"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

செவ்வாய், ஜூன் 28, 2016

மனிதம்


நேற்று இரவு மனம் கனத்துக்கொண்டே இருந்தது. இரண்டு காரணங்கள் ஒன்று சுவாதி மற்றோருவர் வேணு பிரியா.

கண்முன் ஒரு கொலை நடக்கும் போது நீ என்ன செய்வாய் ?

இது தான் என்மனதில் ஓடிக்கொண்டு இருந்த கேள்வி. கடைசி வரையில் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

சமீபத்தில் " இறைவி " படம் பார்த்தேன். ஜெகன் மைக்களை பார்த்து சொல்லுவான் இனி உன் பொண்டாட்டிய ஒழுங்கா ஒழுங்கா பாத்துக்குற புரியுதா என்று. மைக்கல் அருகில் இருந்த விளக்கை எடுத்து ஜெகன் மண்டையை பிளப்பான். எனக்கு தெரியாதா என் பொண்டாட்டிய எப்படி பார்த்துக்கனுன்னு என்று  வெறியோடு கேட்ப்பான்.

ஒரு பெண்ணின் மீது ஒரு ஆணுக்கு இருக்கும் உரிமை. அதை சார்ந்து எழும் ஆதி உணர்வு, ஆதி மனிதனின் உணர்வு , மிருக உணர்வு பெரும்பாலும் எல்லா ஆண் மனதிலும் எழுகிறது. அதன் மேல்  நாம் நாகரிகம் பண்பாடு , மதம்  என்று எத்தனை நீர் போர்வைகளை போர்த்தி வைத்தாலும்  காற்றுக்குமிழியென அது மேலெழும்புகிறது. எனக்கு தெரிந்து பெண்ணை சார்ந்து அல்லது பெண்ணின் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு இது தான் முக்கிய காரணம்.

சுவாதியின் கொலைக்கு காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அவர் அடைந்த மரண வலியை நினைக்கும் போது மனம் தகிக்கிறது.

நேற்று திரு நீலகண்டன் அவர்களின் இந்த நிகழ்வை பற்றிய ஒரு கட்டுரையை வாசித்தேன். மனம் கொஞ்சம் ஆறுதல் அடைந்தது.

http://www.dinamani.com/junction/arithalin-ellaiyil/2016/06/27/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/article3502462.ece

மற்றோன்று சமூகத்தால் நடத்தப்பட்ட வேணு ப்ரியாவின் கொலை.

தன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் கீழ்மை படுத்தி  வெளியானதை எதிர்த்தது புகார் கொடுக்க சென்றவரை காவல் துறை அலைக்கழித்தது. லஞ்சம் கேட்டது. வாழ்தலில் நம்பிக்கை இழந்து உயிர் துறந்துவிட்டார். 

பெற்றோரும் உறவினர்களும் கலந்துகொண்ட போராட்டத்தில் சமூக ஆர்வலர் திரு. மனுஷ் மற்றும் சேலம் மக்கள் அமைப்பும் கலந்துகொண்டது.

உதவி ஆய்வாளர் வந்து மன்னிப்பு கேட்டு இருக்கிறார் மற்றும் காவலர்களின் மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து இருக்கிறார்.

இந்த விடுமுறையில் நான் சந்திக்க விரும்பும் முக்கியமான நபர் திரு . மனுஷ் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக