ஜுபைல் சொல்வேந்தர் மன்றத்தின் சார்பாக சித்திரை திரு விழா கடந்த சனிகிழமை 16.04.2016 அன்று நடைப்பெற்றது.
மன்றத்தின் தலைவர் திரு மோகன் விழாவை துவங்கி வைத்தார்.
முன்னால் தலைவர்கள் அனைவரும் கௌரவப்படுத்தப்பட்டனர்.
முன்னால் தலைவர் திரு . வெங்கட் அவர்கள் சிறந்த துவக்க உரையை வழங்கி நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
மொத்தம் நான்கு நிகழ்வுகள்
1. கதம்பம் 2. நடன நிகழ்ச்சி 3. சிறப்பு பட்டிமன்றம் 4. பாடல்கள்.
கதம்பம் கவிதாவும் அவள் தோழி பிரியாவும் இணைந்து வழங்கினர் .
இதற்கான தயாரிப்பு மற்றும் பயிற்சிகளை பதினைந்து நாட்களுக்கு முன்னரே இருவரும் துவங்கி விட்டனர்.
கதம்பம் ஒரு பல்சுவை நிகழ்ச்சி . இவர்கள் இருவரும் தான் இந்த நிகழ்ச்சியை தயாரிக்க வேண்டும். மேடையில் நிகழ்த்த வேண்டும்.
சமையல் வீட்டு வேலைகள் மற்றும் நிர்வாகம் மட்டும் செய்து கொண்டு இருந்த கவிதாவின் மனம் இந்த நிகழ்ச்சி செய்ய வேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் தீ பிடித்த உலர்ந்த புற்கட்டு போல எரிய துவங்கிவிட்டது.
தொடர்ந்து என்னுடன் விவாதிக்கொண்டே இருந்தாள். பின்பு என்ன என்ன செய்ய வேண்டும் என்று ஒரு வடிவம் கிடைத்தது.
பிரியாவும் கவிதாவும் தோழிகள். அந்த தோழமையை மேடையில் பயன்படுத்த வேண்டும் என்று நான் கூறினேன். பிரியா அவர்கள் சார்பாக கொண்டுவந்த நிகழ்சிகளை விவாத்தித்து முடிவு செய்தோம்.
பின்னர் அவர்கள் இருவரும் கடுமையாக பயிற்சி செய்தனர். சிறு சிறு அசைவுகள் சிறு சிறு சொல்லைக்கூட சரிசெய்து கொண்டார்கள். கவிதா மேடையேறி அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்னால் மனதிலேயே பலமுறை நடத்திவிட்டாள்.
அந்த நிகழ்ச்சியை முழுமையாக தட்டச்சு செய்து நகல் எடுத்துவிட்டோம்.
சில நேரம் இதை பற்றி பேசத்துவங்கி விடிய விடிய பேசிக்கொண்டு இருந்தோம். நாங்கள் தூங்கிவிட்டலும் எங்கள் பேச்சு கனவில் தொடர்ந்துக்கொண்டு இருந்தது.
மேடையில் நிகழ்ச்சி துவங்கும் எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும்
இருவரும் மகிழ்ச்சியோடு நடத்தினர்.
நிகழ்ச்சி - 2 நடனம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர் சுற்றி உள்ள கிராமங்களில் ஒரு நாட்டு புறநடனம் இருக்கிறது. அதற்கு பெயர் சிலம்பாட்டம். பொதுவாக சிலம்பாட்டம் என்றால் கம்பை பயன்படுத்தும் தற்காப்பு கலை என்று தான் அறிந்திருக்கிறோம். ஆனால் எங்கள் ஊர்களில் கையில் இரு சிலம்பை வைத்துக்கொண்டு ஆடும் நடனத்துக்கு பெயர் சிலம்பாட்டம். இரண்டு செம்பாலான நீள்வட்ட வேலைபாடு நிறைந்த சிலம்புகளை கையில் வைத்துக்கொண்டு பம்பை ஒலிக்கு ஏற்றார்போல நடனம் ஆடவேண்டும்.
சிலம்புகள் சிறு தெய்வத்திற்கு நிகராக மதிக்கப்படும்.
பம்பையில் பணிரெண்டு தாள அடுக்குகள் உள்ளன . முதல் அடி ரெண்டாம் அடி மூன்றாம் அடி என்று பனிரெண்டு அடிவரை தொடரும். ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு நடனம் . பனிரெண்டாவது அடியில் ஒரு சிலம்பை தலையில் படுக்கவைத்து மறுசிலம்பை அதற்க்கு நடுவில் சாமி போல வைத்து ஆடவேண்டும் . இது ஆண்கள் மட்டுமே ஆடக்கூடிய நடனம் என்பதால் வேகமாகவும் உக்கிரமாகவும் இருக்கும். குழுவாக நான்கு முதல் எட்டு பேர் வரை ஆடலாம்.
எங்கள் குடும்பத்தில் பங்காளிகள் மற்றும் ஊர்காரர்கள் சிலர் இதில் சிறந்த ஆட்டக்காரர்களாக இருந்தனர். திருவிழா துவங்குவதற்கு முன் இதற்கான பயிற்சி துவங்கும். பயிற்சி நள்ளிரவு வரை நடக்கும்.
இப்போது இந்த ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டது. திருவிழாக்களில் கலை அழிந்து குடி குடிகொண்டுவிட்டது. ட்ரம்ஸ் ஒலிக்கு குடி தரும் வெறியின் உச்சத்தில் வேட்டி நழுவ ஆடுகிறார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து ஆடுகிறேன்.
நான் சிறுவனாக இருந்த போது நான்கு அடிகள் வரை கற்றுக்கொண்டேன். அதன் பின் முறையாக கற்றுக்கொள்ளவில்லை. என் முதாதையர்கள் யாரோ ஆடிய ஆட்டம் என்கால்களில் இன்றும் சிறிது ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் கலைகள் தலைமுறை தலைமுறையாக இரண்டு வழிகளில் பயணம் செய்கிறன. ஒன்று பல குரு மரபுகளிளின் வழியாக இன்னொறு மனிதர்களின் மரபணுக்களின் வழியாக.
தமிழ் சொல்வேந்தர் மன்றத்தின் இணை இல்ல நடக்குழு வருத்தப்படாத வாலிபர்சங்கம். தொடர்ந்து முன்றாவது வருடமாக இந்த ஆண்டும் புது பொலிவுடன் களமிறங்கினர். அதில் இந்த வருடம் நானும் களத்தில் இறங்கினேன். நடன ஆசான் செந்தில் தலைமையில் பயிற்சி.
செந்தில் பொறியாளர். நடனத்தின் மீதுள்ள தனியாத இடுப்பாட்டல் இங்கு நிறைய குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக்கொடுக்கிறார். இந்த பாடலுக்கு அவர்தான் எங்களுக்கு ஆசான். எங்களுக்கு சொல்லிக்கொடுக்கும் போது ஏண்டா பொறந்தோம் என்று வாழ்க்கையை வெறுத்து ஓடிவிடுவார் என்று எதிர் பார்த்தோம். ஆனால் பொறுமையாக இடைவிடாமல் சொல்லிக்கொடுத்தார்.
மூன்று இளஞ்சர்கள் மோகன் , சிவகுமார் , சுகுமார் . ஒரு ஆசான் செந்தில்குமார், ஒரு தல ரவுடி கோடிஸ்வரன்.

நிகழ்ச்சி
- 3 பாடல்கள்
பாடல்களை நான் தொகுத்து வழங்கினேன். முதல்
பாடலாக குழந்தை அர்ஷா சைவம் படத்திலிருந்து "அழகே அழகு " பாடினாள். அந்த
பாடலில் கமழும் அதே மழலையோடு பாடினாள். நிகழ்ச்சிக்கு நல்ல துவக்கமாக அமைந்தது.
அடுத்து பேராசிரியர் ஜார்ஜ் "ராகங்கள் பதினாறு" படலை தனது மயில்
தோகையை வருடும் குரலால் தென்றலென பாடினார்.
திரு . வெங்கட் தேர்ந்த பாடகர். பாடல்களின் எந்த நுணுக்கங்களையும் எளிமையாக
தொடக்கூடியவர். "ஏய் ஆத்தா" பாடலை அடித்துக்கிளப்பினார்.
திருமதி. புவனா அவர்கள் ஆங்கில பேராசிரியை.
ஆங்கிலத்தில் சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதுபவர். கர்னாடக
சங்கிதத்தில் அவர்பாடிய முருகன் பாடல் அந்த மேடையை மதிப்பு மிக்கதாக்கியது.
திரு. பெரிய நாயகம் இங்கு பொது வெளியிலும்
சொல்வேந்தர் மன்றத்திலும் மதிப்பு
மிக்க மனிதர். அவர் "நிலவே வெள்ளி வெள்ளி நிலவே பாடலை பாடினார். இந்த பாடல் மேடையில் பாடுவதற்கு சிரமம்
ஆனால் பெரிய நாயகம் பாடியது நிறைவாக இருந்தது.
அவரை தொடர்ந்து நான் களமிறங்கினேன். "
அலுமா டாலுமா " வேதாளம் படத்திலிருந்து. என் குரல்
எனக்கே யாரோ போல் இருந்தது . இந்த நிகழ்ச்சிக்கு முன் நடனமாடி நாவரண்டு இருந்தது.
எப்படியோ சமாளித்துவிட்டேன்.
எனக்கடுத்து திரு.ரியாஸ் பாடினார். அசத்தலான SPB குரல்.
ஒரு தேர்ந்த பாடகருக்கான பாடல் மொழி. சிறந்த பாடகர்.
தமிழ் மன்றத்தின் தலைவர் மோகன் மற்றும் மனைவி
கார்த்திகா இணைந்து "நான் தேடும் செவந்தி பூவிது" பாடலையும் அவர் மாமா "சித்திரம் பேசுதடி" பாடலையும் பாடினர்.
பழைய பாடல் கேட்க அவ்வளவு இனிமையாகவும் கச்சிதமாகவும் இருந்தது. பயிற்சியின் போதே
"பொன்னை விரும்பும் பூமியிலே" பாடலை பாடிகாண்பித்தார். நல்ல
உரையாடல்காரர் பொறுமையாக அவர் பேசுவதை கேட்டல் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ளாலம்.
நிறைவு பாடலாக " அதோ அந்த பறவை போல "
பாடலை நந்தகுமார் பாடினார்.
நான், மோகன் மற்றும் கோட்டீஸ் மூவரும் கோரஸ் போட்டு கலக்கினோம்.
நிகழ்ச்சி -4 பட்டிமன்றம்
-------------------------------------
-------------------------------------
ஒட்டு மொத்த நிகழ்ச்சியின் உச்சமாக அமைந்தது பட்டிமன்றம்.
தலைப்பு வாழ்வில் வெற்றி பெற மிகவும் அவசியம் " தைரியமா அல்லது தெளிவான சிந்தனையா".
தைரியமே என்ற எங்கள் அணிக்கு திரு கோடிஸ்வரன் தலைமைதாங்கினார்.
எங்கள் அணியில் கவிதா, சுந்தரி வெங்கட் , மன்ற தலைவர் மோகன் ஆகியோர் பேசினர்.

எதிர் அணியில் முனைவர் ஜார்ஜ் தலைமையில் திரு. ராமநாதன் , அரசு, வெங்கட் மற்றும் முனைவர் புவனா சங்கர் பேசினர்.
நிகழ்ச்சிக்கு இரு நாட்களுக்கு முன் தலைவர் மோகன் வீட்டில் அனைவரும் கூடினோம். சுவையான சிற்றுணவு அன்போடு பரிமாறினார்கள் . அதை தொடர்ந்து எங்கள் விவாதம் தொடங்கியது . எங்கள் அணித்தலைவர் முதலில் பேசத்துவங்கினார் . மெல்ல அது சுவாரசியமான விவாதமாக தொடர்ந்தது. மோகன் மற்றும் அவர் மனைவி கார்த்திகா அவர் அப்பா மற்றும் கவிதா அனைவரும் பல கருத்துக்களை விவாதித்துக்கொண்டே இருந்தனர். திருமதி கார்த்திகாவின் அப்பா ஒரு சுவாரசியமான மனிதர். தலைப்பு சம்மந்தமாக பல குட்டிகதைகள் , பாடல்கள் , நிகழ்சிகள் , திருக்குறள் என்று எங்களுக்கு சொல்லிக்கொண்டே இருந்தார்.
தைரியவானுக்கு ஒரு உதாரணம் கூறினார். ஊருக்குள் ஒரு புலி நுழைந்து விட்டது. தெளிவாக சிந்திப்பவன் சொன்னான் எல்லோரும் என்மீது படுத்துகொளுங்கள். புலி ஒன்றும் செய்யாது என்று. ஆனால் தைரியசாலி சொன்னான் ஆளுக்கு ஒரு கம்பை கையில் எடுங்கள் என்று.
கிட்ட தட்ட மூன்று மணிநேரம் பேசிக்கொண்டே இருந்தோம் . அன்று விவாதித்ததை வைத்தே மூன்று பட்டிமன்றக்களை நடத்தி இருக்கலாம்.
இறுதியாக யார் என்ன பேச வேண்டும் என்று முடிவானது. ஒரு நிகழ்ச்சியை நிகழ்த்தும் போதோ அல்லது பாராட்டுகள் பெறும்போதோ கிடைக்கும் ஆனந்தம் ஒரு வகை அதே போல ஒரு நிகழ்ச்சி நிகழ்த்த நாம் விவாதிப்பதும் , அதை பற்றி தொடர்ந்து சிந்திப்பதும் , படிப்பதும் , அது சம்பந்தமாக நம் வாழ்வில் நடந்த சம்பவங்களை மறு நினைவு கொள்வதும் ,பயிற்சி செய்வதும் கூட பேரானந்தம் தான்.
பட்டிமன்றத்தில் கவிதாவும் எங்கள் அணித்தலைவர் திரு கோடிஸ்வரனும் சிறப்பாக பேசினார்கள்.
அவர்கள் பேசிய கருத்தை வைத்தே நடுவர் எங்கள் அணிக்கு வெற்றித் தீர்ப்பை வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக