"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

சனி, மே 14, 2016

வாழும் கலை அமைப்பின் விழா - 2016

வாழும் கலை அமைபின் சார்பாக நேற்று ஜுபைலில் ஆண்டு விழா நடந்தது. ஸ்ரீ  ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செயப்பாட்டு இருந்தது.

என்குடும்பமும் நண்பர்கள் சிலரும் கலந்துகொண்டோம். நாங்கள் செல்லும் போது கலைநிகழ்சிகள் துவங்கியிருந்தது.

சில நடனங்களை தவிர பிற அனைத்தும் பரத நாட்டியம் மற்றும் மோகினியாட்டம்.

சிப்பதிகாரத்தின் இறுதி காட்சியை ஒரு பெண் மோகினி நடனமாகா ஆடினாள். அந்த பாடல் தெலுகு  மொழியில்  இருந்தது. நடனம் கேரளத்தின் மோகினியாட்டம். கதை இன்றைய தமிழ் நிலத்தில் நடந்தது. இது ஒரு அழகிய பண்பாட்டுக்களவை.


பாரதம் , மோகினியாட்டம் போன்ற செவ்வியல் கலைகளை ரசிக்க நமக்கு பயிற்சி தேவை. ஏனெனில் அது இசை , நடனம் , ஒப்பனை என பல அடுக்குகளை கொண்டது. எனக்கு போதிய பயிற்சி இல்லாததால் பாவங்களையும் நடன அசைவுகளையும் உள்வாங்க சிரமமாக இருந்தது.

நடனம் ஆடிய அத்தனை பெண்களும் துல்லியமாக சிரத்தையோடு ஆடினார்கள். பயிற்சி கொடுத்த ஆசிரியரின் பாதங்களை தொட வேண்டும் போல் இருந்தது.

முழு ஆலங்காரத்தோடு அந்த பெண் பிள்ளைகள்  மேடையில் வந்து நின்ற போது பயம் எழுந்தது. கவிதாவும் அதையேதான் உணந்தாள். அந்த முழுதனிக்கோலம் நம் மனதில் காலம் காலமாக பதிந்த அம்மனின் உருவம். அசைந்தாடும் அம்மன்.

போன வாருடம் நான் மேடையில் பாடினேன். இந்த வருடம் நான் பதிவு செய்தேன். ஆனால்  வேலை அழுத்தத்தில் அதை கவனியாமல் விட்டு விட்டேன். நல்ல வேலையாக நான் மேடை ஏறவில்லை. மரபான நடனங்கள் அரங்கேறிய அந்த மேடையில் என் சில்லறை சினிமா பாடல் அரங்கேறவில்லை.

கலைநிகவு முடிந்தவுடன் சிறுவர்களுக்கான விளையாட்டு நடந்தது. பின் வாழும் கலை அமைப்பின் சார்பாக யமுனை நதிக்கரையில் நடந்த காச்சார விழாவின் தொகுப்பு திரையிடப்பட்டது.

மதிய உணவுக்குப்பின் நபர்களுடன் விடைபெற்று வீடு வந்தோம்.

நிறைவான விடுமுறை நாள்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக