தனுஷ்கோடி ஒரு அழிந்த சிறு நகரம். அந்த அழிவைபற்றி படித்த போது அந்த இடத்தை பார்க்க வேண்டுமென்று மனதில் ஏதோ
ஒரு மௌனமான ஆவல் எழுந்தது. மேப்பில் பார்க்கும் போது இலங்கையையும் பாரதத்தையும் இனைத்த நிலப்பரப்பில்
கடல் நீர் தயங்கி தயங்கி உட்புகுந்து பிரித்திருந்தது.

அங்கு போக இராமேஷ்வரத்தில் விசாரித்த போது ஒரு ஜீப் 2000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்க வேண்டும் என்று விடுதி காப்பாளன் சொன்னான். வேறு வழி இல்லை என்றான்.சற்று தூரம் சாலையில் நடந்து போனபோது தனுஷ்கோடி என்ற பெயர் பலகையொடு பேருந்து ஒன்று வந்தது. கொஞ்சம் குழப்பமாகவே அதில் ஏறி அமர்ந்து கொண்டேன்.
என் அருகில் அமர்ந்தவர் உள்ளூர்காரர். அவரிடம் விசாரித்ததில் பேருந்து ஒரு எல்லை வரை செல்லும். அதன் பின் அங்கே வாடகை வண்டிகள் இருக்கும் அதில் போனால் தனுஷ்கோடியின் அழிந்த பகுதிகளை பார்க்கலாம் என்றார். அவர் பேசிய அந்த வட்டார தமிழ் எனக்கு பாதிக்கும் மேல் புரியவில்லை. புரிந்தது போல் அவர் முன் நடிக்க நடிக்க எனக்கு சிரிப்பு வந்தது.எப்படி பேசினாலும் அழகாய் இருப்பது தமிழ் மட்டுமே.
இராமேஷ்வரம் பகுதியில் முக்கிய தொழில் மீன் பிடித்தல். கோவிலில்லிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி வந்தாலே மீனவர்களின் வீடுகள், மீன் பிடி சாதன கடைகள் என வர துவங்கிவிடுகிறது. இராமேஷ்வரத்திலிருந்து 20 கீ.மீ தூரத்தில் தனுஷ்கோடி உள்ளது. வழியில் சிறு சிறு மீனவகிராமங்கள் வந்துகொண்டே இருந்தன. பனவோலை குடிசைகள் அதை சுற்றி பனமட்டை சேர்த்து அடுக்கப்பட்ட சுற்றுச்சுவர், அந்த வீடுகளை சுற்றி சிறு சிறு மணல் மேடுகள் என புதிய நிலப்பரப்பாக இருந்தது. சில இடங்களில் சவுக்கு மர காடுகள் அடர்ந்து இருந்தது. தனுஷ்கோடி ஒரு பெரிய மீனவ கிராமமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் பேருந்து ஒரு கடற்க்கரை ஒட்டிய பகுதியில் நின்றது. அந்த பகுதிக்கு மூன்றாம் சத்திரம் என்று பெயர். அதுவரை மட்டுமே பேருந்து செல்லும். அங்கு சிறிய சிறிய ஓலை குடிசைகள் மற்றும் கடைகள் இருந்தன.

அதை ஒட்டி கடற்கரை. கடற்கரையில் மணல்வெளியில் கால்களை நீட்டி அமர்ந்துகொண்டேன். சற்று கண்களை மூடிய போது காற்றின் ஓசை, அலைகளின் ஓசை, பறவைகளின் ஓசை எல்லாம் கலந்து ஓசைகள் மட்டுமேயான ஒரு உலகை கேட்க முடிந்தது.
அங்கிருந்து தனுஷ்கோடியின் அழிந்த பகுதிகளுக்கு அழைத்து செல்ல வேன்கள் உள்ளன. வேன் ஒன்றுக்கு 2000 ரூபாய்.அது ஒரு குடும்பமாகவோ அல்லது குழுவாகவோ அல்லது தனி தனி நபர்களாகவோ சேர்ந்து அதை வாடகைக்கு அமர்திக்கொள்ளலாம்.அதை தவிர ஜீப்புகள் வாடகைக்கு கிடைக்கிறது. அங்கு வந்த சில பயனிகளோடு சேர்ந்துக்கொண்டு ஒரு வேனில் அழிந்த பகுதிக்கு பயனித்தேன். வண்டியை ஓட்டியவர் ஒரு மீனவரை போல இருந்தார். வேனையும் படகு போலவே ஓட்டினார். மணல் வழி தடத்திளும் , தேங்கிய நீர் வழியாகவும் வண்டி அசைந்து அசைந்து நகர்ந்து கொண்டே இருந்தது. 8 கீ. மீ ஒரு மணி நேர பயணத்துக்கு பின் அந்த இடம் வந்தது.

ஒரு காலத்தில் தனுஷ்கோடி இருந்த இடம்.அமைதியான வங்கக்கடலை ஆக்ரோஷமான அரபிக்கடல் தழுவி தழுவி களித்தது. கடல் முன் ஒரு சாமான்னிய மனிதன் என்ன செய்ய முடியும். நான் அதை வெருமனே பார்த்துக்கொண்டு இருந்தேன். கடலோடு பேசவும் பழகவும் அதன் மொழி தெரிந்திருக்க வேண்டும். நமக்கு புரிந்த அதன் ஒரே சொல் அலை மட்டுமே.
சில வடவர் கடல் நீரை எடுத்து தீர்த்தம் போல தலையில் தெளித்துக்கொண்டனர். சிறுவர்கள் புகைப்படம் எடுத்துகொண்டனர். சிலர் அந்த கடல் சூழ் மணல் வெளியில் என்ன செய்வது என்று தெரியாமல் வெருமனே நின்று கொண்டு இருந்தனர். மழையில் நனைந்தால் மழை நீர் நம்மீது வழிந்தோடுவது போல வெயில் என் மீது வழிந்தோடியது. தூரத்தில் மனபிரழ்வான ஒரு பெண்மனி கடலை நோக்கி எதோ பேசிக்கொண்டு இருந்தார். அங்கிருந்து அருகில் இருந்த தனுஷ்கோடியின் இடிபாடுகளை கான சென்றோம். அந்த பகுதி முழுவதும் முட்புதர்கள் மண்டிக்கிடகிறது. சிதிலமடைந்த கட்டிடங்கள் ஏன் நிற்கிறோம் என்று அறியாமல் பரிதாபமாக நிற்கின்றன. அழிவுக்கு முன் இந்த இடம் ஒரு முக்கிய நகரமாக முக்கிய போக்குவரத்து துரைமுகமாக விளங்கியது. 1964 டிசம்பர் 23 ஆம் தேதி ஏற்பட்ட புயலில் இந்த பகுதியில் இருந்த 2000 க்கும் மேற்பட்டோர் இறந்துபோயினர். அதன்பின் இந்த இடம் கைவிடப்பட்டது. 200 மீனவக்குடும்பங்கள் இப்போது இந்த பகுதியில் இருக்கிறது. அவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. சுற்றுலா பயனிகள் அதிகம் வந்தாளும் அவர்களுக்கு அந்த இடத்தை பற்றி அறிந்துகொள்ள ஒரு அருங்காட்சியகமோ அல்லது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒரு நினைவிடமோ இல்லை. அந்த வெருமையான நிலபரப்பு மனதிலும் வெருமையயும் ஆழ்ந்த மௌனத்தையும் ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக