"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், செப்டம்பர் 24, 2015

நீலம் அறக்கட்டளை -2 அணங்காநல்லூர் ஊரட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி


நீலம் அறக்கட்டளை வழியாக கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவவேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம்.

கிராமத்தில் படித்து நகரத்துக்கு மேற்ப்படிப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு முக்கியமாக மூன்று பிரச்சனைகள் இருக்கின்றன .

ஒன்று ஆங்கிலம் , இரண்டு நகரத்தில் நிலவும் பொது கலாச்சாரம்  மூன்று தொழில் நுட்பம்.

ஆங்கிலம் மிக முக்கிய பிரச்சனை , அது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் நகரத்தில் நிலவும் கலாச்சாரத்தோடு தன்னை பொருத்திக்கொள்வது கிராமத்து மாணவர்களுக்கு பெரும்பாடு. அன்றாட பழக்கவழக்கங்கள் , பேசும் முறை , எண்ணங்கள் அனைத்திலும் பின் தங்கி உள்ளனர். அதேபோல தொழில் நுட்பம். கிராமத்திலிருந்து நகரத்துக்கு படிக்கச்செல்லும் மாணவர்களுக்கு ஒரு நவீன செல்பேசியில் உள்ள அத்தனை செயலி பற்றியும் தெரியும். ஆன்லைனில் பொருட்களை கூட வாங்குகிறார்கள். ஆனால் அதே கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு அதிகபட்சம் டிவி தவிர வேறெதுவும் அறிய வாய்ப்பு இல்லை.

இந்த மூன்று கருத்துக்களை மனதில் கொண்டு நான் படித்த அணங்காநல்லூர் ஊரட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
க்கு சென்றேன். அங்கு  தலைமை ஆசிரியராக இருப்பவர் திரு.பீட்டர். அவரிடம் என் எண்ணங்களை கூறினேன். அவர் பெருமகிழ்ச்சி அடைந்து என்னையும் எங்கள் நோக்கத்தையும் வரவேற்றார். அவரிடம் நீண்ட நேரம் உரையாடினேன். அரசு அளிக்கும் சலுகைகளையும் அதன் போதாமைகளையும் பள்ளியின் தேவைகளைப்பற்றியும் விவரித்தார். நீங்கள் ஒரு பள்ளி அல்லது உங்கள் வசதிக்கேற்ப இரண்டு பள்ளிகளை தேர்வு செய்து அதன் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுங்கள் என்று அறியுரை கூறினார்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித்திட்டம் இன்று நடைமுறையில் உள்ளது. ஆனால் அந்த பள்ளியில் முன்னமே உள்ள ஆசிரியர்களை கொண்டு ஆங்கில வழி கல்வியை செயல் படுத்தவேண்டும். அந்த அளவுக்கு இந்த பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை, அதனால் நான் பெரும்முயற்சி எடுத்தும் எங்களால் ஆங்கில வகுப்புக்களை தொடங்க முடியவில்லை என்று தலைமை ஆசிரியர் கூறினார். நான் அதற்காக உதவுவதாக வாக்களித்தேன்.

அடுத்தவாரம் ஒரு தகுதியான ஆங்கில ஆசிரியையை நேர்முகத்தேர்வு செய்து பணிக்கு அமர்த்தினோம். மூன்றாம் வகுப்புபை ஆங்கில வழி முலம் பாடம் எடுப்பது என்று முடிவானது. அதற்காக ஒரு பிரத்தியோக வகுப்பறையை தலைமை ஆசிரியர் ஏற்பாடு செய்திருந்தார். செப்டம்பர் முதல் தேதியில் இருந்து ஆங்கில வகுப்பு செவ்வனே நடக்கின்றது.

நானும் என் மனைவியும்  ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களோடு ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம் . நாங்கள் எதிர்பார்த்ததைவிட மாணவர்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர். அப்துல் கலாமை பிடிக்குமா என்று கேட்டேன். அனைவரும் கை உயர்த்தினர். ஏன் பிடிக்கும் என்று ஒவ்வொருவராக சொல்லச்சொன்னேன். அவர் எளிமையானவர் என்று பதில் சொன்ன பையனிடம் எளிமை என்றால் என்ன என்று கேட்டேன். அவன் சிரித்தான். இன்னொரு பையன் அவர் குறைந்த எடையில் ஊனமுற்ற குழந்தைக்கு செயற்கை கால் செய்து கொடுத்தார் என்றான். என்னொரு பெண் அவர் ஜனாதிபதியாக இருந்தார் என்றாள். அவர்கள் சொல்லும் பதில்களில் இருந்தே கேள்வி கேட்டு அவர்களை மேலும் சிந்திக்க வைக்க முயன்றோம். பின் நுடுல்ஸ்ன் தீமைகள் குளிர் பானங்களின் தீமைகள் கேள்விறகு மற்றும் கடலை மிட்டாய்யின் நன்மைகள் என ஒருமணிநேரம் சுவாரசியமாக சென்றது.

இங்கலாந்து எழுத்தாளர் திரு ராய் மக்ஸ்சம் பெரும் ஆராய்ச்சிக்கு பின் எழுதிய நூலின் பெயர் The great Hedge of India . இந்த நூல் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆகிலேயர்கள் உப்பின் மீது வரி வசூலிக்க ஏற்படித்திய மாபெரும் உப்பு வேலி பற்றியது. அந்த வேலி மதிய பிரதேசத்தில்  துவங்கி ஒரிசா, உத்ரபிரதேஷ் ,பீகார், காஷ்மீர் வரை நீண்டது. இந்தியாவில் மாபெரும் பஞ்சங்கள் உருவாகி பல லட்சம் மக்கள் இறப்பதற்கு இந்த வேலி காரணமாக இருந்திருக்கிறது. இந்த புத்தகம் தமிழில் திரு. சிறில் அலெக்ஸ் மொழிபெயர்த்திருக்கிறார்.

தலைமை ஆசிரியர் மடிக்கணினி மற்றும் ப்ரொஜெக்டர் ஏற்பாடு செய்திருந்தார் அதை பயன் படுத்தி வரைபடங்களை கொண்டு இந்த உப்பு வேலி பற்றி அவர்களுக்கு விளக்கினேன். முதல் பத்து நிமிடங்கள் மாணவர்கள் நெளிய துவங்கினர். அதன் பின் நான் சற்று இறங்கி அவர்கள் மொழியில் விளக்கத்துவங்கியதும் அடுத்து ஒரு மணி நேரம் சீராக என்னோடு பயணித்தார்கள்.

வகுப்பு முடிந்ததும் அனைவருக்கும் இரண்டு நோட்டு புத்தகங்கள் மற்றும் ஒரு பேனாவும் இனிப்பும் கொடுத்தோம். மாணவர்கள் அனைவரும் மனம் மகிழ்ந்தனர். எங்களுக்கு புது அனுபவமாக இருந்தது. மனம் நிறைந்து இருந்தது.
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக