கர்னாடக மாநிலத்தின் கடைக்கோடி மங்களூர். இந்த வருட விடுமுறைக்கு அங்கு வேலை செய்யும் அண்ணன் ( சகளை) வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். காலை மூன்று மணிக்கு மங்களூர் இரயில் நிலையத்தில் இறங்கினோம். நாங்கள் சென்ற வேளை மழைக்காலம். இரயில் நிலையத்திலிருந்து வெளியில் வரும் போதே மழை பெய்து கொண்டு தான் இருந்தது. ஆட்டோவை அழைத்தேன், ஆட்டோவில் அண்ணன் தங்கி இருந்த Quarters க்கு பகலில் 100 ரூபாய், இரவில்150 ரூபாய் மழையோடு இரவு என்றால் 200 ரூபாய். வழியெல்லாம் அடர்ந்த மரங்கள், அடர்ந்த மழையும் கூட, பயமாக இருந்தது. ஆட்டோ டிரைவர் மலையாளம் பேசினார். இங்கு முதல் மொழி துளு . இந்த மொழியில் பாதிக்கும் மேல் தமிழ் வார்த்தைகள். சற்று உற்று கவனித்தால் மொழி புரிகிறது. இரண்டாம் மொழி கன்னடம் , மலையாளமும் உண்டு . இங்கிருந்து கேரளம் 30 km தான். அரை மணிநேர மேடு பள்ள இரங்கலுக்கு பின் வீடுவந்து அடைந்தோம். அந்த இடத்தின் பெயர் குஞ்சன்ஜங்கா.
மழை பெய்துகொண்டே இருந்தது . நள்ளிரவுக்கு பின் பெய்யும் மழையின் சப்தம் தனித்துவம் வாயிந்தது. அதனோடு எந்த ஒலியும் கலப்பது இல்லை இடியின் ஓசையை தவிர.
ஒரு டீ அருந்தியபின் அனைவரும் படுக்க சென்றோம்.
காலை 11.00 மணிக்கு எழுந்தேன். என்னை தவிர அனைவரும் எழுந்து விட்டிருந்தனர். நான் குளித்து காலை உணவு அருந்திவிட்டு வீட்டில்லிருந்து வெளியில் வந்தேன். இரவு மழையாள் தண்ணிர் எங்கும் தேங்கி நிற்கவில்லை. பசுமை மணமும் மண்ணின் ஈர வாசனையும் என்னோடு ஒரு நண்பன் போல நடக்க துவங்கியது . மேடு ஏறி இறங்கியபின் தான் தெரிந்தது மங்களூர் முழுவதுமே ஒரு மலை மேல் இருக்கிறது என்று.
சாலையின் இரு புறமும் வேர் போல கொடி வழிகள் பிரிகின்றன. அந்த வழியில் இறங்கி சென்றாள் இருபுறமும் வீடுகள். வீடுகள் என்றால் சிறிய வீ டுகள் அல்ல, எல்லாம் பெரிய பெரிய வீடுகள். ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பலா மரங்கள், தென்னை மரங்கள் , பாக்கு மரங்கள் , பூஞ்செடிகள் என அழகிய தோட்டம். எல்லாம் நாம் கனவு காணும் வீடுகள்.
சற்று தூரம் நடந்தபின் தொலைவில் ஒரு ஆறு ஓடுவதை கண்டேன். பசும் இலைக்கு நடுவே ஒரு நரம்பு போல.
அது நேத்ரா ஆறு என்றும் மங்களுர்க்கான வற்றாத ஜீவ ஆன்மா எனவும் பின்பு தெரிந்தது.
மழை நீர் அனைத்தையும் திரட்டிக்கொண்டு இரண்டு மலைகளுக்கு நடுவில் ஒரு பெரும் படை நடந்து செல்வது போல இருந்தது அந்த நதி. அதை அருகில் சென்று பார்க்க வேண்டும் போல் இருந்தது.
அதை தாண்டி விமானநிலையம் தெரிந்தது. போன வருடம் 200க்கும் அதிகமான பயணிகள் விமான விபத்தில் இறந்தது இந்த விமான நிலையத்தில் தான்.
இந்த மலைகளுக்கு அப்பால் அரபிக்கடல் இருக்கிறது. இப்படி நதி, பசுமையான மலைகள், கடல் மூன்றும் சூழ இருக்கும் ஊரை இப்போது தான் பார்க்கிறேன் .
அன்று மாலை நேத்ரா நதியை காணலாம் என கிளம்பினோம். பொது வழியிலிருந்து ஒரு கிளை வழி பிடித்து நடந்து சென்றோம். வழி கீழ் நோக்கி சென்றது. வழி எங்கும் மரங்கள், வித வித மான மரங்கள். இன்றைய சிறுவர்களிடம் பத்து கார்களின் பெயர்களை கேட்டாள் உடனே பதில் கிடைக்கும் ஆனால் பத்து மரங்களின் பெயர்களை கேட்டாள் தெரியாது என ஒரு எழுத்தாளர் கூரியது ஞாபகம் வந்தது. ஏனெனில் நானும் அந்த நிலையில் தான் இருந்தேன்.
ஆற்றை அடைந்தோம். மழை காலம் என்பதால் ஆறு முழுவதும் கலங்கிய நீர் அடங்க முடியாது என பாய்ந்தோடியது. ஆரின் அக்கரையிளிருந்து ஒரு பறவையின் ஒலி அழுத்தமாக கேட்டுக்கொண்டே இருந்தது. என் camera வழியே தேடியதில் ஒரு பருந்து ஒலி எழுப்புவதை கண்டேன். இந்த ஒலியை முதல் முறை கேட்கிறேன். பருந்தையும் அந்த ஒலியையும் சேர்த்து புகைப்படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.
சற்று தொலைவில் சிலர் ஆற்றில் நீருக்கு அடியிலிருந்து மணலை எடுத்து படகுகளில் சேகரித்துக்கொண்டு இருந்தார்கள். கரையில் ஒரு மண் லாரி நின்றுக்கொண்டு இருந்தது. மணலை படகில் சேகரித்து லாரியில் நிரப்புகிறார்கள். மரங்களுக்கு வேர் போல ஆற்றுக்கு மணல். ஆறின் வேர்களை வேட்டிகொண்டு இருப்பதுபோல தோன்றியது. பெட்ரோலுக்கு மாற்று கண்டுபிடிப்பது போல மணலுக்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டும்.
அங்கேயே சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். பின்பு வீடு திரும்பினோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக