"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "
செவ்வாய், மார்ச் 23, 2010
நீ இல்லாமல் நான் இல்லை
சென்ற வாரம் விஜய் டிவியில் "நீயா நானா நிகழ்ச்சி " பார்த்தேன்.
தலைப்பு மனைவி தன்னைவிட சற்று அதிகம் சம்பாதிப்பதை கணவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதை பற்றியது.
ஒரு சிலரைத்தவிர அனைவரும் கணவன் மனைவி உறவு பாதிக்காத வகையில் பேசினார்கள்.
அதனால் அவர்களால் உண்மை நிலையை வெளிபடுத்த முடியவில்லை.
அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் நாம் சற்று முன்னேறி இருந்தாலும் வாழ்வியலில் பின் தங்கித்தான் இருக்கிறோம்.
அதில் ஆண் பெண் ஏற்றத்தாழ்வு நம் சமுகத்தில் முக்கியமான ஒன்று.
நாம் வளர்கின்ற குடும்பச்சூழல் மற்றும் வெளிச்சூழல் பெண்கள் நமக்கு கீழானவர்கள் என்ற மனப்பான்மையை சிறு வயது முதலே நமக்குள்
ஏற்படுத்தி விடுகிறது.ஊடகங்களும் பெண்களின் இயல்பான நிலையை வெளிபடுத்தாமல் காட்சி பொருள் ஆக்கி விடுகின்றன.
அதனால் ஆண்கள் பெண்மையின் உண்மை இயல்புகளை எதிர்கொள்ளும் நிலை வரும்போது குழம்பிவிடுகின்றனர்.
இன்று தன்னை விட புத்திசாலியான பெண்கள் மத்தியில் வேலை பார்க்க வேண்டிய சுழல் ஆண்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அது அறிவு சார்ந்த விசயம் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் மனைவியின் புத்திசாலிதனத்தை ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் இன்னும் நமக்குள் வரவில்லை.
அது மனம் சார்ந்த விசயம்.
இந்த உலகத்தை பற்றிய புரிதல்,பொருளாதார மேன்மை,சார்பு இல்லாத வாழ்வு என்று பெண்களிடம் மாற்றகள் ஏற்பட்டுள்ளதால்
ஆண்களுக்கு தன் சொந்த விருப்பு வெருப்புக்களை பெண்களின் மேல் தினிக்கமுடிவது இல்லை.
அதேபோல சரியான புரிதலும்,பக்குவமும் இல்லாத பெண்களுக்கு கிடைக்கும் அதிகப்படியான சுதந்திரம் ஆண்களை அதிகம் பாதித்து விடுகிறது.
சமுதாயத்தில் மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய மனதின் மாற்றம் மட்டும் மெதுவாக நிகழ்கிறன.இதுவே பிரச்சனையின் அடிப்படை.
ஆண்,பெண் சமம் என்ற வாதத்தை விடுத்து இருவருக்கும் உள்ள தனித்தன்மைகளை சமமாக பகிர்ந்து வாழ்வதே வாழ்வை அழகாக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக