நண்பர்களே,
கடந்த ஒரு வருடங்களாக எனக்கு தலையின் முன் பகுதியில் , பொடுகு போல வெள்ளை செதில்கள் உருவாகி அரித்துக்கொண்டே இருந்தது. பல மருத்துவர்களிடம் வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. பெரும்பாலும் அவர்கள் தலையில் தடவிக்கொள்ள கிரீமை தந்தார்கள். அதை தடவிய சில நாட்கள் வராமல் இருக்கும், ஆனால் சில நாட்களில் மறுபடியும் வந்துவிடும். அவதியாக இருந்தது.
பின் CMC Vellore மருத்துவமனையின் கிளை நிறுவனமான கரிகிரி மருத்துவமனையின் மருத்துவர்கள் வாரம் இரு முறை குடியாத்தம் நகருக்கு வருவார்கள். அவர்களிடம் நான் சிகிழ்ச்சை எடுத்துக்கொண்டேன். மருத்துவர்கள் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் அங்கு வருகிறார்கள் . காலை ஐந்து மணிமுதல் வரிசை எண் அளிக்கப்படுகிறது . 9 மணிக்கு சிகிழ்ச்சை துவங்குகிறது. அவர்கள் கொடுக்கும் மருந்து பிரத்தியோகமானது. வெளியில் கிடைக்காது.
அவர்கள் எனக்கு ஒரு மாதத்துக்கு மாத்திரைகளையும் களிம்பையும் கொடுத்தார்கள். எனக்கு 20 நாட்களில் சரியாகிவிட்டது. அதன் பின் வரவேயில்லை.
உங்களுக்கும் ஏதாவது தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ( All Skin dices) இருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
http://www.karigiri.org/page/dermatology/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக