இங்கு சவூதியில் நாங்கள் இருக்கும் இடத்தில் இயற்கையின் வெளிபாடு என்றால் அது மணல் வெளி மட்டுமே, எதாவது ஒரு மரத்தை பார்த்தால் கூட சற்று நின்று பார்துவிட்டு போக தோன்றும்.இங்கு நான் இருகின்ற இடதின் சூழல்,மனிதர்கள்,ஒலிகள்,நிறங்கள்
அனைத்தும் என் மனதுக்குள் இறுக்கமான உணர்வுகளையே ஏற்படுத்தும்.
அதை போக்க வேண்டும் என்பதற்காகவே அங்கு ஊருக்கு வரும் போதெல்லாம் குடும்பத்தோடு எங்காவது வெளியில் போனால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்.
21.02.2010 அன்று குடும்பத்துடன் சாத்தனூர் அணை சென்று இருந்தேன்.
இந்த பயனத்தில் மூன்று விசயங்கள் எனக்கு பிடித்தன.
1.மீன்கள்
2.பள்ளி குழந்தைகள்
3.குடும்பம்
திருவண்ணாமலையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .சாத்தனூர் அணை.தென்பென்னை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
அணையின் நுழைவு பகுதியில் அரசு மீன் விற்பனை கூடம் இருக்கிறது,
அங்கு மீன்வாங்க டோக்கன் தருகிறார்கள்.
டோக்கன் வாங்கிக்கொண்டு அணை பகுதில் ஒரு இடம் பார்து அமர்ந்தோம்.
சுமார் 10 மணி அளவில் அணையிலிருந்து பிடித்துவரப்பட்ட மீன்கள் அனைத்தும் முறையாக வகைப்படுத்தி எடையிடப்படுகின்றன.
ஒவ்வொரு மீனும் 1 முதல் 6 கிலோ எடை வரை உள்ளது.ரோகு வகை மீன்களே அதிகம் விற்பனை ஆகின்றது.மீன்களை வெட்டி சுத்தம் செய்ய கிலோவுக்கு 5 ரூபாய். திருவண்ணாமலை தீபம் அன்று மட்டும் அணையில் மீன் பிடிப்பது இல்லையாம். மீன்களை பிடித்து உடனே சமைத்து சாப்பிட்டால் அளவுக்கு அதிகம் சாப்பிட்டாலும் திகட்டுவது இல்லை. அதுவும் வீடிலிருந்து இப்படி வெளியில் சமைக்கும் உணவு சற்று காரம்,சுவை இரண்டும் அதிகமாகவே இருக்கிறன.
சாப்பிட்டு முடித்துவிட்டு நானும் குழந்தைகளும் வெளில் சுற்றிப் பார்க்கச் சென்றோம். பெரும்பாலும் கிராமத்து பள்ளி குழந்தைகளே அங்கு அதிகம் சுற்றுலா வந்திருந்தனர். பொதுவாக கிராமத்து பிள்ளைகளுக்கு சில இயல்புகள் இருக்கிறன, கிடைக்காதவறிற்கு ஏங்குவது இல்லை,
எதையும் இயல்பாக எடுத்துக்கொள்ளுகிறார்கள்,
சுத்தத்தை பற்றி அதிகம் கவலை படுவது இல்லை.
அங்கும் அவர்களிடையே இவை காண முடிந்தது.
அங்கு பாராமறிப்பில் இருந்த பனியாளர்கள் அந்த குழந்தைகளை மறியாதை இல்லாமல் அதட்டுகிறார்கள் திட்டுகிறார்கள்,
அவர்கள் அதை பற்றி கவலை படவே இல்லை.
முதலை பன்னை, இயற்கை எழில்,ஆறு,பூங்கா என்று எல்லாம் இருந்தாலும் அவர்கள் அந்த கட்டுப்பாடு இல்லாத புதிய சூழல்,தங்களுக்குள் நெறுக்கம் ஆகும் நட்பு, விளையாடும் விளையாட்டு,திண்பண்டங்கள் இவைகளே அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்.மொத்தமாக என் கிராமத்து பள்ளி வாழ்கை எனக்கு ஞபகம் வந்தது.
சற்று நேரம் அங்கு சுற்றி பார்த்துவிட்டு மறுபடியும் இருப்பிடம் திரும்பினோம்.
குடும்பத்தோடு இருக்கும்போது மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை,சந்தோஷம் இருந்துக்கொண்டே இருக்கிறது.குடும்பத்தில் ஒவ்வொரு மனதும் ஒரு மெல்லிய இழையில் இணைக்கப்பட்டு இருக்கிறது.அதன் வழியே அன்பும் பாசமும் பரிமாரப்படுகிறன. சில தவறான எண்ணங்கள்,வார்த்தைகள் எளிதில் அந்த இழையை துண்டித்து விடும். அன்பு,பாசம் மட்டுமே உறவுகளை மேம்படுத்த உதவுவது இல்லை. ஆழ்ந்த கவனமும்,புத்திசாலித்தனமும் தேவை படுகின்றன.
எல்லாம் முடிந்து வீடு திரும்பும் போது உடல் கலைத்து போய் இருந்தாலும்
உள்ளம் அதிக புத்துணர்வு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக