மங்களூர் வளர்ந்து வரும் நகரம். கடந்த 20 ஆண்டுகளில் புதிய கட்டிடங்கள் வானை நோக்கி வளர்ந்து நிற்கிறது. இன்றைய சுழலில் பெரிய பெரிய Apartments கள், IT நிறுவங்கள் , சிட்டி சென்டர் போன்ற mallகள், இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், குளிருட்டப்பட்ட நகை கடைகள் இருந்தாள் வளர்ச்சி அடைந்த நகரமாக எடுத்துக்கொள்ளலாம்.
இவை அனைத்தும் மங்களூரில் உள்ளது.
ஒவ்வொரு கட்டிடங்களும் மலை முகடுகளில்
concrete மரங்களை போல நிற்கிறது. நில சரிவு ஏற்பட்டால் கட்டிடங்கள் சரியாத என அண்ணனிடம் கேட்டேன். இங்கு உள்ள மண் கெட்டியான மொரம்பு வகையை சார்ந்தது , இதுவரை பெரிய அளவில் மண் சரிவு ஏற்படவில்லை ஆனால் இந்நிலை நீடித்தால் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.கட்டிட வேலைக்கு வழக்கம் போல ஒரிசா, பீகார், அசாம் மாநில தொழிலாளிகள். ஒரு பிளாட்டின் விலை குறைந்தது 40 லட்சத்தில் துவங்குகிறது, வழக்கத்துக்கு மாறாக மேலே இருக்கும் பிளாட்டுகள் விலை அதிகம். ஏனெனில் நல்ல view கிடைக்கும் , மழைகாலங்களில் புழு பூச்சி தொல்லை இல்லை.
இங்கு தரமான கல்விநிலையங்கள் அதிகம் உள்ளதாள் மாநிலம் முழுவதிலிருந்தும் படிப்பதற்காக மாணவர்கள் அதிகம் வருகிறார்கள்.
Kadri Manjunatha temple
நகரத்தில் அமைந்துள்ள இரண்டு முக்கியமான கோவிலுக்கு சென்றோம். அதில் ஒன்று கத்திரி மஞ்சுநாத கோவில். இந்தியாவின் பழமையான சிவன் கோவில். முதலில் புத்த மத கோவிலாக இருந்து பின்பு பத்தாம் நூற்றாண்டில் சிவன் கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான் பார்த்தவரை சிவன் கோவில்களில் மூலஸ்த்தானத்தில் லிங்கம் இருக்கும் ஆனால் இங்கு சிவனின் முகம் மட்டும் கழுத்துவரை உள்ளது. சாமியை நேருக்கு நேர் பார்த்து வணங்குவதை விட ஒருமுறை சாமியை பார்த்துவிட்டு கண்களை மூடி மனதுக்குள் நினைத்து வணக்குபவர்கள் அதிகம். அதிகமா பள்ளி சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கோவிலுக்கு வந்திருந்தார்கள்.
Padmanatha Lokeshwara என்ற சிலை இந்தியாவின் மிகச்சிறந்த வெண்கல சிலை என்று போர்ட் வைத்துள்ளார்கள்.
நந்தி வாயிலிருந்து தீராமல் ஊற்றும் நீரை ஒரு குவளையில் கொண்டுவந்து அருகில் இருக்கும் லிங்கத்தின் மேல் ஊற்றி வழிபடுகிறார்கள்.
கோவிலை தொடர்ந்து ஒரு மலையின் மேல் ஏறினால் பெரிய அஹனுமான் சிலையும் அதன் அருகில் கோவிலும் உள்ளது.
அதை தொடர்ந்து மேலே ஏறினால் காடு போன்ற பகுதி உள்ளது . அங்கு பாண்டவ குகைகள் உள்ளது. இதன் பின் புலம் தெரியவில்லை. தொடர் மழையினால் அந்த இடம் பாசி படர்ந்து வண்ணம் தீட்டியது போல இருந்தது. கண்ணுக் தெரியாத எண்ணற்ற பறவைகளின் ஒலியும் , மழையால் விழித்த வண்டுகளின் ரீங்காரமும் மொத்தமாக சேர்ந்து ஒரு இசை நிகழ்வு போல இருந்தது. இங்கு தனியாக அமர்ந்து கொண்டாள் சில்லென வீசும் காற்றும் , இந்த இசையும் உங்களோடு பேசிக்கொண்டே இருக்கும் .
இந்த கோவில் Kudrolli எனும் இடத்தில் உள்ளது .ஸ்ரீ நாராயண குரு என்பவரால் இந்த கோவில் கி.பி .1912 ல் கேரள முறைப்படி கட்டப்பட்டது. பின்பு கி.பி .1991 ல் புதுபித்து சோழர் கால முறை படி கட்டி இருக்கிறார்கள். கோவில் எங்கும் தங்க முலாம் பூசப்பட்டது போல் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. செயற்கையான ஒரு பகட்டுத்தன்மை இருந்தது. இதுவும் சிவன் கோவில்.