திரு . எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய அறம் சிறுகதை தொகுப்பிலிருந்து " நூறு நாற்காலிகள் " சிறுகதை. உங்களுக்காக வாசிப்பது "கிராமத்தான்".
"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "
புதன், மே 18, 2016
திங்கள், மே 16, 2016
முனுசாமி ஓட்டு
ஊரில் இருந்தால் ஒரு நாள் விடுமுறை கிடைத்து இருக்கும். ஆனால் இங்கு வழி இல்லை.
நான் முதன் முதலில் ஓட்டு போட போனது இன்றும் நினைவில் இருக்கிறது. சைக்கிளை எடுத்துகொண்டு ஓட்டு போடா ஜோராக கிளம்பினேன். நான் படித்த கிராமத்து பள்ளி தான்ஓட்டு போடும் இடம். அங்கு என் ஒன்றுவிட்ட அண்ணன் மகன் மற்றும் பலர் ஓட்டு போட வருவோருக்கு பட்டியலில் பெயர் பார்த்து எழுதி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள் . நான் அவனிடம் சென்று நின்றவுடன் பட்டியலை தேடிப்பார்த்தான் பின் சித்தப்பா உன் ஓட்டு போட்டாச்சி சித்தப்பா என்று கூறினான். டேய் யாரா போட்டது என்றால் தெர்ல சித்தப்பா என்று சொல்லிவிட்டு திரும்பி டேய் அந்த முன்சாமி ஓட்டு போட்டாச்சா , இல்லனா என்றான் பக்கத்திலிருந்த இன்னொரு பொடியன். சரி சித்தப்பா இத போட்டுடு வா என்று சீட்டை கொடுத்தான். முனுசாமி வயது 60 என்று இருந்தது. டேய் என்னடா இது மாட்டிப்பெண்டா என்றேன். அட போ சித்தப்பா நானே எத்தன வாட்டி போறது என்றான். வழி துணைக்கு ஒரு ஆளையும் அனுப்பினான்.
வந்தவன் தலைவரே மை வச்சவோனேயே அழிச்சிடு அப்பத்தான் இன்னொரு வாட்டி போக முடியும். வெங்காயம் வெச்சி தேச்சா கூட போய்டும் என்றான். டேய் என்னடா நடக்குது இங்க என்று கேட்டேன். தலைவரே ஒன்னும் பயப்புடாத வேண்ணா நூறு மில்லி போட்டுக்கோ சரியா பூடும் என்றான். கடந்த ஒரு மாதமாக தலைவர் என்ற வார்த்தை அவன் நாக்கில் ஒட்டிக்கொண்டது என்று நினைத்தேன். பார்க்கும் எவரையும் அவன் அப்படித்தான் அழைத்தான். பள்ளியை நெருங்க நெருங்க பயம் தொற்றிக்கொண்டது. அங்கு போலீஸ் ஒருவர் நின்றிருந்தார். கூடவந்தவன் வணக்கும் தலைவரே என்றான் . ஏய் நீ இன்னா சும்மா சும்மா இந்த பக்கம் வர்ற போடா அந்தபக்கம் என்றார் . எனக்கு வற்றை கலக்கி கால்கள் நடுங்கின. திரும்பிவிடலாம என்று நினைக்கும் தருணத்தில் போலிஸ் நீ மட்டும் உள்ள போ என்றார் . நான் அப்படியே ஓரமாக நடந்து தப்பித்து விடலாம் என்று திரும்பினேன் ஆனால் என் பங்காளிகள் என்னை என்ன நினைப்பார்கள் , வரலாறு பயன்தாகொள்ளி என்று பேசாதா என்று நினைத்து உள்ளே நுழைந்து விட்டேன்.
அங்கு தெரிந்தவர்கள் நெறைய பேர் இருந்தார்கள். அங்கிருந்த பெண்மணியிடம் பயசிரிப்போடு பவ்வியமாக அந்த சீட்டை நீட்டினேன். என்னை மேலும் கிழும் பார்த்துவிட்டு அங்கு அமர்ந்திருந்த பூத் எஜண்ட்க்களை பார்த்தார். பின் ஏதோ சைகை கிடைத்து அவர் வைத்திருந்த பட்டியலை பார்த்துவிட்டு உங்க பேரு என்றர். நான் உலர்ந்த ஒலியில் முனு சாமி என்றேன். அவருக்கே சிரிப்பு வந்துவிட்டது. ஏங்க இந்த ஓட்டு முன்னாடியே போட்டசிங்க வெளிய போங்க என்றார். இது என்னடா ஜனநாயகத்துக்கு வந்த சோதனை என்று அமைதியாக திரும்பி விட்டேன். என்னை கூட்டிவந்தவன் அந்த போலீசிடம் சாவகசமாக பேசிக்கொண்டு இருந்தான். என்னை பார்த்து முடுஞ்சுதா தலைவரே என்றான். இல்லை என்று வேகமாக நடந்தேன். எதோ ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பிய மனநிலை. விடுபடல். சுகந்திரம்.
தூரத்தில் மகன் தெரிந்தான். தைரியத்தை முகத்தில் படரவிட்டு நிதானமாக அவனிடம் என்னடா ஓட்டு போட்ட பேரை மறுபடியும் குடுத்து இருக்க என்றேன். ஓ போட்டாச்சா . அவன் திரும்பி டேய் அந்த கண்ணியம்மா கிழவிது போட்டாச்சா பார்ரா என்றான். எனக்கு உள்ளுக்குள் மறுபடியும் ஆணி அடித்தது. சரி நா போய் சாப்புட்டு வரேண்டா என்று சைக்கிளை தாறு மாறாக மிதுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
இப்போது மின்னணு வாக்கு பதிவு , அடையாள அட்டை என்று நிறைய வந்துவிட்டது. அதன் பின் நான் ஒரே முறைதான் ஓட்டு போட்டேன். பெரும்பாலும் வெளியூரில் இருப்பேன். இப்போது வெளிநாட்டில்.
நான் அங்கு இருந்தால் வேட்பாளர்களை ஒரு அலசு அலசி இருக்கலாம். ஆனால் இப்போது அது முடியாத காரியம்.
வெற்றி பெருபவருகளுக்கு வாழ்த்துக்கள். வாழ்க ஜனநாயகம். வாழ்க தமிழகம்.
சனி, மே 14, 2016
வாழும் கலை அமைப்பின் விழா - 2016
வாழும் கலை அமைபின் சார்பாக நேற்று ஜுபைலில் ஆண்டு விழா நடந்தது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செயப்பாட்டு இருந்தது.
என்குடும்பமும் நண்பர்கள் சிலரும் கலந்துகொண்டோம். நாங்கள் செல்லும் போது கலைநிகழ்சிகள் துவங்கியிருந்தது.
சில நடனங்களை தவிர பிற அனைத்தும் பரத நாட்டியம் மற்றும் மோகினியாட்டம்.
சிப்பதிகாரத்தின் இறுதி காட்சியை ஒரு பெண் மோகினி நடனமாகா ஆடினாள். அந்த பாடல் தெலுகு மொழியில் இருந்தது. நடனம் கேரளத்தின் மோகினியாட்டம். கதை இன்றைய தமிழ் நிலத்தில் நடந்தது. இது ஒரு அழகிய பண்பாட்டுக்களவை.
பாரதம் , மோகினியாட்டம் போன்ற செவ்வியல் கலைகளை ரசிக்க நமக்கு பயிற்சி தேவை. ஏனெனில் அது இசை , நடனம் , ஒப்பனை என பல அடுக்குகளை கொண்டது. எனக்கு போதிய பயிற்சி இல்லாததால் பாவங்களையும் நடன அசைவுகளையும் உள்வாங்க சிரமமாக இருந்தது.
நடனம் ஆடிய அத்தனை பெண்களும் துல்லியமாக சிரத்தையோடு ஆடினார்கள். பயிற்சி கொடுத்த ஆசிரியரின் பாதங்களை தொட வேண்டும் போல் இருந்தது.
முழு ஆலங்காரத்தோடு அந்த பெண் பிள்ளைகள் மேடையில் வந்து நின்ற போது பயம் எழுந்தது. கவிதாவும் அதையேதான் உணந்தாள். அந்த முழுதனிக்கோலம் நம் மனதில் காலம் காலமாக பதிந்த அம்மனின் உருவம். அசைந்தாடும் அம்மன்.
போன வாருடம் நான் மேடையில் பாடினேன். இந்த வருடம் நான் பதிவு செய்தேன். ஆனால் வேலை அழுத்தத்தில் அதை கவனியாமல் விட்டு விட்டேன். நல்ல வேலையாக நான் மேடை ஏறவில்லை. மரபான நடனங்கள் அரங்கேறிய அந்த மேடையில் என் சில்லறை சினிமா பாடல் அரங்கேறவில்லை.
கலைநிகவு முடிந்தவுடன் சிறுவர்களுக்கான விளையாட்டு நடந்தது. பின் வாழும் கலை அமைப்பின் சார்பாக யமுனை நதிக்கரையில் நடந்த காச்சார விழாவின் தொகுப்பு திரையிடப்பட்டது.
மதிய உணவுக்குப்பின் நபர்களுடன் விடைபெற்று வீடு வந்தோம்.
நிறைவான விடுமுறை நாள்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)