சுவை அறிதல் என்றால் உயிர் அறிதல் எனலாம்.
சுவை ஒரு உணர்வு அதை உணர்தல்
மனிதனின் தனித்தன்மை.
என்று ஆதி மனிதன் உணவை தீயில் சுட கற்றுக்கொண்டானோ
அன்றிலிருந்து சுவையின் மீதான அவன் விருப்பம் துவங்கிவிட்டது.
அடிப்படை சுவைகள்
இனிப்பு, துவர்ப்பு, கசப்பு,காரம், உவர்ப்பு. புளிப்பு இந்த ஆறு சுவைகளை கொண்டு இன்று
கணக்கில்லா உணவுகள் படைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
சமைப்பவர்
அனைவருக்கும் சுவை கைகூடுவது இல்லை.
தனியாத ஈடுபாடு , நுண்ணுனர்வு கொண்டு
சமைப்பவர்கள் கைகளில் அது தவழ்கிறது.
சமைத்து சமைத்தே அந்த நுண்ணுரவை அவர்கள்
அடைகிறார்கள்.
என் மனைவின் வீடு வானியம்பாடியில் இருக்கிறது. ஒரு விசேஷ
நாளில் பாய் ஒருவரை பிரியானி செய்ய அழைத்திருந்தோம். முன்பே அவருக்கு தேவையான
பொருட்களின் பட்டியலையும் அவை எங்கு வாங்க வேண்டும் என்ற விவரத்தைவும்
எழுதிருந்தார். பொருட்களை அவரிடம் அளித்த போது ஒவ்வொன்றாக எடுத்து அதன் தரத்தை
பார்த்தார். ஆட்டுக்கறியில் முக்கியமான துண்டுகளை மட்டும் அவர் பொருக்கி
எடுத்துக்கொண்டார். சமையலுக்கு வைத்திருந்த தண்ணிரையும் சுவைத்து பார்த்தார்.
அடுப்பை மூட்டி அவர் கொண்டுவந்த பாத்திரத்தில் நீர் ஊற்றி சமைக்கத்துவங்கினார்.
புளியமர விறகைத்தவிர அவர் வேரு எந்த விரகையும் பயன்படுத்தவே இல்லை. யாரிடமும் அவர்
அதிகம் பேசவும் இல்லை. பொருட்களை ஒவ்வொன்றாக அவர் எடுக்கும் போதும் அதன் அளவை
அவர் கண்கள் பார்க்கவே இல்லை. அவர் மனம் அதை பார்க்கிறது என்று எண்ணிக்கொண்டேன்.
அதுவரை அவர் எதையும் எடுத்து சுவைத்து பார்க்கவே இல்லை. ஒரு கட்டத்தில்
பிரியானியின் மனம் எழுந்து வந்தது. எனக்கு உள்ளுக்குள் சந்தோஷம் பொங்கியது. அவர்
அந்த மணத்தை வைத்து புளிப்பு குறைவாக உள்ளது, தக்காளி சேர்க்க வேண்டும் இஞ்சி
பூண்டு பச்சை மனம் போகவேண்டும் என்றார். எதையும் சுவைக்கமலே எப்படி சொல்ல
முடிகிறது என்றேன். அவர் நான் காலையில் சாப்பிடவில்லை. பசி இருக்கும் போது மனத்தை
வைத்தே அனைத்தையும் கண்டுபிடுத்துவிடலாம். பசி அடங்கிவிட்டால் அது முடியாது
என்றார். எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. அபொழுதான் எனக்கு புரிந்தது சமைப்பது ஒரு
தியானம். சுவை ஒரு ஞனம் என்று. இருதிவரை அவர் அந்த பிரியானியை சுவைக்கவே இல்லை. அது
போல ஒரு பிரியானியை இதுவரை நான் சுவைத்ததுமில்லை.
என் மனைவியிடம் நீ
இதுவரை சாப்பிடதில் மிக சுவையான உணவு எது என்று கேட்டேன். ஒரு டீ என்றார்.
மனைவி , ஒரு காலை வேலையில் வானியம்பாடிக்கு ரயிலில் வந்துக்கொண்டு
இருந்தேன். தீடீரென இருள் சூழ்ந்து மழைவரத்துவங்கியாது. மெல்லிய குளிர்காற்று என்
மனதில் புகுந்து அழகான நினைவுகளோடு பேசிக்கொண்டு இருந்தது. நான் மழையை
பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒருவன் டீ டீ என்று கத்திக்கொண்டு
வந்தான்.அவன் என்னை கடந்துவிட்டான் ஆனால் என் மனம் அவன் பின்னால் சென்று அவனை
அழத்து வந்தது. அவன் ஒரு புன்னகையொடு அந்த டீயை எனக்கு கொடுத்துவிட்டு சென்றான்.
இரயில் இருக்கையில் ஜன்னல் ஓரமாக ஒடுங்கி அமர்ந்து அந்த டீயை பருகத்துவங்கினேன். கத
கதப்பான வெம்மையை என் கைகள் உணர்ந்தன. டீயின் மனத்தை நாசி உணர்ந்தது. மெல்லிய
கசப்போடு ஏலக்கை சுவையும் டீயின் சுவையும் என் நா உணர்ந்தது. மழையின் குளிரும்
அந்த டீயின் வெம்மையும் ஒன்று சேர்ந்து என்னை ஆட்கொண்ட தருனம் வாழ்வில் மறக்க
முடியாத அனுபவம் என்று கூறி முடித்தார்.
சுவை என்பது ஒரு அழகியல்.
மனதிற்கினிய சூழல் அதை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றுகிறது. இது போன்ற தருணங்களில் உணவில் உறையும் வெம்மையும், குளிர்ச்சியும் கூட நாம் சுவையாக உணர்வோம்.
வீட்டில்
பெண்கள் தன் அன்பை, காதலை மிக சுவையான உணவை நமக்கு பரிமாறுவதன் மூலம் பகிர்ந்து
கொள்கிறார்கள் என்பது என் எண்ணம்.
எந்த உணவாக இருந்தாளும் மூன்று
கவளங்கலுக்கு மேல் எனக்கு சுவை தெரியாது. டிவி பார்த்துக்கொண்டு தான் நான்
உணவருந்துவேன். சுவையை பற்றி சிந்தித்த கடந்த சில நாட்களாக சமைப்பது மட்டும் கலை
அல்ல, சுவைப்பதும் ஒரு கலை என்று அறிகிறேன். என்னை கொஞ்ச கொஞ்சமாக மாற்றிக்கொள்ள
முயல்கிறேன்.
அடுப்பிலெரியும் நெருப்பில் அமர்ந்திருக்கறது பேருருளி இப்பூமி. அது சமைத்துவெளித்தள்ளும் உணவை உண்ணும் உணவே உடலாகிறது . பசி என்பது உணவுக்காக உணவு கொள்ளும் வேட்கை. சுவை என்பது உணவை உணவு கண்டுகொள்ளும் உவகை. நிறைவென்பது உணவு உணவாகும் தருணம்.வளர்வதென்பது உணவு உணவில் படர்ந்தேறும் நீட்சி. இறப்பென்பது உணவிடம் உணவு தோற்கும் கணம். உணவின் சுவையே உலகமாகும் . - வென்முரசு நாவல் ( ஜெயமோகன் - மாகாபாரதம் )
அடுப்பிலெரியும் நெருப்பில் அமர்ந்திருக்கறது பேருருளி இப்பூமி. அது சமைத்துவெளித்தள்ளும் உணவை உண்ணும் உணவே உடலாகிறது . பசி என்பது உணவுக்காக உணவு கொள்ளும் வேட்கை. சுவை என்பது உணவை உணவு கண்டுகொள்ளும் உவகை. நிறைவென்பது உணவு உணவாகும் தருணம்.வளர்வதென்பது உணவு உணவில் படர்ந்தேறும் நீட்சி. இறப்பென்பது உணவிடம் உணவு தோற்கும் கணம். உணவின் சுவையே உலகமாகும் . - வென்முரசு நாவல் ( ஜெயமோகன் - மாகாபாரதம் )
சுவைப்போம் வாழ்வை சுவையாக்குவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக