Kateel Durga Parameshwari Temple
மங்களுரிளிருந்து 28km தொலைவில் உள்ளது இந்த கோவில். சாலை மலைக்காடு வழியே வளைந்து நெளிந்து சென்றுகொண்டே இருந்தது.
ஒரு மலை முகட்டில் நின்று பார்க்கும் போது தூரத்தில் ரயில் ஒன்று வேலை முடிந்து வயலின் நடுவே வரப்பில் நடந்து போகும் பெண்களை போல நடந்து கொண்டிருந்தது.
வழியெங்கும் சலசலத்து வழிந்தோடும் மழை நீர் ஓடைகள். தினசரி காடுகள் அழிப்பு, பூமி வெப்பம் ஆதல், காயிந்து கிடக்கும் ஆறுகள் , மழை இல்லாமல் வறட்சி என எதாவது ஒரு செய்தி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கிறது. நாம் அழிவை நோக்கி போகிறோம் என்ற எண்ணம் மனதில் ஆழமாகிக்கொண்டே இருக்கிறது. இது போல மரங்களையும், மலையில் வழிந்தோடும் மழை நீரையும் காணும் போது மனம் நம்மமை அறியாமல் நம்பிக்கையில் லைக்கிறது. காடுகளின் வழியே நானும் வழிந்தொடிக்கொண்டு இருப்பது போல இருந்தது. வழியில் டீ கடை இருக்கிறதா என தேடினோம். ஆனால் வழியில் நிறைய BAR கள் இருந்தது. ஜெயமோகன், யானை டாக்டர் கதையில், காடுகளில் இளஞர்கள் குடித்துவிட்டு உடைத்து எறியும் பாட்டில்களை யானைகள் மிதித்து அதன் கால்கள் சேதம் அடைந்து உயிர் இழப்பதை குறிப்பிட்டது ஞாபகம் வந்தது.
"காடு, மரங்களின் வீடு , ஒவொரு மரமும் ஒரு வீடு."
Kattel என்றால் நதியின் இடை என்று பொருள். காட்டு நதி நந்தினி. அதன் இடையில் அமர்ந்துள்ளது போல கோவில் உள்ளது.
திடீர் என காட்டிலிருந்து பாய்ந்து வரும் மலை பாம்பு போல பாய்ந்து வருகிறது நந்தினி ஆறு. கோவிலின் இரு பக்கவாட்டிளும் ஆறு கடந்து செல்கிறது. முன்பு பார்த்த மழை நீர் ஓடைகள் இந்த நதியின் விழுதுகள் போலும்.
கோவில் பழைய கேரளக்கோவில் வடிவில் உள்ளது. துர்கா பரமேஸ்வரி வீரிருக்கிறாள்.
கோவிலினுள் புதுப்புடவை, தேங்காய் மற்றும் சில பொருள்களை எரித்து யாகம் செய்துகொண்டு இருந்தார்கள். ஒரே புகை மூட்டம்.
"சாமிகள் நம்முன் எது நின்றாலும் நம் வேண்டுதல் ஒன்றே". வழக்கம் போல என் வேண்டுதல்களை முனுமுனுத்துக்கொண்டே கோவிலை சுற்றி வந்தேன். அதிகம் கிராமத்து மனிதர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் கோவிலில் இருந்தார்கள்.
ஆற்றை கடக்க சிறிய பாலம் உள்ளது. அந்த பாலத்தில் நின்று கொண்டு ஆற்றின் வேகத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன். மழை நீரில் ஆறு நனைந்து கொண்டே இருந்தது. மழை அதிகமாக அதிகமாக ஆற்றில் நீரின் அளவும் வேகமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஆனால் விதிகளின் படி கனம் கூட க்கூட நடையின் வேகம் குறைய வேண்டும் தானே, ஆனால் நதிக்கு அது செல்லாது போலும்.
மழை நின்றது. வீட்டுக்கு திரும்பினோம்.
Udupi Srikrishna Temple
எல்லோரும் அறிந்த பெயர். உடுப்பி ஒரு வளர்ந்து வரும் சிறிய நகரம்.
மங்களுர்லிருந்து 60 km தூரத்தில் உள்ளது. மங்களுர்லிருந்து உடுப்பிக்கு நான்கு வழி சாலை.
15 நிமிடத்துக்கு ஒரு தனியார் பேருந்துகள் உள்ளது. ஒரு மணி
கோவிலை அடைந்ததும் சிறிய ஏமாற்றம் தான். சிறிய கோவில் கூட்டமும் அதிகம் இல்லை .
விசேஷ நாட்களில் சாமி பார்க்க மணிக்கணக்காக நிற்க வேண்டும் போல.
கிருஷ்ணர் சிறிய கரிய நிற சிலை. தங்கம், வைரம் , இன்னும் சில கற்கள் அவர் மேலே ஜொலித்தது.
ஒரு வெள்ளியால் ஆன ஜன்னல் வழியே சாமியை பார்க்க வேண்டும்.
சில பெண்கள் குழு சாமி முன் அமர்ந்து பஜனை பாடிக்கொண்டு இருந்தனர். சன்னிதானத்தை
விட்டு வெளியில் வந்ததும் 50 ரூபைக்கு பிரசாத பொருட்களை வாங்கினோம். அதில்
லட்டு சுவையாக இருந்தது .
மங்களூர் சுற்றி நான் பார்த்த இந்த கோவில்களுக்கு எல்லாம் என் அண்ணன் தான்
அழைத்துச்சென்றார். அவருக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக