அன்புள்ள நண்பர்களுக்கு,
நான் மற்றும் என் இரு தம்பிகளும் ( சிவா & சங்கர் ) இணைந்து கடந்த வருடம் " நீலம் " என்ற பெயரில் ஒரு கல்வி அறக்கட்டளை துவங்கினோம். மாதம் ஒரு சிறு தொகையை சேமித்து கிராமத்து பள்ளி குழந்தைகளுக்கு உதவுவதாக திட்டம்.
இதுவரை இரண்டு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
1. நான் படித்த அணங்காநல்லூர் ( வேலூர் மாவடடம் ) ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஒரு ஆங்கில ஆசிரியரை அமர்த்தி குழந்தைகளுக்கு ஆங்கில வகுப்புகளை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் துவங்கி இன்றுவரை நல்ல முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறன. அந்த ஆசிரியைக்கு முதலில் மாதம் 2500 ரூபாய் கொடுத்தோம் இப்போது கடந்த இரண்டு மாதங்களாக 3000 ரூபாய் தருகிறோம்.
2. அருகில் உள்ள இன்னொரு கிராம பள்ளிக்கு டிஜிடல் வகுப்பறை அமைக்க 20000 ரூபாய் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அந்த பிள்ளைகளின் கல்விகற்கும் திறன் நன்கு வளர்ந்துள்ளது. அவர்களின் முன்னேற்றம் பெரும் மன நிறைவையும் மகிழ்சியையும் அளிக்கிறது.
இந்த மகிழ்ச்சியை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உருவாக்கி உள்ளது.
இந்த வருடமும் நான் படித்த கிராமத்து பள்ளியில் சிறுவர்களுக்கான ஒரு சிறந்த நூலகம் அமைக்க வேண்டும் என்று எண்ணியிருதோம் . அதை தலைமை ஆசிரியரிடம் தெரிவித்த போது அவர் சில புகைப்படங்களை அனுப்பி இருந்தார். அவை பள்ளியின் கழிப்பிட புகைப்படங்கள். சீரழிந்து பாழடைந்து இருந்தது. அதனால் பெண் பிள்ளைகள் எவ்வளவு கஷ்ட்டப்படுகிறார்கள் என்று விவரித்து இருந்தார்.
என் நூலக எண்ணத்தை கைவிட்டு கழிப்பறையை சீராக்களாம் என்று நினைத்தேன். இந்த பணியை முடிக்க நண்பர்களாகிய உங்கள் கரங்களை கோர்ப்பது முக்கியம்.
உங்கள் கனிவான பங்களிப்பை அளிக்குமாறு உரிமையுடன் கோருகிறேன். ஆளுக்கொரு நூல் கொடுத்தால் ஏழைக்கு ஒரு சட்டை உருவாக்கிவிடலாம்.
நன்றி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக