நான் பார்த்தவரை கிராம மக்களின் வாழ்வியல் ஆதாரங்களில் ஒன்று அவர்களின் உடல் வலிமை. மண் எப்படி அவர்களுக்கு உணவு தருகிறதோ அதே போல அவர்களுக்கு உடல் வலிமையையும் தருகிறது. தினமும் மண்ணோடு புழங்கும் அவர்களின் கைகள் இறுக்கி இருக்கும். தென்னை ஏறும் ஏகாம்பரத்தின் வயிறு மரத்தின் கணுவரிகளை போலவே கட்டுக்களாக இருக்கும். தினமும் பத்து கிலோ மீட்டர் சைக்கிளில் பால் கேன் கொண்டுபோகும் நடராஜனின் தொடை திரண்டு வழியும். ஈரமான புள் கட்டை பொருட்டே இல்லாமல் தலையில் ஏற்றி கதை பேசிக்கொண்டு வருவார் காமாட்சி அக்கா. பெரிய மக்கேறி ( பெரிய கூடை ) நிறைய தேங்காய்களை தோப்பிலிருந்து சுமந்து வந்து வண்டிப்பதை அருகே கொட்டிக்கொண்டே இருப்பார்கள் சாந்தியும், அம்பிகா அக்காவும். காலையில் சூரியன் எழுவதற்குள் தென்னங்கன்றை நடுவதற்கு பத்து குழிகளை எடுத்துவிட்டு நீரில் உரிய பழைய கேள்விறகு களியை பூசனை இலையில் வைத்து கீரை குழம்பில் ஊற்றி நாவூற ஒலி எழுப்பி சாப்பிடுவார் சின்னத்துரை. இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
கவிதாவின் அப்பா விவசாயி. அவருக்கு காலில் அடி பட்டுவிட்டது. நான் என்னப்பா கால் சரியா போச்சா என்றேன். அது அப்பவே சரியாப்போச்சு எனக்கு அடிப்பட்டா டக்குன்னு ஆறிடும். பாரு என்று காலை காண்பித்தார். அப்பொதுதான் புரிந்தது அந்த கேள்வி அவரை கொஞ்சம் சீண்டி இருக்கும் என்று.
என் அப்பாவும் அப்படிதான் தன் உடல் வலிமையை முதல்முற்றாக நம்புபவர். ஊருக்கு சென்றாலும் நல்ல இருக்கியா நைனா என்று நான் கேட்பதே இல்லை. அப்படியே தெரியாமல் கேட்டுவிட்டாலும் ஏன் என்னக்கு என்ன என்று கோவமும் சங்கடமும் கலந்த குரலில் கேட்ப்பார்.
ஆனால் ஊரில் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. விவசாய நிலங்கள் முழுவது தென்னை மரங்கள் நடப்பட்டுள்ளன. சில கோழி பண்ணைகள் வந்துவிட்டன. சிலர் மேஸ்திரி வேலைக்கு பெங்களூர் சென்று விட்டனர். சிலர் வெல்டிங் , பீரோ வேலைக்கு சென்றுவிட்டனர். சிலர் படித்து வேலை கிடைத்து வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். பெண்கள் பெரும்பாலும் shoe கம்பனிகளுக்கு சென்றுவிட்டனர். மேலும் பலர் நூறு நாள் வேலைக்கு போகிறார்கள்.
மக்களிடையே உடல் வலிமை என்ற ஆதார சுருதி குறைந்துகொண்டே வருகிறது. மக்களுக்கு மண்ணுடனான உறவு இன்று இல்லை. மதுவும் அவர்களை மட்க்க வைக்கிறது. இதயநோய், கல்லிரல் , சிறுநீரக பழுது, கண் பாதிப்பு, நீரழிவு போன்ற நோய்கள் இன்று எங்கள் கிராமத்தில் சாதாரணமாக புழங்குகிறது. கிராமத்தில் இறப்பு என்பது மாடுமுட்டி, கிணற்றில் தவறி விழுதல் , பாம்பு கடித்து, மரத்திலிருந்து விழுதல் , மின்கம்பிகளை மிதித்தல், தற்கொலை , பிரசவம் , வையோதிகம் என்று தான் நிகழும். ஆனால் இன்று முதல் காரணம் நோய்.
எங்கள் ஊர் பகுதியில் மூன்று ஊருக்கு சேர்த்து ஒரு சுகாதார நிலையம் இருக்கிறது. அதில் குழுமுபவர்கள் பெரும்பாலும் தினக்கூலி வேலை செய்பவர்கள், வயோதிகர்கள்.
அங்கு வரும் அரசு மருத்துவர்களும் மருத்துவ பணியாட்களும் வெளியூர்காரர்கள் என்பதால் தன் கீழ்மைகளையும், அதிகாரத்தையும் வெளிக்காட்டுவதில்லை. ஆனால் சிறிய நகரம் மற்றும் நகரங்களில் நிலைமை முற்றிலும் வேறு.
அங்கு அலட்சியமும் அதிகாரமும் முன்னிறுத்தப்படுகிறது. சில விதிவிலக்குகளை தவிர்க்கலாம்.
கவிதாவுக்கு ஒருமுறை நள்ளிரவில் கடும் வயிறுவலி ஏற்பட்டது. அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றோம். இரவு பணியில் இருந்த நர்ஸ் என்ன என்று கேட்டுவிட்டு ஒரு ஊசியை எடுத்து தயவில்லாமல் குத்தினார்.
ஊசி குத்தும் முறை ஒன்று உள்ளது. தோளில் எங்கு குத்த வேண்டும். எந்த கோணத்தில் குத்தினால் தோலின் எந்த அடுக்கில் மருந்து ஏறும் என்று வரையறை உள்ளது. எதை பற்றியும் யோசிக்காமல் அந்த ஊசி போடப்பட்டதால் கவிதாவுக்கு வயிற்றுவலியோடு கை வலியும் வந்துவிட்டது.
ஆனால் அத்தகைய மறுத்தவமனைகளில் ஒன்றை கவனிக்கமுடியும். நோயாளிகளும் அவர்களை கவனித்துக்கொள்ள வருபவர்களும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலன் பகிர்ந்துகொள்கிறார்கள். கவிதா தீடீர் என்று வாந்தி எடுத்துவிட்டாள். அருகே தன் மருமகளை பார்த்துக்கொள்ள வந்த கிழவி மெதுவாக எழுந்துவந்து வெளியே சென்று ஒரு பாத்திரத்தில் தண்ணிர் எடுத்துவந்து தரை முழுவதும் சுத்தமாக கழுவி துடைத்துவிட்டு ஒரு சொல்லும் சொல்லாமல் மறுபடியும் சென்று அமர்ந்துகொண்டது. கிழவியின் காலில் விழுந்து விடலாமா என்று கூட எனக்கு தோன்றியது.
நான் நேற்று யூ டியூபில் வேறு எதையோ தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது இந்த வீடியோ பார்த்தேன். நீயா நானாவில் ஆசிரியர் கலந்து கொண்ட பதிவு.
அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே மருத்துவர்களுக்கு புரியவில்லை. அப்போதே ஆசிரியர் முடிவு செய்திருப்பார் இனி தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ள போவதில்லை என்று.
இந்த நிகழ்ச்சி கடைசியாக எழுப்பிய கேள்வி இதுதான்.
நம் சென்னை அரசு மருத்துவமனையில் மிகசிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்று நான் கேள்வி பட்டு இருக்கிறேன் அனைத்து விதமான மருத்துவ வசதிகள் இருக்கிறது என்கிறார்கள் . ஆனாலும் ஏன் நம் முதல் அமைச்சர்களை தனியார் மறுத்தவமனையில் சேர்க்கிறோம் ?
http://www.hotstar.com/tv/neeya-naana/1584/doctors-vs-the-public/1000031339

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக