமையான மனிதர்கள், கிராமத்து பின்னணி  மனிதர்கள் நிரம்பி இருந்தனர். முருகனும் , கோவிலும் , அதை ஒட்டி உள்ள கடல் அவர்களின் வாழ்வியலோடு இணைந்திருந்தது.
எதாவது ஒரு சினிமாவில் கோயில் பின்னணி கொண்ட கட்சிகளும் , அது அந்த மக்கள் வாழ்வில் பினைந்திருபதையும் காட்டினால் அது எதார்த்தமான தென் தமிழகத்தை பிரதிபளிக்கும்.

மிகபெரிய கோவில். சுசிந்தரம் போலவே வெண்ணிற கோபுரம். கோபுரம் முழுக்க அதே போல மற்றும் அதே சிலைகள். அழகிய மண்டபங்கள் , நடை பாதைகள்.

முருகனை தரிசிக்க இங்கும் சட்டையை கழட்டவேன்டும். நான் போனபோது கூட்டம்  குறைவாக இருந்தது. எளிமையாக தரிசனம் கண்டேன். முருகன் சிலை முழுவதும் திருநீர் பூசி இருந்தார்கள். பரவசத்தில் என்ன வேண்டுவது என்று தெரியவில்லை.

எங்க ஊருக்கு திரும்பியதும் ஒரு நண்பர், திருச்செந்தூர் முருகனை நம்ம ஆசைபட்டால் போகமுடியாது சார் , முருகன் ஆசைபட்டால் தான் நம்ம அங்க போக முடியும் என்றார். நானும் சரி ஏதாவது நல்லது நடந்தால் சரி என நினைத்துகொண்டேன்.

தரிசனம் முடித்து நேராக கடலுக்குத்தான் சென்றேன். 1/2 km கடலினுள் நடந்தே  போகலாம். முதலில் பயமாக இருந்தது போக போக சந்தோசம் தாங்கவில்லை. ஒரு 45 வயதுக்காரர் அவர் மனைவியை சற்று அணைத்தார் போல கடலுக்குள்  அழைத்து சென்றார், அந்த அம்மாவிற்கு ஒரே வெக்கம்.
இளம்தம்பதியர், குழந்தைகள் , குடும்பத்தினர் , பெரியவர்கள் அனைவரும் சந்தோசமாக குளித்துக்கொண்டே இருந்தனர். அலைகள் நம்மை கடக்கும் போது நம் கால்கள் தரையில் இருக்ககூடாது, சற்று எம்பி குதித்தாள் அலைகள் நம்மை கடந்து போவிடும், இல்லையெனில் கிழே விழவேண்டியது தான் . ஒரு மணி நேரம் குளித்துவிட்டு வெளியில் வர மனம் இல்லாமல் கரையிலேயே சிறிதுநேரம் அமர்ந்திருந்தேன்.

மொட்டை அடிக்கும் இடத்தில் ஒரு பெரிய தொட்டியில் நல்லநீர் இருந்தது. அங்கே குளித்துவிட்டு உடைகளை மாற்றிக்கொண்டேன். அங்கிருந்து வெளியில் வரும்போது வழியில் ஒரு கிழவி பதநீர் விற்றுக்கொண்டு இருந்தார். ஒரு கிளாஸ் 6 ரூபாய் , ரெண்ட்டு கிளாஸ் குடித்தேன். போதை ஏறுமா என்று கேட்டேன், கிழவி சிரித்துக்கொண்டே " போதை ஏறுமானா கேக்கிக " ஏறாது ஏறாது என்றார்.  திருச்செந்தூர் சுற்றி பனைமரம் அதிகம் என்பதால் பணம்கர்கண்டு , பணவெல்லாம் விற்கும் கடைகள் அதிகம் உள்ளது.



























மாலை 3.00 மணிக்கு மதுரைக்கு போகும் பேருந்தில் ஏறினேன்.திருச்செந்தூர்லிருந்து  மதுரைக்கு 3 மணி நேரம் ஆகும் என்றார்கள்.
பேருந்து தூத்துக்குடி வழியாக சென்றது. தூதுக்குடியை சுற்றி வறண்ட நிலப்பரப்பு . பசுமை இல்லை. வழியில் உப்பலங்களை பார்த்தேன். தூத்துக்குடி வரை ஒரு வழி சாலை, அங்கிருந்து மதுரைக்கு நான்கு வழி சாலை. பேருந்து மாலை 7 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து அடைந்தது.