மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இறங்கி சுற்றுல வழிகாட்டி மையம் எதாவது உள்ளதா என தேடி பார்த்தேன். அப்படியேதும் அங்கு இல்லை. ஆனால் traffic constable ஒருவர் ஒரு cabinனுள் இருந்தார் அவரிடம் விசாரித்ததில், சுற்றி என்னென்ன இடங்கள் இருக்கிறது, பேருந்துகளின் எண்கள் எல்லாவற்றையும் பொறுமையாக கூரினார்.
பேருந்து நிலையத்திலிருந்து தெரிந்த நண்பர் விட்டுக்கு சென்றேன்.ஒரு சிறிய விருந்தோம்பலுக்கு பிறகு அவரே தெரிந்த ஆட்டோ நண்பரை அறிமுகபடுத்தி அதில் ஏறிவிட்டார்.
ஆட்டோ நண்பரருக்கு 40 வயதுக்கு மேல் இருக்கும். பேருந்து நிலையத்தின் அருகிலேயே ஒரு நல்ல ஹோட்லுக்கு அழைத்து சென்றார். நகரத்தின் மையத்தில் உள்ள ஹோட்டல்கள் பழமையானவை விலையும் அதிகம் என்றார் . நாளை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகவேண்டும் வருவீரா என்றேன். கோவிலுக்கு போவதென்றால் காலை 6.00 மணிக்கு போகலாம் கூட்டம் இருக்காது என்றார். சரி என்றேன்.
காலை 5.30க்கு செல்லில் என்னை அழைத்தார். 6.00 மணிக்கு கிளம்பினோம்.
போகும் வழியில் அவரிடம் பேசிக்கொண்டே போனேன். மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில முன்பு பெரிய மாட்டு சந்தை இருந்ததாம், மாடு பேரம் பேசும் போது கை மேல் போடும் துணியின் பெயர் மாட்டுத்தாவணியாம்.
கோவிலுக்கு அருகில் ஒரு நீண்ட தெருவில் பழ மார்க்கெட் இருந்தது. அது இரவு துவங்கி காலையில் முடியும் மார்க்கெட், இரவு முழுவதும் மொத்த வியாபாரம் கோடிகளில் நடக்கும் என்றார். பகலில் அதே தெருவில் வேறு கடைகளும் மளிகை வியாபாரம் நடக்குமாம். ஆச்சிரியமாக இருந்தது. தூங்கா நகரம்.
கிழக்கு வாசலில் என்னை இறகிவிட்டுவிட்டு சென்றுவிட்டார். camera வை கோவிலுக்குள் நுழையும் போதே காவலர்கள் வாங்கிகொண்டனர் .
காலையில் கோவில் அமைதியாகவும் அழகாகவும் இருந்தது. அமைதியான தரிசனம். தமிழகவிருச்சத்தின் அடிமரம் போல இருந்தது கோவில்.
மீனாட்சி சன்னதிக்கு முதலில் சென்றேன். மீனாட்சி அம்மன் அவ்வளவு அழகு. கூட்டம் இல்லை. போ போ என்று தள்ளுவார் இல்லை. சன்னதியை கடந்து போகும் வரை ஒரு தியான நிலையில் இருந்தது மனது.
அதை முடித்து பெருமாள் சன்னதி.
இறுதியாக வெளிமண்டபத்தில் வந்து அமர்தேன். வெவ்வேறு சாமி சிலைகளால் ஆனது அந்த மண்டபம். ஒரு வெளிநாட்டு பெண்மணி அந்த மண்டபம் முழுவதையும் தன செல் போனில் படம் எடுத்துக்கொண்டு இருந்தார். அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் ஒவ்வொரு சிலையையும் ரசித்துக்கொண்டு இருந்தார்.
செல் போனில் படம் எடுக்க 50 ருபாய் கட்டணம். அந்த மண்டபம் வரை படம் எடுத்துகொள்ளலாம். அந்த சிலைகளை வடித்த சிற்பிகள் அந்த சிலைகளின் வழியே எதையோ சொல்ல துடித்திருக்கிறார்கள்.
கோவிலில் உள்ள அனைத்து சிலைகளும் எத்தனையோ நூற்றண்டுகள் , எத்தனையோ மனிதர்கள், மந்திரங்கள், கட்டுப்பாடுகள், பழக்கவழக்கங்களை பார்த்துக்கொண்டு மௌன சாட்சியாய் நிற்கின்றன . ரசிப்பது ஒரு கலை. கலைகள் வாழ்வின் மேல் ஒரு இர்பை ஏற்படுத்துகிறது. பயணங்கள் அதை பூர்தி செய்கிறது.
மதுரையிலிருந்து திருபரங்குன்றம் 8km. மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து திருபரங்குன்றம் அடைந்தேன்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் கோவில் அது . கூட்டம் இல்லை. மலையை குடைந்து மண்டபம் அமைத்து பெரிய பாறைகளில் சிலைகள் செதிக்கி உள்ளார்கள் . முருகன் சிலையும் தனியாக நிற்கவில்லை, ஒரு பெரிய பாறை குடைந்து செதுக்கப்பட்ட சிலை. அதன் அருகில் பிற தெய்வங்களும் செதுக்கப்பட்டுள்ளது. மற்ற சன்னதிகளை விட இது வித்தியாசமாக இருந்தது.

திருபரங்குன்றம்

திருமலை நாயக்கர் அரண்மனை
போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம், அழகான குட்டிச்சுவர் போல் உள்ளது. இதில் அரசாங்கத்தை குறை சொல்வதைவிட மக்களிடம் குறைந்த ரசனை மற்றும் அறியாமை, பாழடைந்துள்ளது அரண்மனை.|
அழகையும் ரசனையும் கொட்டி நிறப்பி எழுப்பி இருக்கிறார்கள். ஒரு ராஜா இந்த அரண்மனையில் தன் சொந்தங்களோடு கூடி வாழ்ந்திருக்கிறார்.
பெரிய பெரிய தூன்கள் , வளைவுகள் என அழகிய அரண்மனை.
மதுரையோடு முடிந்தது இந்த பயணம். ஊர்வந்து சேர்ந்ததும் மனமும் உடலும் லேசானது போல இருந்தது. அதன் பின் பயணத்தின் நினைவுகள் பசித்த பறவைகள் போல மனத்தில் சுற்றித்திரிகிறது.
இப்போதும் தொலைந்து போகவே துடிக்கிறது மனது ..........,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக