( -------------------------------------மணி 7 காலை ----------------------------------------------------)
கவிதா : அக்ஷய் வேன் வந்துடும் எழு .
அக்ஷய்: இன்னும் 2 மினிட் மா.
கவிதா : ஏம்பா எஸ்சஸைஸ் முடிச்சாச்சா ?
இந்த ஜன்னலை தொறந்தா மூட மாட்டியா . மண்ணெல்லாம் உள்ள வருது. டெய்லி நா உனக்கு சொல்லணும். உன் பையனே மேல்.
உங்க ரெண்டு பேருக்கு வேலை செய்றதே எனக்கு பொழப்பு. இனி நீங்களே உங்க வேலைய செஞ்சிக்கங்க
( 10 நிமிடம் கழித்து )
டாய் எழுந்தீயா இல்லையா .... அப்பா குளிச்சிடாங்க பாரு வா வா
நான் : கவி அந்த டவலை எடுத்து குடு .. ,
கவிதா : முடியாது இப்பதானே சொன்னேன் நீயே வந்து எடுத்துக்க ,,,
இரு இரு அப்படியே வராதே ( ஈரமாக ) இந்தா ..
செல்ல குட்டி நீங்க உள்ள போங்க
( 5 நிமிடம் கழித்து )
அக்ஷய் : அம்மா ஆயி கழுவி உடுங்க
கவிதா : என்னடா ஆயே போல
அக்ஷய் : அம்மா ஆயி அப்புறம் வரும்மா நீங்க இப்ப கழுவி உடுங்க
கவிதா : சரி திரும்பு
2 மினிட்ல குளிச்சிட்டு வரணும் ஓகே வா
ஏம்பா காலைல கம்ப கூழ் போதுமில்ல
நான் : போதும் போதும் அப்படியே ரெண்டு தோச கொஞ்சம் கடலை சட்டினி
கவிதா : ம்ம்ம் அப்படியே பூரி பொங்கல் வடை எல்லாம் செய்றேன் சாப்பிட்டு போ
நான் : இல்லபா டைம் ஆச்சு கூழே போதும்
கவிதா : மத்தியானம் களி கருவாட்டு குழம்பு
நான் : வாவ் நைஸ்
கவிதா : நல்லா தின்னு
நான் : ஓகே பை அக்ஷய் பை செல்லம்
கவிதா : அக்ஷய் வா டிரஸ் போட்டுக்கா மொதல்ல டிவிய நிறுத்து காலங்காத்தால போடுவான்
அக்ஷய் : அம்மா எனக்கு க்ரீன் டிரஸ் வேண்டாம் ம்ம்ம் ரெட் வேணும்
கவிதா : ம்ம்ம் ரெட் டீ ஷர்ட் ஓகே
அக்ஷய் : ம்ம்ம் வேண்டாமா நேத்து போட்டுட்டு போனேன் இல்ல வைட் ஷர்ட் அது வேணும்
கவிதா : அது வாஷிங் மெஷின்ல போட்டுட்டேன் அத எடுத்தா ஸ்மல் அடிக்கும் ஸ்கூல்ல யாரும் உன் பக்கத்துல வரமாட்டங்க
அக்ஷய் : அதே போட்டுக்குறேன் மா ப்ளீஸ்
கவிதா : சரி இரு ( ஆழ தேடல் )
!!!!!! உயிரே உன்னை உன்னை வாழ்க்கை துனையாக !!!!!!!
அக்ஷய் : அம்மா போன் அடிக்குது டிரைவர் அங்கிள்
கவிதா : இந்த வா வைட் டிரஸ்
அக்ஷய் : ஓஒ ச்சி சீ நாத்தம் வேணாம் நா க்ரீன் டிரஸ் போட்டுகிறேன்
கவிதா : ஐயோ சந்திரா ................................. இந்த வா க்ரீன் டிரஸ் போட்டுக்க டைம் ஆச்சு
அக்ஷய் : ஏம்மா ஆயாவா கூப்புடுறீங்க
( 2 நிமினிடம் கழித்து )
கவிதா : செல்லம் இந்த வாழைப்பழத்தை சாப்பிடுங்க
அக்ஷய் : கழுவிடிய மா ? புருட்ட கழிவித்தான் சாப்பிடணும்ன்னு சொன்னிங்க ? கழுவுங்கமா
கவிதா : !!!!!!!!!!!!! வாழபழம் கழுவ வேண்டமுடா அப்படியே சாப்பிடலாம் ..
அக்ஷய் : அப்ப ஆப்பிள் ?
கவிதா : கழுவனும்
அக்ஷய் : அப்ப கிரேப் ?
கவிதா : டேய் வேன் வந்துடும் டா ... இந்த சாப்பிடு கொஞ்ச கொஞ்சமா நல்ல மென்னு சாப்பிடு
(5 நிமிடம் கழித்து )
கவிதா : அக்ஷய் ஷுவா செப்பலா
அக்ஷய் : ரெட் ஷு
கவிதா : சரிவா போலாம்
அக்ஷய் : அம்மா லிப்ட்ல வேண்டாம் படியில போலாம்
( கீழ்தளம் )
அக்ஷய் : அம்மா சச்சு சூச்சு வருத்து
கவிதா : என்ன ?
அக்ஷய் : சுச்ச்சு
கவிதா : ம்ம்ம் சரிவா கிழ அனிதா ஆண்டி வீட்டுல போயிட்டு வந்துடலாம்
----------------------------------------டிரிங் ட்ரிங் -------------------------------------------------
அனிதா ஆண்டி : ஓ வா உள்ள வா
கவிதா : வேன் வந்துடும் இவன் சூச்சு போணுமா
அனிதா ஆண்டி : ஹாய் அக்ஷய் நேத்து சாக்லெட் கொடுத்தேனே நல்லா இருந்ததா
அக்ஷய் : ம்ம்ம் ...
கவிதா : சீக்கிரம் போயிட்டு வா
அனிதா ஆண்டி : நேத்து கிருஷ்மஸுக்கு கேக் வெட்னிங்களா
கவிதா : இல்ல இவனுக்கு யாரோ நம்ம வீட்டுக்கு சாண்டா குருஸ் வந்து கி ஃப்ட்ட தருவாருன்னு சொல்லி இருக்காங்க நைட் படுக்கும்போது காலையில வருவாரான்னு கேட்டான் , காலையில எழுந்து கதவை தொறந்து கி ஃப்ட்ட தேடினா
ஏம்மா அவரு வரலன்னு பரிதாபமா கேட்டான் அப்புறம் அவங்க அப்பா ஆபிஸில் இருந்து வரும்போது கேக் கி ஃப்ட் எல்லாம் வாங்கிட்டு வந்தாரு . அப்புறம் குட்டி குட்டி லைட் போட்டு ஸ்டார் எல்லாம் வச்சு கேக் வெட்டின பிறகு ரொம்ப சந்தோஷமாயிட்டான் .
அக்ஷய் : அம்மா சூச்சு வரல sorry மா
கவிதா : சரி செல்லம் வா போலாம். சரி வறேன்.
( கீழே சாலையில் வேன் வந்தது )
வேன் டிரைவர் : அக்ஷய் குச்சா மெதுவா ஏறு....
கவிதா : bye bye
----------------------- ( மாலை 6.30 ) --------------------------
நான் : ஹாய் அக்ஷய்
அக்ஷய் : அப்பா நான் ஹோம் ஒர்க் முடிச்சிட்டேன்
நான்: ஓ சூப்பர் அக்ஷய்
கவிதா : வந்த உடனே ஹோம் ஒர்க் எழுதிடார்ப்பா
நான் : உன்ன அழ வச்சி கதற வச்சி ரெண்டு அடி வாங்கிட்டு தானே எழுதுவான்
கவிதா: இல்ல பா என்னனு தெரியல ரெண்டு நாலா வந்தவுடனே ஹோம் ஒர்க் எழுதிட்டு விளையாட போறான்.
நான் : குழந்தைங்க மனசில தான் தெய்வங்க குழந்தை தனமா இருக்கு
கவிதா: ஹெலோ உங்க ஆசிரியர படிசிட்டு வந்தியா ? தம்பி வர வர நீ பேசுறது ஒன்னும் புரிய மாட்டிங்குது , கமண்டலத்த காதுல மாட்டிட்டு கிளம்பிட போற
அக்ஷய் : அப்பா I need big toys ?
கவிதா : அவன் என்ன சொன்னா கேளு
கடையில நா மட்டும் சக்கர, அரிசி, பருப்பு, சோப்பு , காய் எல்லாம் வாங்கிக்கிறேனாம் அவருக்கு மட்டும் ஒரு பொம்மை கூட வாங்கி தர மாட்டுறோமா
நான் : அதானே ...
கவிதா : என்ன அதானே இப்ப அவரு பெரிய பிரச்சனையே பெரிய பையனா அக்குறது தான்
பெரிய பையன் ஆகிட்டா உன்ன விட ஸ்பீடா கார் ஓட்டுவானாம் , சூர்யா அண்ணா மாதிரி வேகமா பைக் ஓட்டுவானாம் , முகில் அண்ணா மாதிரி ஷெட்டில் ஆடுவானாம் முக்கியமா girls கூட விளையாட மாட்டானாம்
நான் : அவருக்கு இப்ப நான் தான் பிரச்சன. என்ன கடந்து அவரு போகணும்
கவிதா : சரி நீ போய் குளிச்சிட்டு வாப்பா அக்ஷய் நீ போய் சைக்கிள் ஓட்டு
( -------------------------------- இரவு 8 மணி ----------------------------------------------------------)
கவிதா : சாப்பாடு ரெடி வாங்க வாங்க .... டேய் டீவிய ஆப் பண்ணு
நான்சா : சாப்பிடும்போது டீவி பக்கத்தே
கவிதா : ஐயோ பொழுதண்ணிக்கும் டோரிமான் சிம்ச்சான் ஓடிட்டே இருக்கு
அக்ஷய் : நீங்க மட்டும் phone பாக்கறீங்க அப்பா எப்ப பார்த்தாலும் கம்ப்யூட்டர் பாக்கறாங்க
நான் : சரிப்பா நா பாக்கல நீ டிவி ஆப் பண்ணிட்டு சாப்பிடு
அக்ஷய் : வாவ் நைஸ் எம்மி
நான் : டேய் இவன் வெறும் இட்லி சப்பிட்டே எம்மின்னு சொல்லுவான்
கவிதா : அவன் அதையாச்சும் சொல்றானே
( ------------------------------------------------இரவு 9.00 மணி ---------------------------------------------)
நான் : அக்ஷய் ப்ரெஷ் பண்ணலாம் வா
அக்ஷய் : வந்துட்டேன்
நான் : இந்த விளையாடிய பொம்மையெல்லாம் எடுத்து வச்சியா
இந்த ...ஈ....ஈ காமி துப்பு நல்ல துப்பு ஆ காமி தண்ணிய கொப்புளிச்சி துப்பு ------------ இரு இரு சுச்ச்சு போ ...
கவிதா : அக்ஷய் பெட்ல குதிக்காதே படு
அக்ஷய் : அப்பா கத சொல்லுங்க
நான் : ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்களாம்
அக்ஷய் : அப்பா அயர்ன் மேன் கத
நான் : அயர்ன் மேன் அவங்க ஆயாவ பாக்க கிராமத்துக்கு போனானாம் . அவன பாத்த அவங்க ஆயா பயந்துடாங்களாம். ஆயா நான் தான் பழநின்னு அயர்ன் மேன் சொன்னானாம்.
அக்ஷய் : அம்மா அயர்ன் மேன்க்கு ஆயா இருக்காங்களா அம்மா அவன் எப்படி மா சூச்சு போவான்
கவிதா : அப்பாவ கேளு
நான் : அத விடு அவங்க ஆயாவும் அவனும் சந்தைக்கு முறுக்கு விக்க போனாங்க
அக்ஷய் : சந்தையா அடின்னா ?
நான் : அது வில்லேஜ் எக்சிமீசன் ................ ,, அயர்ன் மேன் முறுக்கு முறுக்கேய் காத்திட்டே இருந்தானாம்
அக்ஷய் : முறுக்கு முறுக்கேய் அம்மா முறுக்கு முறுக்கேய்
கவிதா : அக்ஷய் தூங்கு டைம் ஆச்சு நா தூங்கிட்டேன்
அக்ஷய் : அப்பா அம்மா தூக்கிட்டாங்க நம்ம தூங்கலாம் .........
நான் : செல்லம் அப்பாக்கு ஒரு முத்தா குடுங்க
அக்ஷய் : ஹா ஹா ஹா ஹா அப்பா நீங்க என்ன girlல
நான் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------
மற்ற பதிவுகள்
------------------------------
மகன் வயது 4
http://giramathanonline.blogspot.com/2015/11/35.html
மகன் வயது 3.5
http://giramathanonline.blogspot.com/2015/11/35.html
மகன் வயது 3
http://giramathanonline.blogspot.com/2015/06/3.html
மகன் வயது 2.10
http://giramathanonline.blogspot.com/2015/03/210.html
மகன் வயது 2.8
http://giramathanonline.blogspot.com/2015/01/28.html
மகன் வயது 2.3
http://giramathanonline.blogspot.com/2014/09/23.html
மகன் வயது 1.11
http://giramathanonline.blogspot.com/2014/03/111.html
மகன் வயது 1.5
http://giramathanonline.blogspot.com/2013/12/blog-post_22.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக