"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

சனி, ஜூலை 27, 2013

தென் பயணம்-1 - சுசிந்திரம் கோயில்

எங்காவது தொலைந்து போக ஆசை வந்தது. தொலைவது என்றால் வழக்கமான என்  வேலைகள் மற்றும் நினைவுகளிலிருந்து, பார்க்கும் மனிதர்களிலிருந்து.

நம் முடிவுகளிலில் யார் குறுக்கிடும் இல்லாமல் , முடிவுகளின் விளைவுகளை   
அனுபவிக்க  வேண்டும்.

தனிமை பயணம் அதற்கான  ஒரு வழி.

ஜூன் மாதம் இறுதியில் திருவனந்தபுரத்துக்கு செல்லும் இரயிலில் வாணியம்பாடி இரயில் நிலையத்தில் ஏறினேன்.

இரயில் செல்ல செல்ல மனம் இருக்கத்திலிருந்து வழிந்து, தொலைந்து போவதில் கரையத்துவங்கியது.

அதிகாலை இரயில் கேரள மாநிலம்  கொல்லத்தில் நின்றிருந்தபோது விழித்தேன்.

மழை ,பசுமை , குளிர் காற்று, ஈரம், பெண்கள். 

அங்கேயே இறங்கிவிடலாம் என யோசித்தேன்.

இலக்கு கணியகுமரியாக இருந்தது.

கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம்வரையில் மழை, பசுமை ,நீர்,  குளிர் காற்று, ஈரம் ,பெண்கள்.



















இவ்வளவு அழகான ஊரை விட்டு வந்து எங்கு சவுதியில்  வெட்டவெளியில் போட்டால் மணலில் வேலை பார்க்கும் கேரளா நண்பர்களை பார்த்தல் கஷ்டமாதான் இருக்கு.

திருவனந்தபுரத்தில் இறங்கி குளித்துவிட்டு காலை  உணவும் முடித்து விட்டு நாகர்கோயில் பேருந்தில் ஏறினேன்.

இரயில் நிலையத்தின் எதிர் புறம் அணைத்து பேருந்துகளும் நிற்கின்றன.

பத்து நிமிட பயணத்தில் ஊருக்கு வெளியே வந்துவிட்டது பேருந்து.

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோயில் வரை கேரளா மணம். மேடு பள்ளம், தனித்தனி வீடுகள் பசுமை எல்லாமே.

நாகர்கோயில் கூட கேரளம் போலவே உள்ளது. இங்கு பேசும் தமிழ் மலையாளம் போலவே உள்ளது.

நாகர்கோயில் சென்று சுசிந்திரம் கோயிலுக்கு சென்றேன்.

சுசிந்திரம் கோயில் நாகர்கோயில் கன்னியாகுமரி சாலையில் 8km தெலைவில்
 உள்ளது .

சிவன் பிரமன் விஷ்ணு  மூவருக்கான  கோயில்.

கோயில் முகப்பிலேயே அழகிய தெப்பகுளம்  உள்ளது .















வெண்ணிற  கோபுரம் அதில் எண்ணற்ற சிலைகள். இந்த சிலைகள் யார் மனதில் தோன்றியது எப்படி வடிவம் பெற்றது, அளவுகள் என்ன என்று நினைக்கும்போதே பிரமிப்பு.

ஒவ்வொரு சிலையும் ஒரு தெய்வம். அதன் பின்னணியில் ஒரு கதை இருக்கும்.

ஒவ்வொரு சிலையும் ஒரு கச்சிதமான அளவில் செதுக்கப்பட்டு மொத்த கோபுரமும் நிர்மானிகப்பட்டுள்ளது.

























இந்த கோயில் கேரளாவிடம் இருந்தது பின்பு தமிழகத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால் கேரளா நம்புதிரிகளே பூஜை செய்கிறார்கள்.

தமிழகத்தில் கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பது வருத்தம் தான்.
ஆனால் கலை ரசனையை  நாம் வாழ்வில் எந்த பகுதியிலும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக