இந்த விடுமுறையில் முக்கியமான நிகழ்வு திரு . எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை சந்தித்தது. கடந்த மூன்று வருடங்களாக அவரை தீவிரமாக படித்து வருகிறேன். என் சிந்தனை முறையில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய எழுத்து அவருடியது. பொதுவாக ஒருவரின் குரலை மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கும்போது போது அவரை பற்றிய பிம்பம் நம் மனதுக்குள் உருவாகும். குரல், மொழி, பேசும் பொருள் போன்றவை வைத்து நாமே அவருக்கான பிம்பத்தை படைத்து ரசிக்கத்துவங்கி விடுகிறோம். அவரை நேரில் பார்க்கும் போது இரண்டுவிதமாக நடக்க வாய்ப்புள்ளது. ஒன்று பிம்பம் உடைந்து ஒரு மனவிலக்கம் ஏற்ப்படும் அல்லது இன்னும் நெருக்கமும் மதிப்பும் கூடும்.
அதேபோல திரு ஜெயமோகன் எழுதுவதை கொண்டு அவரை பற்றிய ஒரு பிம்பம் கட்டமைத்து இருந்தேன். அவரை சந்திக்க முடிவெடுத்தப்பின் அந்த பிம்பம் உடைந்து விடுமோ என்ற பயம் முதலில் எழுந்தது. சந்திக்க வேண்டாம் என முதலில் நினைத்தேன். அவர் வாசகர்கள் ஒரு நண்பனை போலதான் அவரை அணுகுகிறார்கள் என்று அறிந்திருந்தும் மனதில் ஒரு தயக்கம் நிலவியது.
அதை எல்லாம் தவிர்த்து அவரை பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன். 16.08.2015 அன்று அவர் கோவையில் கிஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு இலக்கிய கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. அதற்க்கு முதல் நாள் சனிக்கிழமை நான் சென்னை சென்றேன். அங்கு கல்லூரி நண்பர்களின் சந்திப்பு.
இன்று குழந்தை மற்றும் சிறுவர்களுக்கான எழுத்துலகில் விழியன் என்று பரவலாக அறியப்படும் உமாநாத் என் கல்லூரி நண்பன். அவன் வீட்டில் நான்கு நண்பர்கள் வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்டோம்.
நாங்கள் கல்லூரி முடித்து பதினாறு வருடங்கள் முடிந்துவிட்டது. அதன் பின் வாழ்வில் எத்தனையோ அனுபவனங்களால் மனம் வளர்ச்சி அடைந்து முதிர்ந்துவிட்டது என்று நம்பி இருந்தேன். ஆனால் நண்பர்களை கண்ட நொடிமுதல் என் மனம் அத்தனை பாவனைகளையும் கழற்றி எறிந்துவிட்டு ஒரு கல்லூரி மாணவன் மனம் போல சட்டென மாறிவிட்டது.
மனதின் அந்த டைம் Travel அற்புதமானது. அந்த மனநிலையில் தான் நண்பனின் மடியில் இரண்டு கால்களையும் போட்டுக்கொண்டு சாவதானமாக சாயிந்து படுத்துக்கொள்ள முடிந்தது, அதே மனநிலையில் தான் டேய் கிறுக்கா நாயே என்று அவன் மனைவி உடனிருக்க அழைக்க முடிகிறது, அந்த மனநிலையில் தான் குழந்தைகளின் முன்னால் நண்பனின் தலையில் தட்டி ஓடிப்பிடித்து விளையாட முடிகிறது. அந்த ஒரு நாள் முழுவதும் மனம் என்னிலிருந்து விடுபட்டு வனங்களின் நடுவே நடனம் ஆடும் காட்டுவாசி போல ஆடிக்கொண்டு இருந்தது.
நண்பன் உமாநாத் திரு ஜெயமோகன் அவர்களின் நெருங்கிய நண்பரான அரகங்கநாயகம் அவர்களிடம் பேசி அவர்கள் எங்கு தங்குகிறார்கள் என்ற விவரங்களை எனக்கு சொன்னான்.
அன்று இரவு நான் கோவைக்கு செல்லவேண்டும் . இரவு 9 மணிக்கு சென்ட்ரலில் எனக்கு Train. இரவு 7.45 க்கு கூட நான் ஐயப்பன்தாங்கலில் இருந்தேன். அங்கிருந்து ஆட்டோவில் அதுர்ஷ்டம் இருந்தால் ஒரு மணிநேரத்தில் சென்ட்ரல் போகலாம் என்றான் நண்பன். அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டேன் 300 ரூபாய் என்றார். ஒரு மணிநேரத்தில் சென்ட்ரல் சென்றால் தருவதாக சென்னேன். சென்னையின் சிறந்த ஆட்டோகாரரில் ஒருவராக அவர் இருந்திருக்க வேண்டும். கோடம்பாக்கம் , வடபழனி , நுங்கம்பாக்கம், கீழ்பாக்கம் என்று வண்டி பரந்தது. சார் இன்னக்கி சனிக்கிழம அதனால ரோடு ப்ரீய இருக்குது, மத்தநாள்ல இப்டி போமுடியாது என்றார். பேருந்து, கார் , வண்டி எல்லாத்தையும் சாதாரணமாக முந்தி சென்றார்.
நான் கூகிள் map ல் எங்கிருக்கிறோம் என்று பார்த்தேன் அது இன்னும் tension ஐ ஏற்றியது. பெரிய மேடு வந்தது அப்பா வதுடோம்ட என்று பெருமூச்சு விட்டேன். சார் சென்ட்ரல் வந்துச்சி எறங்குங்க என்றார். நான் ரொம்ப தங்க்ஸ் நா என்று 300 ரூபாய் குடுத்தேன். ஒரு வெற்றி பெருமிதம் அவர் முகத்துல , திடீர்ன்னு நம்ம முகத்துல யாரவது தண்ணி தெளிச்சா ஒரு சிளிர்ப்பு வருமே அந்த மாதிரி. அந்த முகத்தையும் என் முகத்தையும் ஒன்ன வச்சி ஒரு செல்பி எடுத்திருக்கணும், அந்த நேரத்துக்கு அது எனக்கு தோனல.
தூங்கு பெட்டியில் sorry sleeper ல இடம் கிடைக்கவில்லை, அதனால் முதல் வகுப்பு AC யில் டிக்கெட் போட்டு இருந்தேன். நம் ஊரில் வசதி என்றால் "நம்மை தனிமை படுத்திக்கொள்ளுதல் " என்று ஒரு அர்த்தம் இருக்கின்றது. அந்த பெட்டியில் அப்படித்தான் அனைத்து இருக்கைகளையும் திரை போட்டு மூடி இருந்தார்கள். எனக்கு மேல்படுக்கை. மேல பையை வைத்துவிட்டு கீழ் இருக்கையில் அமர்ந்தேன். எதிரில் இருந்த இளஞ்சனிடம் நீங்க கோவையா என்றேன். காதிலிருந்த இசைமாட்டியை கழற்றாமல் ஆமாம் என்று தலையாட்டினான். அதற்க்கு மேல் நான் எதுவும் கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து நீங்க கோவையா என்றான். இல்ல நான் குடியாத்தம் இப்ப கோவை போறேன் என்றேன். அதற்க்கு மேல் அவன் என்னை எதுவும் கேட்கவில்லை.
சிறிது நேரம் கழித்து நீங்க வேணுன்னா கிழையே படுத்துங்க. அண்ணனுக்காக அந்த சீட் போட்டேன் அவர் நாளைக்கு பிளைட்ல வரேன்னு சொல்லிட்டார் என்றான். அண்ணன் என்று அழுத்தி சொன்ன போது அவர் ஏதோ பெரிய அரசியல்வாதியாக இருப்பார் என்று நினைத்தேன். நீங்க " சண்டிவீரன் " படம் பார்த்திங்களா என்றார், கொஞ்சம் சுதாரித்து இல்ல பார்க்கணும் என்றேன்.
அந்த படத்தோட டைரக்டர் சற்குணம் தான் என் அண்ணன்.நாளைக்கு கோவையில எங்களுக்கு ஒரு மீட்டிங் இருக்கு என்றார். நான் ஓ ... என்றேன்.
பின் எங்களுக்கு முன்னால் ஆஜானு பாகுவாக கழுத்தில் தங்க சங்கிலியும், முகத்தில் தாடியும் , கருப்பு சட்டையும் அணிந்த ஒரு ஆள் எங்களை பார்த்துக்கொண்டு நிற்றார். எனக்கு லேசான பயம் எழுந்தது. அவர் சற்று குனிந்து என்ன யாருன்னு தெரியுதுங்களா என்றார். நான் அடையாளம் கண்டு நீங்க தளபதி தினேஷ் தானே என்றேன். ஆமாங்க என்று உற்சாகமாக அருகில் அமர்ந்தார். எனக்கு urine problem நா இந்த சீட்ல படுத்துகிட்டமா என்றார்.
எதிரில் இருந்தவர் படுத்துக்கொள்ளுங்கள் என்றார்.
அரண்மனை -2 ஷூட்டிங் பொள்ளாச்சியில, நேத்துதான் சென்னைக்கு வந்தேன் மறுபடியும் கூப்புராங்க. நீங்க எங்க வேல செய்றிங்க , நா சவுதில என்ஜினியரா இருக்கேன். எனக்கு ரெண்ட்டு பசங்க , ரெண்டு பேருமே என்ஜினியர்க்கு படிக்க வச்சேன் ஆனா ரெண்டு பேரும் பைட் மாஸ்டர் ஆகிடாங்க. வேலை இல்லா பட்டதாரி படத்துக்கு அவங்க தான் பைட் மாஸ்டர். என்னோட போகட்டும் இந்த கஷ்டம், நீங்க சினிமாவுக்கு வரவேண்டாம் இன்னு சொன்னா கேக்கல என்றார் . எவ்வளவு நல்ல மனுஷன் ஒரு செல்பி எடுத்துகொள்ளலமா என்று யோசிக்கும் போதே அவர் மெதுவாக ஒரு கோக் பாட்டிலை எடுத்தார். அதை திறந்தவுடன் குப்பென்று வாடை வந்தது. அதை ஒரே மூச்சாக குடித்துமுடித்தர் . நான் நைசாக நழுவி மேலேறி படுத்துக்கொண்டேன்.
அதன் பின் இன்னொருவர் அந்த இடத்தில் வந்து அமர்ந்தார். தினேஷ் மெதுவாக ஆரமித்தார்.
தி : சார் நீங்க கோவை போறிங்களா
ஆமா சார்
தி :நான் யார் தெரிதா
தெர்லிங்லெனா
தி : நான் தான் தளபதி தினேஷ் சினிமா actor தமிழ் நாட்டுல நான் தான் முதல் தளபதி , எனக்கு அப்புறம் தான் இளைய தளபதி , புரட்சி தளபதி எல்லாம்
இல்லங்னா எனக்கு தெரிலிங்னா
தி : தெர்லிய உடு கொஞ்சம் தள்ளி உக்காரு அமலா பால் பாத் ரூம் போய் இருக்காங்க இப்ப வருவாங்க.
எங்க இங்கியா
தி : ஆமா இங்க தான்
இங்க எடம் இல்லியே
தி : எங் உங்க மடில உக்கார வச்சுக்க மாட்டிங்களா
நிஜமலுமா வாரங்களா
தி : யோவ் 25 வருஷம் சினிமாவுல ஓதப்பட்டு மிதிபட்டு நடிக்கிற என்ன தெரில அமலா பால்னா வாய பொலக்குர
தெரியாம சொல்லிட்டேன் என்ன விட்டுருங்க என்று நழவி மேலே வந்து படுத்தார்.
தினேஷ் எதிரில் இருந்தவரை பார்த்து உங்களுக்கு என்ன தெரிதா சார்.
அவர் : எங்க அண்ணன் டைரெக்டர் சற்குணம் நா உங்களை பார்த்திருக்கேன்.
ஓ சார் தம்பியா நீங்க அவர பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. நேத்து தான் சண்டி வீரன் பார்த்தேன். நீகளே ஹீரோவா நடிக்கலாமே சார்
அவர் : இல்ல சார் நா கபடி ப்ளேயர்
இல்ல சார் நீங்க நல்லா பாடியா இருக்கீங்க நடிங்க
அவர் : இல்ல சார் எனக்கு interest இல்ல
நான் எப்படியோ தூங்கி விட்டிருந்தேன். ஒரு மணி நேரம் கழித்து முட்டிக்கொண்டு வந்தது. மெதுவாக எழுந்தேன் கீழே தினேஷ் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார்
"இல்ல சார் நீங்க நல்லா வருவிங்க"
ஐயோ சாமி முட்டிக்கொண்டு செத்தாலும் பரவாயில்லை கிழே மட்டும் இறங்கிவிடக்கூடாது என்று தம் கட்டி படுத்துவிட்டேன்.
தொடரும் ........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக