சமிபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். நம் எண்ணங்களின் வலிமை பற்றிய கருத்துக்கள் அதில் இருந்தது. நமக்கு என்ன தேவையோ அதை பற்றி நாம் ஆழமாக சிந்திக்கும்போது அந்த எண்ணம் நம்மையும் அந்த கருத்தை நோக்கி இயக்கம். மேலும் அதே கருத்தையுடைய மற்றவர்களையும் உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும்.
நானும் ஆசிரியர்களான அண்ணனும், அண்ணியும் அறக்கட்டளை வழியாக பள்ளி மாணவர்களுக்கு உதவுவதை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது பள்ளிகுப்பம் தொடக்கப்பள்ளி பற்றியும் அதன் தலைமை ஆசிரியரை பற்றியும் கூறினார்கள். நாங்கள் பேசிமுடித்ததும் அவரை சந்திக்க சென்றேன்.
பள்ளிகுப்பம் என் கிராமத்துக்கு அருகில் உள்ள கிராமம். பள்ளிகுப்பம் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சேகர். இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு படிப்பதற்க்கு தேவையானா பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் , ஜாமன்ரி பாக்ஸ், செருப்பு , புத்தக பை போன்ற அனைத்து பொருட்களையும் கொடுக்கிறது. ஆனால் கல்வி ஒரு ஆசிரியரின் தனிப்பட்ட விருப்பத்தினாலும், பிள்ளைகளின் மீதானா தணியாத அக்கறையாலும் மட்டுமே அவர்களுக்கு அளிக்கப்படுக்கின்றது. அப்படியான ஒருவர் திரு சேகர்.
ஸ்ரீ பெரும்புதூர் ஹுண்டாய் நிறுவன நபர்களிடம் பேசி ஒரு வருடத்துக்கான சிறுவர் ஆங்கில நாழிதள் வாங்கி ஆங்கில அகராதி வைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார். சாலை அமைக்கும் L & T நிறுவனத்திடம் பேசி மாணவர்களுக்கு படிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்திருக்கிறார். பழைய கணினிகளை பெறுவதற்கு இன்போசிஸ் நிறுவனத்திற்கு கடிதங்களை அனுப்பி இருக்கிறார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிள்ளைகளின் தனித்திறமை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்சிகளை அந்த பள்ளி ஆசிரியைகள் நடத்துகிறார்கள். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திருக்குறளை தனிகவனமெடுத்து சொல்லிக்கொடுக்கிறார்கள். அதே போல ஒரு வருடத்தில் அத்தனை கலாச்சார பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள். நான் சென்ற போது ஓணம் பண்டிகைக்காக மாணவர்களும் ஆசிரியைகளும் இணைந்து பூக்கள் மற்றும் தானியங்களை கொண்டு உருவாக்கிய ரங்கோலி கோலத்தின் புகைப்படத்தை காட்டினார்.
அவரிடம் பேசிக்கொண்டு இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு பக்கபலமாக அவருடன் பணிப்புரியும் ஆசிரியைகள் இருக்கிறார்கள். அவருக்கு நீண்டநாளாக ஒரு வகுப்பறையை Smart Class ஆகா மாறவேண்டும் என்ற ஆசை இருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக உள்ளூர் MLA விலிருந்து பலபேரிடம் பேசி இருக்கிறார்.
ஒரு Smart Classஐ உருவாக்க கணினி , ப்ரொஜெக்டர், ஸ்க்ரீன் , ஆடியோ சிஸ்டம், அதை பொருத்துவதர்க்கான பொருட்கள் , பேன், லைட் மற்றும் எலெக்ட்ரிக் சாமான்கள் , அதை பொருத்துவதற்கு கூலி என்று பெரும் செலவு பிடிக்கும்.
அரசு அளித்த மடி கணினியும், ப்ரோஜெக்டர்ரும் மட்டும் அவரிடம் இருந்தது. அனைத்தும் குறைந்த செலவில் செய்தால் கூட 30,000 ரூபாய் செலவாகும். நீலம் அறக்கட்டளை முடிந்தவரை உதவுவதாக கூரினோம்.
அவர் உடனயாக வேலையை துவங்கினார். நான் சவுதி திரும்ப வேண்டி இருந்தது. பணத்தை நாங்கள் அளித்துவிடுகிறோம். நீங்கள் செய்து கொள்ளுங்கள் என்றேன். இல்லை வகுப்பு துவங்கும் போது நீங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றார். அதே வாரத்தில் அவர் புது வீட்டுக்கு கூடி போவதாக இருந்தது. அந்த வேலையை விட்டு விட்டு இந்த வேளையில் இரவு ஒரு மணி இரண்டு மணி என்று வேலை செய்து குறித்த நேரத்தில் பணி முடிந்து விட்டது. அதற்காக இரண்டு எலக்ட்ரிசியன்கள் மற்றும் அந்த ஊர்க்காரர் ஒருவரும் உழைத்திருக்கிறார்கள்.
மொத்தம் 27,000 ரூபாய் செலவானது. அதில் 15,000 ரூபாய் நீலம் அறக்கட்டளை கொடுத்தது. பள்ளியின் சார்பாகவும் மேலும் சிலரும் உதவி இருக்கிறார்கள். அனைவரின் கூட்டு முயற்சியாக அந்த பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் உருவாக்கப்பட்டது.
அதன் துவக்க விழா மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நானும் மனைவியும் அண்ணனும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டோம். சுற்றி உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர் .
குழந்தைகள் நடனம், பரதநாட்டியம் , பாடல் என்று அசத்தினர். நடனம் ஆடியா குழந்தைகள் அவர்களிடம் இருந்த அதிகபட்ச நல்ல துணியை உடுத்தி இருந்தார்கள் ஆனால் அதுவும் பழைய துணியாக இருந்தது மனதை நெகுழ்த்தியது. சில மாணவர்கள் ஐம்பது திருக்குறளை சொல்லி அசத்தினர்.
இறுதியில் அவர்கள் நீலம் அறக்கட்டளையையும் என் நண்பர்களையும் வாழ்த்தி பாடியது வாழ்வில் இதுவரை உணராத புதுவித மகிழ்ச்சியை உணரச்செய்தது.
திரு. சேகர் செவ்வாய் கிரகத்தில் வெண்கலம் இறங்கும் வீடியோ கட்சியை திரையில் ஓடவிட்டார். அந்த வகுப்பு இனிதே துவங்கியது.
மதியம் சிறப்பான விருந்து அளித்தனர். அதை ஆசிரியைகள் தங்கள் வீட்டிலேயே சமைத்து கொண்டுவந்திருந்தனர்.
அன்று மனதும், வைரும் நிறைந்திருந்தது. அங்கிருந்து கிளம்பும் போது அனைத்து குழந்தைகளும் எங்களை சூழ்ந்து கொண்டனர். நீங்க நல்ல டான்ஸ் அடுனிங்க, நல்ல பேசுனிங்க்க என்று சொல்ல சொல்ல அவர்கள் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. நீங்க அடுத்த வருஷமும் வாங்க என்றனர்.
நீலம் அறக்கட்டளையின் உதவியை வெளியில் யாருக்கும் சொல்லவேண்டாம் என தலைமை ஆசிரியரிடம் கேட்டுக்கொள்ளலாம் என்று எண்ணினேன். ஆனால் அவர் பேசும்போது ஒரு விஷயத்தை சொன்னார் . இந்த நிகழ்வை கேள்வி பட்ட மாலத்தீவில் வேலை செய்யும் அவர் நண்பர்கள் அவர்களின் கிராமப்பள்ளியை தத்தெடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வை அவர் ஆறு செய்தித்தாள்களுக்கும் நான்கு வார இதழ்களுக்கும் அறிவித்திருக்கிறார் . அதில் இந்து மற்றும் தினமணி பிரசிரித்துள்ளது.
இன்று எங்கள் கிராமத்துக்கு அனைத்து ஆங்கில பள்ளியில் இருந்துமே பேருந்துகள் மற்றும் வேன்கள் வந்து பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்கின்றன. ஒரு கிராமம் குறைந்தது மூன்றிலிருந்து நான்கு லட்சம் வருடத்துக்கு அருகில் உள்ள ஆங்கில பள்ளிகளுக்கு நன்கொடை மற்றும் கட்டணமாக செலுத்துகின்றன. அதில் கொஞ்சம் செலவழித்து உள்ளூர் அரசு பள்ளிகளை அவர்கள் மேம்படுத்தல்லாம். அதனால் கால விரயம் பணவிரையம், கல்வி விரையம் அனைத்தையும் தடுக்க முடியும்.
நீலம் அறக்கட்டளை துவங்கும் போது கிராம புற பள்ளி மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று பட்டும் எண்ணம் இருந்தது. ஆனால் எப்படி எந்த விதத்தில் என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் இன்று ஒரு தெளிவு இருக்கிறது. அடுத்து இரண்டு பள்ளிகளுக்கும் நுலகம் அமைக்கும் திட்டம் இருக்கிறது. என்னை சுற்றி நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள்.
எங்கள் பள்ளிக்கு உதவி செய்து, எங்கள் பள்ளியையையும், பள்ளி ஆசிரியர்களையும் பெருமைபடுத்திய நீலம் அறக்கட்டளைக்கு மிகவும் நன்றி.
பதிலளிநீக்குK.சேகர், தலைமையாசிரியர், ஊ.ஒ.தொ.பள்ளி, பள்ளிகுப்பம்.
இந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்டு அதே கிராமத்தில் படித்து இன்று பெங்களூருவில் பொறியாளராக பணியாற்றிவரும் திரு.கிருஷ்ணமூர்த்தி என்பவர் இன்று என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தானும் பள்ளிக்கு ஏதாவது செய்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.
பதிலளிநீக்கு