காலை நான்கு மணிக்கு கோவை இரயில் நிலையத்தில் இறங்கினேன். வெளியில் வந்ததும் ஒரு ஆட்டோ ஓட்டுனர் என் அருகில் வந்தார் . என் அப்பா வயது இருக்கும் . ஏங்கிங்னா போனம் என்றார். பிரின்ஸ் கார்டன் என்றேன். அடுத்த பத்து நிடத்தில் நான் அங்கு இருந்தேன். வரவேற்பரையில் விசாரித்த போது ஜெயமோகன் அவர்கள் இன்னும் வந்திருக்கவில்லை. அங்கே ஒரு அறையை அமர்த்திகொண்டேன். ஓய்வெடுக்க முயன்னும் முடியவில்லை. மனம் செயற்கையான பரபரப்படைந்து கொண்டு இருந்தது. அவரை பார்த்தவுடன் என்ன பேசுவது, எதாவது கேள்வி கேட்கலாமா , அவர் புத்தகங்களில் எதாவது பிடித்த பகுதியை பற்றி விவாதிக்கலமா என்று எத்தனையோ எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தது.
ஒரு பிரபலத்தை சந்திக்கும் நிகழ்வை வாழ்வின் முக்கியமான தருனமாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்ற மனதின் தவிப்பை சற்று தள்ளி நின்று பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தேன்.
காலை ஏழு மணிக்கு குளித்து தயாராகிவிட்டேன். ஏழு முப்பதுக்கு அரங்கா தொலைபேசியில் அழைத்தார். சார் வந்துட்டார் வாங்க என்றார். பரபரப்பு தாங்கவில்லை. மறுபடியும் ஒரு முறை தலைவாரிக்கொண்டேன். உடைகளை சரி செய்து கொண்டேன், குளியல் அறையை திறந்தேன், ஆனால் எதற்கு என்று தெரியவில்லை மூடிவிட்டேன். பின்பு வாட்ச்சை தேடிக்கொண்டு இருந்தேன். வெகு நேரம் கழித்து அது குளியல் அறையில் இருப்பது ஞாபகம் வந்தது. ச்சா மொதல்ல அதுக்கு தான் அந்த அறைக்கதவை திறந்தனா ... சரி சரி நல்லா மூச்சு விடு நல்லா மூச்சு விடு தண்ணி குடி கொஞ்ச நேரம் உட்கார் என்று என்னை நானே அமைதி படுத்திக்கொண்டேன்.
பின் வெளியில் வந்து அடுத்த அறையின் கதவை தட்டினேன். அரங்கா கதவை திறந்தார். வாங்க என்று மகிழ்வோடு வரவேற்றார். ஜெ மெத்தையில் அமர்ந்து அன்றைய உரைக்காக மடிக்கணினியில் தட்டச்சிக்கொண்டு இருந்தார். நான் பவுயமாக வணக்கம் சார் என்றேன். எழுதுவதில் ஆழ்ந்திருந்த அவர் என்னை பார்த்து முகமன் சிரித்து வாங்க என்றார்.
அதன் பின் அரங்கா என்னை பற்றியும் வேலை பற்றியும் கேட்டார். நான் வென்முரசு நாவலின் முதல் புத்தகத்தை ஒலி வடிவமாக மாற்றி இணையத்தில் பதிவேற்றி உள்ளேன் என்றேன். ஓ நீங்க தானா அது என்று அரங்கா என்னை தழுவிக்கொண்டார். ஆமாம் அது நான் தான் கிராமத்தான் என்ற பெயரில் பதிவேற்றினேன் என்றேன். உங்களதாங்க தேடிட்டு இருக்கோம் நிங்களே வந்துட்டிங்க என்றார் அரங்கா. புதுசா எழுத வரவங்க இப்படிதான் கிராமத்தான், பிச்சைகாரன் என்று பெயர் வச்சுகுறாங்க என்று ஜெ சொன்னார். அதை கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது. இணையத்தில் ஓணாண்டி, குருவிக்காரன், கோவணாண்டி என்ற பெயரில் எழுதுபவர்களை நான் பார்த்திருக்கிறேன் .
ஆனால் நான் வெட்ட வெளியில் கக்கா போய், வேலங்குச்சியில் பல் துலக்கி , பம்பு செட்டில் தலை மூழ்கி, தேங்காய் எண்ணெய் வழிய தலைவாரி , பல்பம் டப்பா பலகையில் மோதி டங் டங் என்று சத்தம் வர பள்ளிக்கு ஓடிய சினிமா கிராமத்து சிறுவன் . இன்றும் என் அகத்தில் அந்த கிராம வாழ்க்கைக்கான ஏக்கம் இருக்கிறது . அது என் பேச்சில் எண்ணங்களில் செயலில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கிராமத்தான் .
அரங்கா உங்கள் ஆடியோ நன்றாக இருந்தது தொடருங்கள் என்றார் . நம்ம குழுவில் நெறைய சிவக்குமார் இருக்கிறார்கள் அதனால் உங்களுக்கு "ஆடியோ சிவா" என்று பெயர் வைத்து விடலாம் என்றார் . அதன் பின் ராதா எனக்கு நண்பரானார் . அந்த அறையில் நண்பர்கள் கூடிகொண்டே இருந்தனர். அந்த நட்பு வட்டத்தில் நானும் இயல்பாக ஐக்கியமாகிவிட்டேன். அந்த கூட்டதில் நான் புதியவன் என்ற தனிமையை உணரவே இல்லை. அப்படி யாரும் என்னை தனியாக விட்டு விடவும் இல்லை. ஜெ உரையை முழுவதும் எழுதி முடித்துவிட்டு அதை எங்களுக்கு படித்துக்காட்டி பொருளும் கூரினார். அந்த அனுபவத்துக்கு தானே இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தேன். அப்போதே மனம் நிறைந்து விட்டது.
மற்ற எழுத்தாளர்களை சுற்றி இருப்பது வாசகர் வட்டம். எழுத்தாளர் அதில் தனியாக தெரிவார். ஆனால் ஜெ வை சுற்றி இருப்பது நட்பு வட்டம் . அதில் ஜெவை நாம் தான் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும்.
பதினைந்து நண்பர்களுக்கும் மேல் அங்கு குழுமிவிட்டனர். அந்த சிறிய அறை சிரிப்பையும் அரட்டையையும் தாளாமல் தவித்தது.
பின் அனைவரும் கூட்டம் நடக்கும் இடத்துக்கு சென்றோம். அது சிந்து சதன் அரங்கம் . ஜெ ஆற்றிய உரையின் தலைப்பு " கைவிடு பசுங்கழை - கவிதை ரசனையின் ஈராயிரம் வருடங்கள் " . அது தமிழ் கவிதை மரபை பற்றிய பாரஷுட் பார்வை.
குளிருட்டப்பட்ட சிறிய வளாகம். மிதமான கூட்டம். ஜெ ஆற்றிய உரை உணர்ச்சியின் உச்சத்தில் கைதட்டி குதுகலிக்ககூடியது அல்ல. ஒவ்வொரு வார்த்தையும் உள்வாங்கி சிந்திக்க வேண்டிய உரை. அந்த சிந்தனை வழியாக நம்மை வாழ்வின் அழகியலை நோக்கி நகர்த்தும் உரை.
கூட்டம் முடிந்து மத்திய உணவுக்காக ஒரு ஓட்டலுக்கு சென்றோம். ஓட்டல் பெயர் தெரியவில்லை ஆனால் உட்காரா இடமில்லாமல் வெளியில் நின்றுகொண்டு இருந்தோம். பின்பு எனக்கும் விஜய ராகவன் சாருக்கும் இடம் கிடைத்தது. அகத்திகீரைரை கூட்டு , வேப்பம்பூ ரசம் , இயற்க்கை வேளாண் சோறு என்று அனைத்தும் வித்தியாசமாக இருந்தது.
உணவு முடிந்ததும் மறுபடியும் நண்பர்களின் வம்பு குதூகலம் தொடர்ந்தது. ஜெ ஒவ்வொரு முறையும் ஏதாவது பேசும் போதும் குழவில் புதியதாக நிற்கும் எண்ணை அவர் கண்கள் சந்திக்கும்.
அனைவரும் பின்பு ஜெ தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்றேம். விஜய ராகவன் சார் ஒரு கார் வைத்திருந்தார். கொஞ்சம் பழைய வண்டிதான் ஆனால் சீறிப்பாய்ந்தது. அதில் நான் ஒட்டிக்கொண்டேன்.
வரவேற்ப்பரையில் அனைவரும் அமர்ந்துகொண்டோம். ஜாலியாக, அரட்டையாக பேசிக்கொண்டு இருந்த அத்தனை நண்பர்களும் நொடிப்பொழுதில் அறிவு தளத்துக்கு மாறினர். அந்த மாறுதல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜெ காந்தியை பற்றி உரையாடினார்.நண்பர்களின் கேள்விகளின் முலம் மேலும் மேலும் உரையாடல் விரிந்துகொண்டே சென்றது.
சுகந்திர போராட்டத்தின் இறுதிநாட்களில் படேல் , நேரு போன்றவர்களின் பதவி அதிகார விருப்பு , அதை சார்ந்து காந்தியம் அவர்களுக்கு ஏற்ப்படுத்திய சங்கடம், படேலின் இந்திய ஒருங்கிணைப்பு, காந்தியன் வங்கப்பயனம் , காந்தி படுகொலையில் சர்வர்கர் பங்கு என்று ஜெவின் உரையாடல் நீண்டது. ஒருகட்டத்தில் விஜய ராகவன் சார் உரையாடலை தூக்கு தண்டனை சார்ந்து திசை திருப்பினார். அதை பற்றி ஜெ தன் கருத்துக்களை பதிவு செய்தார்.
வரவேற்பரையில் நாங்கள் வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தது ஓட்டல்காரர்களுக்கு சங்கடமாக இருந்தது. அனைவரும் கலையலாம் என முடிவு செய்து வெளில் வந்தோம். பரஸ்பர முகமன் சொல்லி நான் பிரிந்து என் அறைக்கு வந்தேன்.
வெகுநேரம் அறையில் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தேன். அசையாத நீர் தடாகத்தின் மேல் நிலைகொண்ட மரத்தின் நிழல் போல என் சுயம் என் மனதின் மேல் நின்றது. சற்று நேரத்தில் மனம் கலைந்தது. கலைந்து இருந்தால் தான் அது மனம்.
பொதுவாக உடலையும் மனதையும் மகிழ்விக்காத எந்த விஷயத்தையும் என் மனம் தன் புறவய தர்கத்தால் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். இது தேவையா ? இதெல்லாம் தெரிந்து நீ என்ன செய்ய போற ? நீ புக்கு படிக்கிற நேரத்துக்கு ஏதாவது உருப்படியா பண்ணலாமே ............,
ஆனால் அறிதலும் அதை சார்ந்த தேடலும் என் ஆன்ம விருப்பம். அது மனதின் புலம்பலை பொருட்படுத்துவது இல்லை. அந்த விருப்பமே என்னை இயக்குகிறது. என்னை இயக்கி அது தன்னை நிறைவு செய்துகொள்ளுகிறது. நம்முள் நல்ல ஆன்ம விருப்பங்களை கண்டறிவதும் அதை வளப்படுத்துவதும் மிகச்சிறந்த ஆண்மிகச்செயல் என்று நம்புக்கின்றேன்.
ஜெவுக்கு நன்றி .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக