"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

புதன், ஜூலை 31, 2013

தென்பயணம் -2 கன்னியாக்குமரி

சுசிந்திரம் கோயில் விட்டு வெளியில் வரும்போது ஒரு பிச்சைகாரன் தனக்கு இருதய நோய் என்றும்  உதவி செய்யும்படியும்  கேட்டான் . அவன் உண்மை சொல்கிறன என்று தெரியவில்லை. ஆனால் என்  பாத்திரம் அறியும் பார்வை அவனுக்கு எதையும்  கொடுக்க வேண்டம் என்றது . என் எண்ணம் புரிந்து அவன் நீயெல்லாம் என்ன படித்தவன் கொஞ்சம் கூட இறக்கம் இல்லை என்று சொன்னவாறே பின்னால் வந்தான். அவனுக்கு பதில் சொல்லகூட தோணவில்லை.

எப்போதுமே கூட்டமாய் வரும் இளயவர்களை  யாரும் அணுகுவது இல்லை. ஆனால் தனியகவரும் இளஞ்சன்  சக்தியற்றவன். எளிமையாக  ஏமாற்றிவிடலாம் அல்லது மிரட்டலாம். 

எங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ளது போல்  அந்த பகுதியில் boiler வைத்து  Tea போடும் வழக்கம் இல்லை போலும். சின்ன சின்ன பாத்திரங்களை  வைத்து ஒருகடையில் பெரியவர் ஒருவர் Tea போட்டு கொடுத்தார். சூடும் சுவையும் சேர்ந்ததே Tea .ஆனால் சூடு மட்டும் இருந்தது. Tea குடித்துவிட்டு கன்னியாக்குமரி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

கோழி  குழம்பில் leg pieceம் பஸ்சில் ஜன்னல் ஓர சீட்டும் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றுதானே. எல்லா பிரயாணத்திலும் ஜன்னல் ஓர சீட்டு கிடக்கும் பேருந்திலே ஏறினேன்.

எல்லா சுற்றுலா  தளத்திற்கும் அரிதாரம் பூசப்பட்டது போல் ஒரு  உணர்வு  எனக்கு உண்டு.

அங்கேயே வாழ்பவர்களுக்கு அது தெரிவது இல்லை. வெளியிலிருந்து வருபவர்களுக்கு அது மட்டுமே தெரிகிறது. அதுதான் ஒரு சுற்றுல தளத்தின் வெற்றியும் கூட.

கன்னியாக்குமரி அடைந்த போது மதியம் ஒரு மணி இருக்கும் பசித்தது.
படகு துறைக்கு செல்லும் வழியில் ஒரு ஹோட்டலுக்கு சென்றேன். வடவர் அதிகம் கன்னியாக்குமரிக்கு வருவதால் உணவு வகைகளும் அவர்களுக்கு ஏற்றார் போல இருந்தது. ஒரு தாளி  ( ஹிந்தியில் ஒரு தட்டு ) 70 ரூபாய். கொஞ்சம் சோறு 10 சின்ன சின்ன கப்பில் சகலமும்.

சாப்பிட்டு படகுத்துறைக்கு சென்றேன். படகு கட்டணம் 50 ரூபாய் . சிறப்பு கட்டணம் 160 ரூபாய். கூட்டம் அதிகம் வரும் நேரங்களில் சிறப்பு கட்டணம் வழியாக செல்லலாம் போல. நான் செல்லும் போது கூட்டம் இல்லை. வடவர் மட்டும் கணிசமாக வந்தனர். சில உள்ளூர் வாசிகள் அவர்கள் சொந்தகளை அழைத்து வந்திருந்தனர்.

படகுவர சிறிது நேரம் ஆனது. சிறிது தூரம் எதற்கு படகு, பாலம் கட்டிவிடலமே என தோன்றியது. 

ஆனால் படகில் செல்லும்போது அந்த எண்ணம் முற்றிலும் மறைந்தது.

அது ஒரு தாலாட்டு அனுபவம். 

அரசு உழியர்கள் நீலநிற உடையில் பயணிகளை வழி நடத்துகிறார்கள்.ஏற முடியாதவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.

ஏறியவுடன் அனிச்சையாக பயம் வந்தாலும் சிறிது நேரத்தில் குதுகலம் வந்துவிடுகிறது. காற்று வீசும் லாவகம் பறவை அறிந்து பறப்பது போல கடல் அலை லாவகம் அறிந்து படகை செலுத்தி சரியான இடத்தில் நிறுத்தியது அழகாக இருந்தது.

கல்லூரி படிக்கும் போது விவேகனந்தர் மேல் அதிக பற்று இருந்தது. அவர் சொன்ன கருத்துகள் அடங்கிய புத்தகங்கள் அனைத்தும் படித்திருக்கிறேன்.
தனிமனித ஒழுக்கமும் , மக்கள் சேவையும் முன்னிறுத்துகிறது அவரது கருத்துகள். அவர் இந்தியாவின் தலை கோடியிலிருந்து பரதேசியாய் திரிந்து திரிந்து இறுதியாக கடைகோடி கன்னியாகுமரி வந்தார். 

நான் படகில் செல்லும் போது அவர் ஆர்பரிக்கும்  கடல் அலையில் குதித்து அந்த பாறையில் மூன்று நாள் இந்தியாவை நோக்கி தவம் இருந்திருந்ததை நினைத்துகொண்டேன். சிலிர்ப்பாக இருந்தது .































வெய்யில் அடித்தாலும் சில்லென கடல் காற்று சுகமாக இருந்தது.
திருவள்ளுவர் சிலையை வெகு நேரம் பார்த்துகொண்டிருந்தேன். எத்தனை மனித உழைப்பு நேர்த்தியான வடிவம் , பிரமிப்பாக இருந்தது. மாலை நான்கு மணி வரை அங்கு இருந்துவிட்டு மீண்டும் கரைக்கு வந்தேன்.

அரபி , இந்திய பெருங்கடல் வங்கள விரிகுடா  மூன்று  கடலும் கலக்கும் இடம்  முக்கூடல். அங்கு கடல் அலை ஆர்பரித்து பறையில் மோதிக்கொண்டே இருக்கிறது. அலை மோதும் ஓசை, மனதை துள்ளச்செய்யும் இசை. அலையோடு  சிறிது நேரம் இருந்துவிட்டு கரைக்கு வந்தேன் .

வங்கள விரிகுடா பெயர் தமிழக விரிகுடா என மாற்ற கோரி இன்னும் ஏன் நம் அரசியல்வாதிகள் போராடவில்லை என தோன்றியது.


கன்னியாகுமரி அம்மன் கோயிவில் சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது. ஆனால் உள்ளே போக சட்டையை கழடிவிட்டுதான் போகவேண்டும். யார் இந்த பழக்கம் எல்லாம் கொண்டுவந்தது என்று தெரியவில்லை. கூச்சம்மாகவும் நெளியவும் வைக்கிறது. சிறிய அழகிய கன்னியாகுமரி அம்மன் சிலை பார்க்கும் போதே பக்தி கொள்ளச்செய்கிறது.

மலை 5.30 மணி இருக்கும் திருநெல்வேலி செல்லலாம் என ரயில் நிலையம் வந்தேன். 6.00 மணிக்கு ஒரு passenger திருநெல்வேலி செல்ல தயாராக இருந்தது. கூடம் இல்லை நான் சென்று அமர்ந்ததும் வண்டி கிளம்பி விட்டது.

களைப்பில் அப்படியே தூங்கிவிட்டேன். திருநெல்வேலிக்கு 8.30 சென்று சேர்ந்தது. ரயிலில் ஒரு நபர் பழக்கம் ஆனார். அவர் சென்னையில் தினத்தந்தியில் வேலை பார்த்துவிட்டு இரண்டு வருடம் முன் திருநெல்வேலிக்கு மாற்றல் ஆகி வந்திருக்கிறார். அன்று இரவு தங்குவதற்கு நல்ல விடுதியும் அல்வா எந்த கடையில் வாங்க வேண்டும் என சொல்லிவிட்டு பிரிந்தார்.

ரயில் நிலையம் விட்டு வெளியில் வந்தால் ஒரு main ரோடு வருகிறது. அதன் வலது புறம் சாந்தி அல்வா கடை உள்ளது. கடை மிகவும் சிறியது ஆனால் 24 மணிநேர சேவை மற்றும் கூட்டமும் குறைவில்லாமல் இருந்தது. கிலோ 120 ரூபாய் தான். முதலில் 100g  வாங்கி சாப்பிட்டேன் இளம் சூடு நல்ல சுவை. மேலும் ஒரு 100g வங்கி சாப்பிட்டேன். அதே வரிசையில் சாந்தி பெயரில் நிறைய கடைகள் இருக்கின்றன ஆனால் கூட்டம் இல்லை.


எனக்கு  தெரிந்தது எல்லாம் சுற்றுலா தளங்களில் அங்காங்கே நின்று புகைப்படம் எடுப்பது மட்டுமே. அதையும் தாண்டி வேறேதும் தெரிவதில்லை. ஆனால் இந்த பயணத்தில் அந்தந்த ஊரில் உள்ள  மக்களையும் அவர்களின் மொழியும்  கவனிக்க தோன்றியது. எல்லா பெரிய ஊரிலும்  ஒரு கிராம தன்மை உள்ளதை உணர்ந்தேன்.  திருநெல்வேலியும் அதேபோலத்தான்.















சனி, ஜூலை 27, 2013

தென் பயணம்-1 - சுசிந்திரம் கோயில்

எங்காவது தொலைந்து போக ஆசை வந்தது. தொலைவது என்றால் வழக்கமான என்  வேலைகள் மற்றும் நினைவுகளிலிருந்து, பார்க்கும் மனிதர்களிலிருந்து.

நம் முடிவுகளிலில் யார் குறுக்கிடும் இல்லாமல் , முடிவுகளின் விளைவுகளை   
அனுபவிக்க  வேண்டும்.

தனிமை பயணம் அதற்கான  ஒரு வழி.

ஜூன் மாதம் இறுதியில் திருவனந்தபுரத்துக்கு செல்லும் இரயிலில் வாணியம்பாடி இரயில் நிலையத்தில் ஏறினேன்.

இரயில் செல்ல செல்ல மனம் இருக்கத்திலிருந்து வழிந்து, தொலைந்து போவதில் கரையத்துவங்கியது.

அதிகாலை இரயில் கேரள மாநிலம்  கொல்லத்தில் நின்றிருந்தபோது விழித்தேன்.

மழை ,பசுமை , குளிர் காற்று, ஈரம், பெண்கள். 

அங்கேயே இறங்கிவிடலாம் என யோசித்தேன்.

இலக்கு கணியகுமரியாக இருந்தது.

கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம்வரையில் மழை, பசுமை ,நீர்,  குளிர் காற்று, ஈரம் ,பெண்கள்.



















இவ்வளவு அழகான ஊரை விட்டு வந்து எங்கு சவுதியில்  வெட்டவெளியில் போட்டால் மணலில் வேலை பார்க்கும் கேரளா நண்பர்களை பார்த்தல் கஷ்டமாதான் இருக்கு.

திருவனந்தபுரத்தில் இறங்கி குளித்துவிட்டு காலை  உணவும் முடித்து விட்டு நாகர்கோயில் பேருந்தில் ஏறினேன்.

இரயில் நிலையத்தின் எதிர் புறம் அணைத்து பேருந்துகளும் நிற்கின்றன.

பத்து நிமிட பயணத்தில் ஊருக்கு வெளியே வந்துவிட்டது பேருந்து.

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோயில் வரை கேரளா மணம். மேடு பள்ளம், தனித்தனி வீடுகள் பசுமை எல்லாமே.

நாகர்கோயில் கூட கேரளம் போலவே உள்ளது. இங்கு பேசும் தமிழ் மலையாளம் போலவே உள்ளது.

நாகர்கோயில் சென்று சுசிந்திரம் கோயிலுக்கு சென்றேன்.

சுசிந்திரம் கோயில் நாகர்கோயில் கன்னியாகுமரி சாலையில் 8km தெலைவில்
 உள்ளது .

சிவன் பிரமன் விஷ்ணு  மூவருக்கான  கோயில்.

கோயில் முகப்பிலேயே அழகிய தெப்பகுளம்  உள்ளது .















வெண்ணிற  கோபுரம் அதில் எண்ணற்ற சிலைகள். இந்த சிலைகள் யார் மனதில் தோன்றியது எப்படி வடிவம் பெற்றது, அளவுகள் என்ன என்று நினைக்கும்போதே பிரமிப்பு.

ஒவ்வொரு சிலையும் ஒரு தெய்வம். அதன் பின்னணியில் ஒரு கதை இருக்கும்.

ஒவ்வொரு சிலையும் ஒரு கச்சிதமான அளவில் செதுக்கப்பட்டு மொத்த கோபுரமும் நிர்மானிகப்பட்டுள்ளது.

























இந்த கோயில் கேரளாவிடம் இருந்தது பின்பு தமிழகத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால் கேரளா நம்புதிரிகளே பூஜை செய்கிறார்கள்.

தமிழகத்தில் கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பது வருத்தம் தான்.
ஆனால் கலை ரசனையை  நாம் வாழ்வில் எந்த பகுதியிலும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.