"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

புதன், டிசம்பர் 30, 2015

2015 க்கு நன்றி


2015 ஒரு முக்கியமான வருடமாக அமைந்தது. ஜுபைல்  தமிழ் சொல்வேந்தர் மன்றத்தின் பொங்கல் விழா இந்த வருடத்தின் நல்ல துவக்கமாக  அமைந்தது. அதில் பாட்டு, நடனம், பட்டிமன்றம் என்று அனைத்திலும் கலந்துகொண்டது மனதுக்கு புது உற்சாகம் அளித்தது. மேலும் இந்த வருடத்தை அழகாக்கியது இந்த வருடத்தின் விடுமுறை நாட்கள் தான். மொத்தம் 45 நாட்கள். மூன்று முக்கிய பயணங்கள் . ஒரு அதிமுக்கிய சந்திப்பு . ஒரு நண்பர்கள் சந்திப்பு. ஒரு முக்கிய வாழ்வியல் நிகழ்வு.

முதல் பயணம் என் குரு எழுத்தாளர் ஜெவை  சந்தித்தது. வாழ்வில் முக்கியமான தருணம் அது. அங்கு சிறந்த நண்பர் குழுவும் கிடைத்தது. அதே பயணத்தில் என் கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டாவது பயணம் தஞ்சை பெரிய கோவில் சென்றது. தனியாக நாள்முழுவதும் அந்த தமிழ் பெரும் வரலாற்றை சுற்றிவந்தது சிலிர்ப்பின் உச்சம். மூன்றாவது குடும்பத்துடன் கர்னாடக மாநிலம் குடகு மற்றும் தலைக்காவேரி சென்றது.

இந்த மூன்று பயணங்களும் வாழ்வை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றியது.

முக்கியமான வாழ்வியல் தருணம் " நீலம் கல்வி அறக்கட்டளை " என் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியது.

இதன் மூலம் இது வரை இரண்டு பள்ளிகளுக்கு உதவி இருக்கிறோம் அது இன்னும் பெருகும்.

2015 படித்த புத்தகங்கள் 
வெண்முகில் நகரம் - ஜெ 
இந்திரநீலம்  - ஜெ 
இந்து மதத்தின் ஆறு தரிசனகள் - ஜெ 
காந்தி இன்று - ஜெ 
ரப்பர் - ஜெ 
சிலுவையின் பெயரால் - ஜெ 
இந்து  ஞானம்: ஓர் எளிய அறிமுகம்க்ஷிதி மோகன் சென்
ஒற்றை வைக்கோல் புரட்சி - மாசானபு ஃப்கோகா
உப்பு வேலி - சிறில் அலெக்ஸ் 
யாருடைய எலிகள் நாம் - சமஸ் 

2015 கேட்ட ஒலி  புத்தகங்கள் 
1. பொன்னியின் செல்வன் ( ஐந்து பகுதிகள் ) - பாம்பே கண்ணன் 
2. பார்த்திபன் கனவு - பாம்பே கண்ணன் 
3. சிவகாமியின் சபதம் - பாம்பே கண்ணன் 
4. ரமணரின் வாழ்க்கை சரித்திரம் - பாம்பே கண்ணன் 
5. பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு - கிழக்கு 
6. வியாச  மகாபாரதம் -  வேளுக்குடி கிருஷ்ணன்
7. பாகவதம் -  வேளுக்குடி கிருஷ்ணன்
8. அ . முத்துக்கிருஷ்ணன் சிறுகதைகள் 

ரசித்த படங்கள் 
1. ஐ - விக்ரமின் உழைப்பும் , சீனா நிலப்பரப்பும் பிரமிக்க வைத்தது 
2. டார்லிங் - சிரித்து சிரித்து கண்களில் நீர் வழிந்தது 
3. பாகுபலி - பிரமிப்பின் உச்சம் 
4. காக்கா மூட்டை - புதிய தமிழ் படம் 
5. இன்று - நேற்று - நாளை - சிறந்த திரைகதை 
6. நானும் ரவுடி தான் - நல்ல பொழுது போக்கு 
7. தனி ஒருவன் - நல்ல யோசித்து உழைத்து உருவாக்கிய கதை 

இந்த வருடம்  மகிழ்ச்சியாக கழிந்து சென்றது. அந்த மகிழ்ச்சிக்கு பின்னால் என் குடும்பம், நண்பர்கள் , எத்தனையோ கண்ணுக்கு தெரியாத மனிதர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் என் வாழ்த்துகள். கடவுளுக்கு நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக