"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

தென் பயணம் -3 - திருச்செந்தூர்


திருநல்வேலியில் இரவு தங்கினேன். மறுநாள் காலை 6.30 மணிக்கு திருச்செந்தூர் செல்ல  passenger இரயில் இருந்தது.  ஒரு passenger இரயில நாம புதுசா ஏறினா யாருமே தெரியாத ஒரு கல்யாண வீட்டுக்கு போனமாதிரி இருக்கும் . பள்ளி செல்லும் பசங்க பேசி சிரிக்கிறாங்க , ரெண்டு பெண்மணிகள் அவங்க தெருகதை பேசிகிட்டே வந்தாங்க , ஒரேஒரு தின தந்தி பேப்பர் நாலா  பிரிச்சி ஐந்து பேர் படிக்கிறாங்க , இன்னும் இன்னும் பல நிகழுவுகள், ஆனால் எதுக்கும் சம்மந்தம் இல்லாம நான் அமர்திருந்தேன்.

 திருச்செந்தூர் இரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ பிடித்து கோவிலுக்கு சென்றேன். வளர்ச்சி அடையாத ஊர் போலவே  இருந்தது  திருச்செந்தூர். போகும் போது கடல் திடீரென கண்ணுக்கு தெரிந்து மறைந்தது. இளம்பெண் உரசி கடந்தது போன்ற உணர்வு. கடல் பகுதி அல்லாது  நிலப்பரப்பிலிருந்து வரும் என்னை போன்றவனுக்கு பிச்சை எடுத்தாலும் காசுகிடைக்கும் ஆனா சொத்தே வித்தாலும் கடலை பார்க்கும் சுகம்மும் கடல் காற்றின்  இதமும் கிடைக்காது.

காலையில  நல்ல பசி. கோவில் தெருவின் ஆரம்பத்தில் ஒரு ஐயங்கார் ஹோட்டல் இருந்தது. நெய் தோசை சாப்பிட்டேன். என்னப்பா சுவை அடடா.  தோசை எப்படி இருக்கனும் தெரிமா கோபாலு , வெளில மொறு மொறுன்னு தங்க நிறத்தில இருக்கனும் , உள்ள மெதுவா இருக்கனும், ஆனா தொட்டா  ஒடைய கூடாது நம்ம ஐயங்கார் ஹோட்டல் தோசை மாதிரி.

சாப்பிடாம  கோவிலுக்கு போகலாமுன்னு நினைச்சேன் ஆனா பசி கடவுளோட மிகபெரிய ஆயுதம். அதுக்கு முன்னாடி நம்ம கடவுள் பக்தி ரொம்ப சின்னது.

 திருச்செந்தூர் முருகன் கோவில் முழுவதும் எளிமையான மனிதர்கள், கிராமத்து பின்னணி  மனிதர்கள் நிரம்பி இருந்தனர். முருகனும் , கோவிலும் , அதை ஒட்டி உள்ள கடல் அவர்களின் வாழ்வியலோடு இணைந்திருந்தது.
எதாவது ஒரு சினிமாவில் கோயில் பின்னணி கொண்ட கட்சிகளும் , அது அந்த மக்கள் வாழ்வில் பினைந்திருபதையும் காட்டினால் அது எதார்த்தமான தென் தமிழகத்தை பிரதிபளிக்கும்.

மிகபெரிய கோவில். சுசிந்தரம் போலவே வெண்ணிற கோபுரம். கோபுரம் முழுக்க அதே போல மற்றும் அதே சிலைகள். அழகிய மண்டபங்கள் , நடை பாதைகள்.

முருகனை தரிசிக்க இங்கும் சட்டையை கழட்டவேன்டும். நான் போனபோது கூட்டம்  குறைவாக இருந்தது. எளிமையாக தரிசனம் கண்டேன். முருகன் சிலை முழுவதும் திருநீர் பூசி இருந்தார்கள். பரவசத்தில் என்ன வேண்டுவது என்று தெரியவில்லை.

எங்க ஊருக்கு திரும்பியதும் ஒரு நண்பர், திருச்செந்தூர் முருகனை நம்ம ஆசைபட்டால் போகமுடியாது சார் , முருகன் ஆசைபட்டால் தான் நம்ம அங்க போக முடியும் என்றார். நானும் சரி ஏதாவது நல்லது நடந்தால் சரி என நினைத்துகொண்டேன்.

தரிசனம் முடித்து நேராக கடலுக்குத்தான் சென்றேன். 1/2 km கடலினுள் நடந்தே  போகலாம். முதலில் பயமாக இருந்தது போக போக சந்தோசம் தாங்கவில்லை. ஒரு 45 வயதுக்காரர் அவர் மனைவியை சற்று அணைத்தார் போல கடலுக்குள்  அழைத்து சென்றார், அந்த அம்மாவிற்கு ஒரே வெக்கம்.
இளம்தம்பதியர், குழந்தைகள் , குடும்பத்தினர் , பெரியவர்கள் அனைவரும் சந்தோசமாக குளித்துக்கொண்டே இருந்தனர். அலைகள் நம்மை கடக்கும் போது நம் கால்கள் தரையில் இருக்ககூடாது, சற்று எம்பி குதித்தாள் அலைகள் நம்மை கடந்து போவிடும், இல்லையெனில் கிழே விழவேண்டியது தான் . ஒரு மணி நேரம் குளித்துவிட்டு வெளியில் வர மனம் இல்லாமல் கரையிலேயே சிறிதுநேரம் அமர்ந்திருந்தேன்.

மொட்டை அடிக்கும் இடத்தில் ஒரு பெரிய தொட்டியில் நல்லநீர் இருந்தது. அங்கே குளித்துவிட்டு உடைகளை மாற்றிக்கொண்டேன். அங்கிருந்து வெளியில் வரும்போது வழியில் ஒரு கிழவி பதநீர் விற்றுக்கொண்டு இருந்தார். ஒரு கிளாஸ் 6 ரூபாய் , ரெண்ட்டு கிளாஸ் குடித்தேன். போதை ஏறுமா என்று கேட்டேன், கிழவி சிரித்துக்கொண்டே " போதை ஏறுமானா கேக்கிக " ஏறாது ஏறாது என்றார்.  திருச்செந்தூர் சுற்றி பனைமரம் அதிகம் என்பதால் பணம்கர்கண்டு , பணவெல்லாம் விற்கும் கடைகள் அதிகம் உள்ளது.



























மாலை 3.00 மணிக்கு மதுரைக்கு போகும் பேருந்தில் ஏறினேன்.திருச்செந்தூர்லிருந்து  மதுரைக்கு 3 மணி நேரம் ஆகும் என்றார்கள்.
பேருந்து தூத்துக்குடி வழியாக சென்றது. தூதுக்குடியை சுற்றி வறண்ட நிலப்பரப்பு . பசுமை இல்லை. வழியில் உப்பலங்களை பார்த்தேன். தூத்துக்குடி வரை ஒரு வழி சாலை, அங்கிருந்து மதுரைக்கு நான்கு வழி சாலை. பேருந்து மாலை 7 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து அடைந்தது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக