"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

சனி, பிப்ரவரி 13, 2010

கேட்டது கிடைக்கும்

ஒரு அற்புதமான ஓவியர் இருந்தார் ஆனால் அவருக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம்.
அவர் மீது அன்பு கொண்ட ஒரு நல்ல நண்பர் இருந்தார்.
அவர் வியரின் படைப்புகளை கண்காட்சிக்கு வைக்களாம் என அறிவுரை கூறினார்.



ஓவியர் முதலில் நம்பிக்கை இல்லாமல் மறுத்தார் பின்பு ஒப்புக்கொண்டார்.
அற்புதமான அழகான ஒவியங்கள் காட்சிக்கு வைகப்பட்டது.
வியர் ஒரு நோட்டு புத்தகம் வைத்து
அதன்மேல் "வியத்தில் எதாவது குறை இருந்தால் இதில் எழுதுங்கள்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஒரு வாரம் கழித்து நண்பர் அவரை பார்க்க வந்தார்.
ஓவியர் கவலையாக அமர்ந்திருந்ததைக் கண்டு என்ன என்று விசாரித்தார், ஓவியர் நோட்டு புத்தகத்தை எடுத்து நீடினார்.அதில் ஒவ்வொரு ஓவியத்தை பற்றியும் குறைகள் ஏறாளமாக எழுதி இருந்தது நண்பர் அதை கண்டு புண்ணகை பூத்தார்.
பின்பு நண்பர் அந்த நோட்டு புத்தகத்தின்மேல் ஏதோ எழுதிவைத்துவிட்டு இன்னும் ஒரு வாரம் கழித்து இந்த புத்தகத்தை பார் என்று சென்றுவிட்டார்.
ஒரு வாரம் கழித்து மறுபடியும் அந்த நண்பர் திரும்பிவந்தார். ஓவியர் மகிழ்ச்சியில் நண்பரை கட்டி அனைத்துகொண்டார் ஒவ்வொருவரும் எவ்வளவு பாராட்டி எழுதி இருக்கிறார்கள் பாருங்கள் என்றார்.
நோட்டு புத்தகத்தின்மேல் என்ன எழுதி இருக்கிறது என்று பார்தாயா ?
மகிழ்ச்சியில் பார்கவில்லை என்று ஓவியர் கூறினார்.
பின்பு நண்பர் வாங்கி அதை படித்து காட்டினார்
"இந்த அற்புதமான ஓவியங்களில் நீங்கள் உணர்ந்த நுனுக்கமான அனுபவங்களை பதிவு செய்யுங்கள்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக