
நான் காஃபி அருந்தும் போது சுடுகிறது என்றேன்
இயல்பாய் அதை வாங்கி சூடு தனிய ஊதி கொடுத்தாய்
அப்பொழும் நான் உணரவில்லை
நாம் சாலையில் நடந்த பொழுது தூரத்தில் வரும் வாகனத்தை பார்து
இயல்பாய் என்னை சற்று உள்ணோக்கி இழுதுக்கொண்டாய்
அப்பொழும் நான் உணரவில்லை
ஒரு மழை இரவில் உன் இரண்டு உள்ளங்கைகளையும் தேய்து
வெதுவெதுப்பாய் என் கண்ணங்களிள் வைத்தாயே
அப்பொழும் நான் உணரவில்லை
கோவிலில் நாம் வணங்கும் போது உனக்கான என் வேண்டுதல் முடிந்தபின்னும் எனக்கான
உன் வேண்டுதல் முடிவதே இல்லை
இப்படி எத்தனையோ தருணங்களிள் நான் உணரவில்லை
உன்னை பிரிந்து இருக்கும் இப்போது உணர்கின்றேன்
என்னை இரண்டு உயிர்கள் இயக்குகிறது என்று.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக