"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

செவ்வாய், ஜூன் 28, 2016

மனிதம்


நேற்று இரவு மனம் கனத்துக்கொண்டே இருந்தது. இரண்டு காரணங்கள் ஒன்று சுவாதி மற்றோருவர் வேணு பிரியா.

கண்முன் ஒரு கொலை நடக்கும் போது நீ என்ன செய்வாய் ?

இது தான் என்மனதில் ஓடிக்கொண்டு இருந்த கேள்வி. கடைசி வரையில் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

சமீபத்தில் " இறைவி " படம் பார்த்தேன். ஜெகன் மைக்களை பார்த்து சொல்லுவான் இனி உன் பொண்டாட்டிய ஒழுங்கா ஒழுங்கா பாத்துக்குற புரியுதா என்று. மைக்கல் அருகில் இருந்த விளக்கை எடுத்து ஜெகன் மண்டையை பிளப்பான். எனக்கு தெரியாதா என் பொண்டாட்டிய எப்படி பார்த்துக்கனுன்னு என்று  வெறியோடு கேட்ப்பான்.

ஒரு பெண்ணின் மீது ஒரு ஆணுக்கு இருக்கும் உரிமை. அதை சார்ந்து எழும் ஆதி உணர்வு, ஆதி மனிதனின் உணர்வு , மிருக உணர்வு பெரும்பாலும் எல்லா ஆண் மனதிலும் எழுகிறது. அதன் மேல்  நாம் நாகரிகம் பண்பாடு , மதம்  என்று எத்தனை நீர் போர்வைகளை போர்த்தி வைத்தாலும்  காற்றுக்குமிழியென அது மேலெழும்புகிறது. எனக்கு தெரிந்து பெண்ணை சார்ந்து அல்லது பெண்ணின் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு இது தான் முக்கிய காரணம்.

சுவாதியின் கொலைக்கு காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அவர் அடைந்த மரண வலியை நினைக்கும் போது மனம் தகிக்கிறது.

நேற்று திரு நீலகண்டன் அவர்களின் இந்த நிகழ்வை பற்றிய ஒரு கட்டுரையை வாசித்தேன். மனம் கொஞ்சம் ஆறுதல் அடைந்தது.

http://www.dinamani.com/junction/arithalin-ellaiyil/2016/06/27/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/article3502462.ece

மற்றோன்று சமூகத்தால் நடத்தப்பட்ட வேணு ப்ரியாவின் கொலை.

தன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் கீழ்மை படுத்தி  வெளியானதை எதிர்த்தது புகார் கொடுக்க சென்றவரை காவல் துறை அலைக்கழித்தது. லஞ்சம் கேட்டது. வாழ்தலில் நம்பிக்கை இழந்து உயிர் துறந்துவிட்டார். 

பெற்றோரும் உறவினர்களும் கலந்துகொண்ட போராட்டத்தில் சமூக ஆர்வலர் திரு. மனுஷ் மற்றும் சேலம் மக்கள் அமைப்பும் கலந்துகொண்டது.

உதவி ஆய்வாளர் வந்து மன்னிப்பு கேட்டு இருக்கிறார் மற்றும் காவலர்களின் மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து இருக்கிறார்.

இந்த விடுமுறையில் நான் சந்திக்க விரும்பும் முக்கியமான நபர் திரு . மனுஷ் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துக்கள்.


செவ்வாய், ஜூன் 14, 2016

" பெருவலி "



திரு. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய அறம் சிறுகதை தொகுப்பிலிருந்து " பெருவலி "

வாசிப்பது - கிராமத்தான்.

வியாழன், ஜூன் 09, 2016

மகன் வயது 4


மொழி

அவன் பாலர் பள்ளியில் சேர்ந்து இன்றோடு 7 மாதங்கள் முடிந்துவிட்டது . ஒரு செடியின் வளரவேண்டும் என்ற துடிப்பு அதன் வளர் நுனியில் அதிகமாக இருக்கும் என்பார்கள். அவனின் வளரும் துடிப்பு பேசும் மொழியில் உள்ளது.

நாம் சாதாரண நிலையில் இருக்கும் போது ஒவ்வொரு வார்த்தையையும் எண்ணி வகுத்து பேசுவோம். கொஞ்சம் உணர்சிகள் மேலெழும்போது ஆழ்மனதில் பதிந்திருக்கும் வார்த்தைகளும் மேலெழும். பெரும்பாலும் சிறு வயதில் அம்மா அல்லது அப்பா பேசுவதை பார்த்து கற்றுக்கொண்ட வார்த்தைகளாக இருக்கும்.

எனக்கு "கம்மனாட்டி " என்ற வார்த்தை. என் அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தை. நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டால் வருகின்ற முதல் வார்த்தையும் அதுதான்.

அவனும் அவன் அம்மாவிடமிருந்து பெரும்பாலான வார்த்தைகளை எடுத்துக்கொள்கிறான்.

போன வாரம் " அடிப்பின்னிடுவேன் " என்று பக்கத்துவிட்டு தோழியை மிரட்டிக்கொண்டு இருந்தான் . அப்பா எங்க டீச்சர் bad டீச்சர் பா ஹோம் வொர்க் பண்ண சொல்லி "அடம் புடிகிறாங்க" பா என்கிறான். சரி நா அவங்க அப்பா கிட்ட சொல்றேன் என்றேன்.

அவன் படிக்கும் பள்ளியில் பல்வேறு மாநில குழந்தைகள் படிக்கின்றனர். ஆங்கிலம் தான் பொது மொழி. அதனால் இப்போது ஆங்கிலம் கலந்த தமிழில் பேசத்துவங்கி இருக்கிறான்.

அப்பா யூ கோ , ஐ கம் , அப்பா யூ பீடிங் அம்மா சௌடிங்.

தனித்திருப்பவனின் மொழி மெளனம். தவிப்பவனின் மொழி மழலை.

நான் அவனை செல்லம் , என்னடி பண்ற என்று பெண்பாலில் கொஞ்சுவேன். அதை என் அண்ணன் ( சகலை) கவனித்து அவனிடம் பேசும் போது ஆண் என பேசுங்கள் என்றார். நானும் டேய் என்னடா பண்ற என்று பேசத்துவங்கினேன். அவன் கவிதாவிடம் அம்மா என்ன அப்பா டேய்ன்னு சொல்றாங்க என்று புறம் கூறினான். அதன் பின் வாப்பா போப்பா என்று அழைக்க துவங்கிவிட்டேன்.

எந்த சூழலில் எந்த வார்த்தை பேசவேண்டும் என்று கவிதா சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்கிறாள். அது நல்லது என்றே நான் நினைக்கிறேன்.

தனி 

பள்ளிக்கு சென்ற சில நாட்களுக்கு பின் அவனுக்கான தனியான உலகத்தை உருவாக்க முயன்றுக்கொண்டு இருக்கிறான்.

அதில் அவனுடைய நண்பர்கள் இருக்கிறார்கள், விளையாடும் பொம்மைகள் இருக்கின்றன, பள்ளி பொருட்கள் இருக்கின்றன, அவனுக்கான கதைகள் இருக்கின்றன, கதை நாயகர்கள் இருக்கிறார்கள் , பிடித்த பாடல்கள் இருக்கின்றன.

இரவில் அவனிடம் நானும் கவிதாவும் அவன் கட்டமைக்கும் அந்த உலகத்தைப்பற்றி கேட்கும் போது உற்சாகத்தில் கண்கள் விரியும்.

 எனக்கு நாலு friends பா ஐசெர் , அமின் , கணேஷ் , யாழினி .  இன்னிக்கி ஐசர் அழுதாம்பா நா don't cray mummy coming இன்னு சொன்னேன் பா என்று அடுக்கிக்கொண்டே போவான்.

அந்த உலகத்தை யாராவது கலைத்துவிடுவாகளோ என்ற பயம் அவனுக்கு இருக்கின்றது. அவன் பொம்மைகளை அவன் நண்பர்கள் அல்லாதவர்களை தொட  அனுமதிப்பதில்லை. தின்பண்டங்களை பிறரிடம் பகிர்வது இல்லை. புதியவர்களிடம் பேசுவது இல்லை. அவன் பள்ளி பொருட்களை தொட விடுவதில்லை. ஒரு பென்சில் கூட நான் எடுக்க முடியாது.

எச்ச கைல காக்கா ஓட்ட மாட்டன் என்று அவன் அம்மா சொல்ல இல்ல இல்ல காக்காவ ஓட்டிட்டு தான் சாப்பிடவே இவன் உக்காருவான் என்று நான் கிண்டலாக சொல்லிக்கொண்டு இருந்தேன்.

அவன் உருவாக்கும் உலகத்தை எங்கள் உலகத்தோடும் பொது வெளியோடும் இணைக்க வைப்பதுதான் எங்கள் முன் இருக்கும் பெரிய சவால்.

அவன் எங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறான். அது அவன் தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.

அப்பா ஏன்பா குடுக்கணும் ?

அப்பா நா ஏபா ஸ்கூல் போனும் ?

ஏபா ஊருக்கு  போனும் ?

அப்பா ஏபா தூங்கனும் ?

அப்பா ஏம்பா குளிக்கணும் ?

Saturday எனக்கு லீவு நீங்க ஏம்பா ஆபீஸ்க்கு போறீங்க ?


என்று தொடர்ந்து எழும் கேள்விகளுக்கு மெது மெதுவாக சின்ன சின்ன கதைகள் சம்பவங்கள்  சொல்லி அவனுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறோம். தாத்தா என்ன செஞ்சார் தெரியுமா என்று கதையை துவங்கி அதில் டோரா வந்து வெங்கடேசன் கடையில சாக்லேட் வங்கி இவனுக்கு குடுத்து என்று போகும் அந்த கதை.

கேள்விகளுக்கு நான் பதில் தெரியாமல் முழிக்கும் போது கவிதா காபாற்றுவாள்.

பல நேரங்களில் அவன் கேட்க்கும் கேள்விகள் என் வாழ்வில் எவ்வளவு அபத்தங்கள் குவிந்து கிடக்கின்றன என்று கட்டிவிடுகின்றன.

வலி

இரண்டு மாதம் முன்பு எனக்கு உடல் நிலை சரி இல்லாமல் போனது.

எனக்கு வந்துடன் அவனுக்கும் சளி காச்சல் வந்தது.
தொடர்ந்து ஒரு பத்து நாள்  பாதிக்கப்பட்டோம். இரவில் பலநேரம் இரும்பிக்கொண்டு இருப்பான். சில நேரம் வாந்தி எடுப்பான். எங்களை பார்த்துக்கொண்டதில் கவிதாவுக்கு சரியான துக்கமில்லை. அவன்  துள்ளல் அடங்கியது , பேச்சு குறைந்தது, மெளனமாக படுத்திருப்பான். எனக்கு மனதில் இறுக்கம் ஏறி ஏறி வேதனை கூடியது.

ஒரு நாள் வாந்தி எடுக்க அவன் அம்மா குளியல் அறைக்கு அழைத்து சென்றாள். நானும் சென்றேன். வாந்தி அதிகமாக எடுத்துக்கொண்டே இருந்தான். எனக்கு கண்ணிர் துளிர்த்து விட்டது. பின் அவன் கொஞ்சம் இளைப்பாறினான். கவிதா அவன் முகம் கழுவி துடைத்தாள். கொஞ்ச நேரம் யோசித்தான். என்னை பார்த்து புன்னகைத்தான். மெதுவாக நடந்து வெளியில் வந்தான். வாசல் அருகே நாங்கள் என்றோ ஊதி விளையாடிய பலூன்