"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

வியாழன், செப்டம்பர் 24, 2015

நீலம் அறக்கட்டளை - "நாமும் மத்தவகளுக்கு ஏதாவது செய்யணும்டா "

நான் ஒரு சமுக விலங்கு. நான் வாழ எனக்கு மற்றவர் உதவி தேவை. அதே போல மற்றவர்கள் வாழ என் உதவி அவர்களுக்கு தேவை. இதில் உதவி என்ற வார்த்தைக்கு மாற்றாக கடமை என்ற வார்த்தையை பயன்படுத்தினால் இந்த கோட்பாடு இன்னும் எளிமையாகும்.

நான் உனக்காக கடமை ஆற்றுகிறேன் நீ எனக்கு கூலி கொடு. அதை வைத்து நான் வாழ்கிறேன். அந்த கூலி எனக்கானது. என் திறமைக்கானது. அதே போல நீ எனக்காக செய்யும் கடமைக்கு நான் கூலி தருகிறேன். அது உனக்கானது.
இந்த உலகத்தில் அனைவரும் ஏதாவது ஒரு கடமையாற்ற வேண்டும். தன் கூலியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து உங்கள் கூலியில் சிறிது எனக்கு கொடுத்து உதவுங்கள்  என்று யாரவது  கேட்டல்  என்னை பொருத்தவரை அவர்கள் கடமை தவறியவர்கள் சோம்பேறிகள். வாழத்தெரியாதவர்கள். பிச்சைகாரர்கள், மனநோயாளிகள் யாராவது என்னிடம் கை நீட்டும் போது இவனுக்கென்ன நல்லாதானே இருக்கான் என்று முகத்தை திருப்பிக்கொள்வேன். எனக்கு வலிய வந்து யாராவது உதவி செய்தால் கூட அவர் மீது சந்தேகம் தான் எழும்.  அம்மா , அப்பா, மனைவி , உறவினர்கள் , நண்பர்கள் காட்டும் அன்பு கூட அது அவர்களின் கடமை என்று புரிந்துகொள்வது என்னக்கு வசதியாக இருந்தது.

ஆனால் என் வாழ்க்கை விரிவடைய விரிவடைய அந்த கருத்தின்மீது சந்தேகம் எழுந்தது .  பலதரப்பட்ட  மனிதர்களையும் நண்பர்களையும் வாழ்க்கைச்சூழலையும் கடக்கும் தோறும் வாழ்க்கை பற்றிய பெருங்கேள்விகள் எழுந்தன. அதற்க்கான விடைகளை நான் தேடிச்சென்ற இடம் புத்தகங்கள்.

நேரம் கடத்துவதற்கு பட்டுமே பயன் பட்டு வந்த புத்தகவாசிக்கும் பழக்கம் பின் என் தேடலுக்கான வழியாக மாறியது.  அதன் வழியாக நான் சென்று அடைந்தது ஜெ வின் எழுத்துக்களை.

அறம் சார்ந்த அவர் எழுத்துக்களை படிக்கப்படிக்க என் மனதில் வெகு நாட்க்களாக ஒலித்துக்கொண்டு இருந்த ஒரு குரல் தெளிவாக கேட்டது.

"நாமும் மத்தவகளுக்கு ஏதாவது செய்யணும்டா "

இந்த குரல் எப்போதும் என் மனதில் ஒலிக்கும் குரல் தான். ஆனால் என் தர்கபுத்தியால் அதற்க்கு மதிப்பளிக்கவே இல்லை.

"நாமும் மத்தவகளுக்கு ஏதாவது செய்யணும்டா " என்று தீவிரமாக நான் யோசிக்கும் போது ஒரு கருத்து எனக்கு தெளிவாக புரிந்தது.

என் வழிவின் மெரும்பகுதி, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய நண்பர்களாலும், உறவினர்களாலும், முகம் தெரியாத அன்பர்களாலும் கட்டமைக்கப்பட்டது என்று.

நான் வேலையில்லாமல் அலைந்த போது பலநாள் என்னக்கு தங்குவதற்கு இடமும் உணவும் அளித்த நண்பர்கள், விடியற்காலையில்  எழுந்து என்னையும் அழைத்துக்கொண்டு தனக்கு தெரிந்தவர்களை எல்லாம் சந்தித்து எனக்காக வேலை கேட்டு நின்ற பெங்களூர் பெரியப்பா, நான் திருமணத்துக்கு பெண் தேடி அலைந்தபோது என் மனைவியின்  குடும்பத்தை அறிமுகம் செய்த முன்பின் அறிமுகமில்லாத நபர் என்று முகங்கள் ஞாபகத்தில் எழுந்து கொண்டே இருந்தது.

இன்று பொருளாதார ரீதியாக சொல்லிக்கொள்ளும்படி வளர்ந்திருந்தாலும் என் வாழ்வின் பெரும்பகுதி மற்றவர் பிரதிபலன் இல்லாமல் செய்யும் உதவியால் மட்டுமே முன்னகருகிறது.

இறுதியாக முடிவு செய்து   " நீலம் அறக்கட்டளை" துவங்கப்பட்டது.

நான் மற்றும் என்னுடன் வேலை செய்யும் நண்பர்கள் மற்றும் தம்பிக்களுமான வி. சிவக்குமார் , அ. சங்கர் மூவரும் இணைந்து துவங்கி உள்ளோம். கடந்த ஒருவருடமாக  மூவரும் இணைந்து மாதம் ஒரு சிறு தொகையை சேமித்தோம்.

தொடரும் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக