"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

புதன், மார்ச் 24, 2010

நீ முத்தமிடும் சத்தமும் செல்லமாய் அடிக்கும் போது எழும் சத்தமும்
எனக்கு ஒன்று போலவே கேட்கிறது.

கை மறந்து வைத்த பொருளை நான் தேடிமுடித்தாலும்
எனக்காய் இன்னும் நீ தேடிக்கொண்டு இருக்கிறாய்
அது கிடைக்க வில்லை என்றாலும் பரவாயில்லை
நீ கிடைத்திருக்கிறாயே அது போதும் எனக்கு.

எப்போதாவது என்னை ஓரிரு நாட்கள் பிரிந்திருப்பாய் அல்லவா
அந்த நாட்களுக்குண்டான ஆயிரம் முத்தங்களை இப்போதே என்னிடம் கொடுத்து வை.

குளிக்கப்போகும் போது டவலை மறந்து வைத்து விட்டுப்போ
குளித்தபின் நீ கதவுமறைவில் டவலை கேக்கும் போது
உன் ஈர முகத்தில் பூத்திருக்கும் வெக்கத்தை என் கண்கள் பறிக்க ஆசை படுகின்றன .

என் உணவில் பாதியை உன் தட்டில் போட்டுக்கொள்
ஏன்னெனில் உனக்கான உணவில் பாதியை எனக்கே ஊட்டி விடுகிறாய்.

நீ அருகில் இருக்கும் போது இனி கவிதை எழுதப்போவது இல்லை
உன்னை படிப்பதைவிட எழுதுவதில் என்ன சுகம் வந்துவிட போகிறது.

என் மகிழ்வுக்காக உன் எந்த இயல்பையும் நீ மாற்றிக்கொள்ளவில்லை
உனக்குத்தெரியுமா உன் இந்த இயல்பு தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக