"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

திங்கள், ஏப்ரல் 26, 2010

திருமண நாள்


அன்புள்ள நண்பர்களுக்கு....

நானும் என் மனைவியும் நலம். அது போல் உங்கள் குடும்பத்தில் அனைவரின் நலன் அவல்.
வரும் வாரம் எனக்கு சந்தோஷமான வாரம்
அந்த வாரத்தில் தான் என் முதல் திருமண நாள் வருகிறது. (30.04.2010)

இந்த ஒரு வருடத்திருமன வாழ்வில் என் மனைவி எனக்கு உணர்த்திய விசயங்கள் அதிகம்.
என் இயலாமைகள்,நான் செய்கின்ற தவறுகளை நான் எடுத்துக்கொள்ளும் விதம், மற்றவர் அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்
என்ற என் எதிர்பார்ப்பு, நான் உபயோகிக்கும் சொற்களின் விளைவுகள், செயல் எல்லாவற்றையும் அக்கறையோடு விமர்சிக்கிறார்.
காதலையும் அன்பையும் வெரும் வார்த்தைகளிலும் வெற்றுக்கற்பனைகளிலும் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருந்தேன். அது நாம் மற்றவர்களுக்கு செய்யும் செயல்களில் இருப்பதை தெளிவு படுத்தி இருக்கிறார்.

பெண்களை பற்றிய என் பொதுவான கருத்துகள் எல்லாம் மறைந்து ஒரு மாயை விலகியது போல இருக்கிறது.
அவர்களை காட்சி பொருளாகவும், கற்பனை செய்து மகிழும் நிழல் பிம்பமாய் பார்க்க மட்டுமே மனம் பழகியிருந்தது.
அதை தெளிவு படுத்தி அவர்களின் இயல்பான நிலைப்பாட்டினையும் உணர்வுகளையும் புரிய வைத்திருக்கிறார்.
உணவின் சுவையும்,நேர்த்தியான ஆடைகள் தரும் அழகான மனநிலையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தியிருக்கிறார்.

மொத்தத்தில் கடவுளுக்கு நன்றி சொல்லுகின்றேன்.

மகிழ்வுடன்

சிவா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக