இந்தியாவின் முக்கியாமான இடங்களை பற்றியும், ஊர்கள் நகரங்களை பற்றியும் இன்று புகைப்படங்களாக, கானொளியாக பார்க்கவும், கட்டுரைகளாக படிக்கவும் இணையத்தில் கிடைக்கிறது. அதை பார்க்கும்போதும் படிக்கும்போதும் அந்த இடத்தை ஒரு காட்சி பொருளாகவே உள்வாங்க முடிகிறது. அவை அந்த இடத்தை பார்க்க தூண்டும் ஒரு கருவி மட்டுமே. நேரில் பார்க்காதவரை எந்த ஒரு இடத்தின் ஆன்மாவையும் உணர முடியாது. இது மனிதர்களுக்கும் பொருந்தும்.

ஒரு தூண்டலில் ராமேஸ்வரம் பார்க்கும் ஆர்வம் எழுந்தது. இரவு பயணமாக ராமேஸ்வரம் அடைந்து கோயிலின்முன் ஒரு அரை எடுத்து தங்கினேன். தூங்கி விழித்த போது காலை 10 மணியாகியிருந்தது .
ராமேஸ்வரம் நடுத்தரமான பழமையான நகரம். பழமையின் மையமாக கோவில் உள்ளது. அதை சுற்றி எண்ணற்ற மடங்கள், சத்திரங்கள் தங்கும் விடுதிகள் நிறைந்துள்ளது.
விடுதி காப்பாளரிடம் கோவிலை பற்றி கேட்டேன். இந்த கோவிலை சுற்றி 22 தீர்த்தங்கள் உள்ளது. அதில் குளித்துவிட்டு மூலக்கடவுளை காணவேண்டும் என்றார். அதில் முதல் தீர்த்தம் கடல்.

கடலில் குளிப்பதை நினைக்கும் தருணத்தில் அனைத்து எண்ணங்களும் விலகி ஒரு உவகை எழும். அந்த உவகையோடு கடலை நோக்கி நடந்தேன்.
சற்றே ஒதுங்கி இருந்த கடல் நீரில் பெரும் பக்த்த மக்கள் மூழ்கி குளித்துக்கொண்டு இருந்தனர்.
இந்த கோவிலுக்கு வருபவர்கள் வடவர்களே அதிகம். இறந்தவர்களுக்கு பூசைகள் நடந்துகொண்டு இருந்தது. சிலர் இறந்தவர்களின் அஸ்த்தியை நீரில் கரைத்தனர். சிலர் பழைய துணிகளை தண்ணீரில் இடுவதுமாக அதை சிலர் எடுத்துக்கொள்வதுமாக நடந்துகொண்டிருந்தது.
மெதுவாக தண்ணீரில் இறங்கியதும் அதன் குளுமை மெதுமெதுவாக உடல் முழுவதும் பரவியது. சின்ன சிலிர்ப்போடு நீரில் முழ்கி எழுந்து கரை ஏறினேன்.
22 தீர்த்தத்தில் ஒன்று முடிந்தது. மீதி 21 தீர்த்தம் கோவிலை சுற்றி உள்ள சிறிய கிணறுகள், ஒரு பெரிய குளம், கங்கை நீரின் புனித தன்மைக்கு இணையான ஒரு நீருற்று. அதில் குளிக்க அரசு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. கோவிலின் பிரகாரத்தை சுற்றி சிறிய வட்டவட்டமான கிணறுகள் இருக்கின்றன. ஒவ்வொரு கிணற்றுக்கும் ஒரு அரசு நியமித்த ஆள் நின்று சிறு வாளியில் நீரெடுத்து பக்த்தர்களின் தலையில் ஊற்ற வேண்டும் என்பது மரபாக இருக்கலாம். ஆனால் அங்கு நிலைமை வேறு.
அங்கே வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை கும்பல் ஒன்று உள்ளது. அந்த 21 தீர்த்த கிணறுகளை அரசிடமிருந்து குத்தகை எடுத்தவர்களாக இருக்கலாம்.
அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது கோவில். கோவிலை காணவரும் குடும்பம் அல்லது குழுக்கள் அவர்களில் ஒருவரை நியமித்துக்கொள்ள வேண்டும். அவர் 21 தீர்த்தங்களில் நீர் இரைத்து உங்கள் ஒவ்வொரு தலையிளிலும் ஊற்றுவார். சாமி தரிசனம் அருகில் கிடைக்கும். சிறப்பு பூசைகள் ஏற்பாடு செய்து தருவார். கோவில் பனி முழுவதும் உங்கள் உடன் இருந்து வழி அனுப்பி வைப்பது அவர் பொறுப்பு. வடநாட்டு குழுக்கள் இவர்களின் முக்கிய இலக்கு.
இது தெரியாமல் நான் ஒவ்வொரு கிணற்று அருகில் போய் கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தேன். வெள்ளை வேட்டிகள் அவர்கள் அழைத்துவந்த ஆட்களுக்கு ஒவ்வொரு குடமாக ஊற்றிவிட்டு கடனே என்று நம்மீதும் கொஞ்சம் ஊற்றிவிட்டு செல்கிறார்கள். ஒவ்வொரு கிணற்றின் முன் நிற்கும் போதும் தர்ம சங்கடமாக இருந்தது. வெகு நேரம் நிற்க வேண்டி இருந்தது. 21 தீர்த்த குளியலை முடித்து மறுபடியும் அறைக்கு வந்து உடைகளை மாற்றிக்கொண்டு சன்னிதானத்துக்கு சென்றேன். இந்த முறை 50 ரூபாய் தரிசன சீட்டு வாங்கி சென்றேன். ஆனால் அங்கும் வெள்ளை வேட்டி ஆசாமிகளுக்கு முதலிடம்.
லிங்க வடிவான சிவனை வழிபட்டு விட்டு, அருகில் இருந்த அம்மனை தரிசித்துவிட்டு வெளியில் வந்தேன்.
பிரகாரம் முழுவதும் அழகிய தூன்கள் அதில் சிற்ப்பங்கள். நாம் தனியாக இதுபோல சிற்ப்பங்களை வெகு நேரம் ரசித்துக்கொண்டு இருந்தாள் நம்மை நான்கு பேர் பார்க்க துவங்கி விடுகிறார்கள். அதனால் பட்டும் பாடாமல் பார்த்துக்கொண்டே நகர்ந்தேன்.

இந்த கோவில் ராம காவியத்தில் முக்கிய இடமாக வருகிறது. அந்த காவியமே பாரதத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மக்களை இந்த கோவிலை நோக்கி அனுப்புகிறது.
இந்தியாவின் மிக சிறந்த சுற்றுலா தளங்களைவிட கோவில்களே நாடுமுழுக்க மக்களை ஈர்க்கிறது. குமரி முனையிலிருந்து இமயத்திற்கும் அங்கிருந்து குமரிக்கும் பயணம் செய்ய துண்டுகிறது.

கோவிலை விட்டு வெளியில் வந்து மீண்டும் கடல் பக்கம் சிறிது தூரம் நடந்து அங்கு நின்றிருந்த சுற்றுலா படகில் ஏறிக்கொண்டேன்.

படகு கடலினுள் செல்ல செல்ல கோவிலும் அதன் சுற்றுப்பகுதியும் ஒரு ஓவியம் போல கண்முன் விரிந்தது. அது கடலில் அசைந்து மிதக்கும் நிலவெளி என ஆனது.
நான் மீண்டும் கரையேறி நடக்கும் போது கண்களில் நீல நிறம் தலும்பிக்கொண்டே இருந்தது. நா முழுவதும் உப்பு படர்ந்தது வறண்டு போனது.

புகைப்படங்கள்
( தொடரும்)

வணக்கம் கிராமத்தான்.
பதிலளிநீக்குராமேஸ்வரம் கோவில் பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கின்றேன். கோவிலுக்குள் படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் கூகுளில் படங்கள் தேடியபோது உங்கள் வலைப்பதிவு கண்ணில் பட்டது.
படங்கள் அனைத்துமே அருமையோ அருமை! கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்போல் இருக்கிறது.
உங்கள் படங்களில் இருந்து ஒரு படத்தைச் சுட்டுவிட்டேன். மன்னிக்கணும்.