என் வீட்டில் இருக்கும் பூனையை பார்க்கும்போதெல்லாம் எரிச்சல் எழும்
எப்போதும் பதுங்கி பதுங்கி சோம்பலாக மெல்நடையில் அருகில் வந்து குழைந்து படுத்துக்கொள்ளும்
அதை கொஞ்சினாலும் எந்த உணர்ச்சியும் காட்டுவதில்லை
பல நேரங்களில் அது என் அருகில் இருப்பது கூட எனக்கு தெரியாது
அதன் காலடியில் எந்த சத்தமும் எழுவதில்லை
பசிக்கும்போது மட்டும் " மியாவ் " என்று காலை சுற்றும்
பால் வைத்தால் பயந்து பயந்து பதுங்கி பதுங்கி குடிக்கும்
அந்த பால் தன்னுடையது என்ற உணர்வு அதற்கு வந்ததே இல்லை
நேற்று இரவு அது குழந்தை அழுவது போல கத்திக்கொண்டே இருந்தது
தூக்கம் கலைந்து அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து வீசினேன்.
அது ஜன்னல் வழியாக குதித்து ஓடியது .
காலையில் அரைத்துயிலில் மென்மயிர் காலில் உரசுவதை உணர்தேன்
பூனை காலடியில் சுருண்டது படுத்திருந்தது
அதை பலமுறை துரத்த முயற்சித்ததுண்டு , எங்காவது விட்டு விட்டு வந்து விடலாமா என்று கூட யோசித்ததுண்டு
ஆனால் இன்றும் அது என்னுடன் தான் இருக்கிறது
உன் பழைய நினைவுகளை போல

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக