தமிழ் சமுகத்தில் பிறந்த , மகத்தான கலைஞ்சர்களில் ஒருவர் இளைய ராஜா.
ஒரு தனிப்பட்ட மனிதனை பற்றி பேச வேண்டும் என்றாள் அவரின் சொந்த வரலாற்றை பற்றி பேசலாம் அல்லது அவரிருக்கும் துறையில் அவர் கொண்டுவந்த மாற்றங்கள் மற்றும் சாதனைகள் பற்றி பேசலாம் அல்லது சமுகத்தின் மகிழ்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்பை பேசலாம்.
நான் அவர் திரை இசையில் கொண்டுவந்த மாற்றங்களையும் சமுக மகிழ்ச்சிக்கு அவர் பங்களிப்பையும் மாற்றி பேச விழைகிறேன்.
1976 ல் அவர் "அன்னக்கிளி" படத்தின் மூலம் திரை இசையில் நுழைந்தார்.
தமிழ் திரை துறை நம் நாடக மரபின் நிட்சி எனலாம். முன்தன் முதலில் திரைப்பட தொழில் நுட்பம் நமக்கு அறிமுகம் ஆனா போது நமக்கு நன்கு பரிச்சியமான தெருக் கூத்தை அடிப்படையாக கொண்டு திரை படங்களை உருவாக்கத்துவங்கினோம். பின்பு அரங்க அமைப்பு, இசை , கதை , ஓவியம் என்று கூட்டு கலையாக தமிழ் திரைப்படங்கள் பரிணமித்தது.
அதில் இசை பிரதானம்.
1931ல் முதல் பேசும் படம் " காளிதாஸ் " வெளி வந்தது. அதில் 50 பாடல்கள் இடம் பெற்றன. அனைத்தும் கர்னாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டது.
பின் நாட்டுபுற இசை, கர்னாடக இசை , இந்திய மரபிசை , மேற்கத்திய இசை அனைத்தும் ஒன்று கலந்து தனியான ஒரு திரை இசை மரபு ஒன்று உருவானது.
1950, 60 களில் திரை இசையில் உச்சத்தை தொட்டவர்கள் விஸ்வநாதன் - ராமமுர்த்தி அவர்கள்.
70 வதுகளில் தமிழ் திரை இசை ஒரு தொய்வை அடைந்தது. இந்தி பாடல்கள் இங்கு அதிகம் ஒலிக்கத்துவங்கியது.
சரியான தருணத்தில் இளைய ராஜா அறிமுகம் ஆனார்.
அவருக்கு முன்பிருந்த இசை அமைப்பாளர்கள் பாடல் வரும் தருணத்தை மட்டும் கேட்டு மெட்டமைத்து கொடுப்பார்கள்.
ஆனால் ராஜா அப்படி அல்ல முழு கதையையும் கேட்ப்பார். அதை காட்சிகளாக விரியச்செய்து அந்த காட்சி க்கு ஏற்றார் போல இசையை உருவாக்குவார்.
பழைய படங்களில் உணர்சிகளை வெளிக்காட்ட உச்ச ஒலியில் வசனங்கள் பேசுவார்கள் , மிகை நடிப்பில் கொந்தளிப்பார்கள். படம் பார்ப்பவரும் அந்த உணர்சிகளை அதே வேகத்தில் அடைவர்.
80 பதுகளில் தமிழ் திரைப்படங்கள் எதார்த்தத்தை நோக்கி நகரத்துவங்கியது.
அந்த படங்களில் கட்சிகளுக்கு தேவையான உணர்வுகளை ராஜாவின் இசை ரசிகனின் மனதில் உருவாக்கியது.
பின்னணி இசைக்கு தனி மொழியை உருவாக்கி திரை படத்தில் அதன் முக்கியத்துவத்தை மேம்படுத்தியவர் ராஜா.
புதிய திரை மொழியோடு திரை துறையில் நுழைந்த எண்ணற்ற
இயக்குனர்களின் கனவுகளை இசையாக செதிக்கியவர் ராஜா.
பாரதிராஜா, மணிரத்தினம் , பாக்கியராஜ் , பாலுமகேந்திரா , பாலா , மிஸ்கின் பட்டியல் நீளும்.
பாடல்கள் பற்றி ஒரு சாதாரன ரசிகனாக சொன்னால் அவை நேரடியாக அகத்துடன் பேசுபவை.
பாடலை ஒலிக்கவிட்டு நான் வேறு ஏதாவது வேலை செய்து கொண்டு இருப்பேன். என் கவனம் அதில் இருக்காது ஆனால் என் அகம் அதை
கேட்டுக்கொண்டு இருக்கும். எதோ ஒரு கணத்தில் அந்த பாடலை நான் முணுமுணுத்துக்கொண்டு இருப்பேன்.
மனிதனின் அகம் கேட்காத எந்த பாடலும் சில நாள் கழித்து மனதிலிருந்து அழிந்து விடும். மாறாக ராஜாவின் பாடல்கள் எப்போதும் கேட்டுக்கொண்டு இருப்பதற்கு காரணம் அது நம் ஆன்மாவோடு பேசுபவை.
தீரா துயரத்திலிருந்து, கொள்ளும் தனிமையிலிருந்து நம்மையறியாமலே நம்மை மீட்டெடுப்பது ராஜாவின் இசை.
ராஜாவின் இசையை காட்சிகளாக பார்க்காதிர்கள், ஏனெனில் காட்சியில் நாயகனும் நாயகியும் வெறுமனே மரத்தை சுற்றி ஆடிக்கொண்டு இருப்பார்கள் , ஆனால் இசை வேறு தளத்தில் அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டு இருக்கும்.
ராஜாவின் 5 நிமிட பாடலை எந்த கவன சிதறலும் இல்லாமல் நம்மால் முழுமையாக கேட்க முடிந்தால் அது நமக்குள் அற்புதங்களை நிகழ்த்திவிடும்.
அந்த மகத்தான மனிதனை போற்றுவோம்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக