ஒரு நாள் விளையாட்டு ஆசிரியர் வகுப்புக்கு வந்து நாளை அனைவரும் ஒரு ரூபாய் கொண்டுவரவேண்டும் என்றார். நாங்கள் ஏன் என்பது போல பார்த்தோம். அடுத்தவாரம் நாம் குடியாத்தம் சென்று சினிமா பார்க்க போகிறோம் என்றார். உற்ச்சாகத்தில் துள்ளி குதித்தோம். அம்மா தென்ன வோலை துடப்பம் விற்ற காசும் , ஆயா பால் விற்ற காசும், எனக்கு கிழே கிடைத்த காசும் அண்ணன்மார்களிடம் வசூலித்த காசும், அப்பா குளிக்கும் போது எடுத்து வைத்து மறந்த காசும் சேர்ந்து என்னிடம் பத்து ரூபாய் சேர்ந்தது.
எங்கள் கிராமத்திலிருந்து குடியாத்தம் நகருக்கு ஆறு கிலோ மீட்டர் தூரம். அன்று பள்ளிக்கு அனைவரும் ஏழுமணிக்கு வந்துவிட்டோம். எப்போதாவது குளிக்கும் முக்குலுகூட அன்று குளித்துவிட்டு வந்தான். குறும்பு புடிச்ச குதாள் மணி புது சட்டை போட்டிருந்தான். அரசாங்கம் கொடுத்த தொள தொள டவுசரை சணல் கயிறை போட்டு இறுக்கி கட்டி இருந்தான் ஆதிமுலம். இருனூருக்கும் அதிகமான மாணவர்கள் அனைவரிடமும் உற்ச்சாகம் கொண்டாட்டம்.
விளையாட்டு ஆசிரியர் வந்து விசில் ஊதினார். யாரும் கேட்பதாக இல்லை. கம்பெடுத்து விளாச ஆரம்பித்தார். அனைவரும் ஓடி ஒடுங்கி அடங்கினர். ஐந்தாம் வகுப்பு முன்னாடி வாங்க அடுத்து ஆறு அடுத்து ஏழு கடைசியா எட்டாம் வகுப்பு பசங்க. ரெண்டு ரெண்டு பேரா நிக்கணும். ஒருத்தர் கை இன்னொருத்தன் புடிச்சிக்கணும். விடக்கூடாது . ரோட்டு ஓரம் தான் நடக்கணும். என்ன புரிதா என்றார். சரிங்க சார் என்றது மாணவத்திரள்.
அனைவர் மனதிலும் பெரும் கனவு. ரஜினி படம் இல்ல சத்தியராஜி படம். இல்ல டி ராஜேந்தர் படம் என்ற பெரும் விவாதம். சட்டையை பிடித்து சண்டை வேறு. ஒரு கனவு தொகுப்பின் நகர்வு அது. ஓ.. என்ற பெரும் சத்தத்தின் பயணம்.
முதல் இரண்டு ஊர்வரை கட்டுக்கோப்பாக சென்றது ஊர்வலம். பின் காலை வெயில் கடுமையானது. நான் வெள்ள எலி சுகுமார் கையை பிடித்து இருந்தேன். உள்ளங்கை வியர்த்து நசநசத்தது. கையை உதறிக்கொண்டேன். முன்னாள் சென்றவன் பின்னாலும் பின்னால் சென்றவன் முன்னாலும் கலையத்துவங்கினர். விளையாட்டு வாத்தியார் சைக்கிளில் முன்னும் பின்னும் சென்று அடக்க முயற்சித்தார் முடியவில்லை. எட்டாம் வகுப்பு மாணவர்கள் எங்களுக்கு முன்னாள் எங்கேயோ நடந்துக்கொண்டு இருந்தார்கள். ஆசிரியர் ஓய்ந்து சைக்கிளை மெதுவாக உருட்டிக்கொண்டு எங்களோடு நடந்துவந்தார். வழிநெடுக்க வீடுகளில் தண்ணீர் வங்கிக்குடித்துகொண்டும் கடைகளில் சோடா வாங்கி குடித்துக்கொண்டும் ஒரு வழியாக சரவணா தியேட்டருக்கு வந்து சேர்ந்தோம்.
அங்கே எங்களுக்கு முன்னாள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பெரும் மாணவர் கும்பல் இருந்தது. எங்களுக்கு முன்பே அங்கு வந்திருந்த அறிவியல் ஆசிரியரும் தமிழ் ஐயாவும் தியேட்டர் வாசலில் நின்றிந்த ஆளிடம் சத்தமாக ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். மேலும் ஒருமணி நேரம் சுடும் வெயிலில் நின்றிருந்தோம். அங்கு எந்த பட போஸ்டரும் ஒட்டி இருக்க வில்லை. ஒரு வழியாக கதவு திறந்தார்கள். ஆர்வம் தாங்காமல் விழ்ந்தடித்துக்கொண்டு உள்ளே ஓடினோம். உட்கார இடம் இல்லை. சுவாசிக்க மட்டுமே காற்று இருந்தது. முதல் அரைமணி நேரம் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தது. அது என்ன படம் என்று தெரியவில்லை. பின் காந்தி வேகவேகமாக நடந்து போனார். ரயில் வண்டி சத்தம். நேரு ஏதோ பேசினார். ஒருமணிநேரம் கழித்து மீண்டும் கதவு திறந்தது. நாங்கள் வெளியேற்றப்பட்டு புது கும்பல் உள்ளே நுழைந்தது.
பெரும் ஏமற்றம். தலைவலியோடு கால்வலி , பசி என்று துவண்டு அழுகொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.
அடுத்தநாள் பள்ளிக்கு செல்லவில்லை . அதற்க்கு மறுநாள் தயங்கி தயங்கி ஆசிரியரிடம் கேட்டபின்பு தான் அந்த படம் "காந்தி " என்று தெரிந்தது.
நேற்று மறுபடியும் அந்த படத்தை பார்த்தேன். மூன்று மணிநேரம் மகாத்மா வாழ்வின் முக்கிய தருணங்களை தொகுக்க முயற்சிக்கிறது படம். தேர்ந்த ஒளிப்பதிவு. தூரக்கட்சிகள் துல்லியமாக நேர்த்தியாக உள்ளது. ஆனால் படத்தொகுப்பும் ஒலிபதிவும் பெரும் சோதனையாக இருந்தது. காந்தியின் வாழ்க்கையை பற்றி சிறிதேனும் அறிமுகம் இல்லாதவர்களுக்கு இந்த படம் புரியது.
'ஜெ'யின் "இன்றைய காந்தி " புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். காந்தியை பற்றிய சந்தேகங்களுக்கும், சுயநலத்துக்காக அவர்மீது சுமத்தப்பட்ட அவதூருகளுக்கும் ஜெ மிக விரிவாகவும் ஆய்வின் அடிப்படையிலும் பதிலளிக்கும் நூல்.
காந்தி நல்லவர் முழுமையனர் என்று சொல்லமுடியாது. அப்படி ஒருவரை இன்னும் கடவுள் படைக்கவில்லை. மனிதனில் குறையுள்ள பகுதி தான் அவனை முன்னகர்த்துகிறது. மகாத்மாவும் அப்படி பட்ட ஒருவர்.
மகாத்மாவின் கருத்துகள் இன்றைக்கானது, எதிர்கலாத்திற்க்கானது. என்றைக்கும்மானது. செவ்வியல் தன்மை கொண்டது. அவர் ஒரு செவ்வியல் மனிதர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக