பள்ளி விடுமுறை நாள் ஒன்றில் நானும் கூட்டாலி வெகுளி கோபாலும், காலையில் கேள்விறகு கூழை வெள்ளம் கடித்து குடித்து விட்டு கிளம்பினோம். ஒரு நீண்ட மூங்கில் அதன் மேல் ஒரு நீண்ட சோல தக்கை, தக்கையின் இறுதியில் சற்று பிளந்து ஒரு சிறிய குச்சி சொருகி கட்டிகொண்டோம் ( தொறடு ). பள்ளிக்கு எடுத்து செல்லும் மஞ்சள் பை ஒன்று எடுத்துக்கொண்டோம். மாடு மேய்க்கும் பொழுது பார்தேன்டா காணாத்து ஓரம் கோணக்கா மரத்துல ( கொடுக்கா புலி ) லட்டு லட்டா தொங்குது என்று கோபால் கண்களை விரித்தான். தொரடை எடுத்துக்கொண்டு ஐந்து நிமிடத்தில் கானாற்றை அடைந்தோம். கானாறு தண்ணிரை கானா ஆறு. அதன் ஒரு பக்க நெடுக்கிலும் கோணக்கா மரங்கள். நான் தொரடில் கோணக்கா அறுக்க ஆரம்பித்தேன். சிவந்து வட்ட வட்டமாக காய்கள்.அவைகள் எப்போதும் காய்கள் தான். வெளியே தோல் மட்டும் சிவக்கும். உள்ளே வெண்ணிற சோறு பழுக்காது . மூன்று வகையான கோணக்க உண்டு. ஒரு வகை சுவைக்கும் , எவ்வளவு வேண்டுமானாலும் தின்னலாம், மறு வகை துவர்ப்பு , ஒன்று தின்றாலே தொண்டை அடைக்கும். இன்னொரு வகை இனிப்பும் இல்லாமல் துவர்ப்பும் இல்லாமல் வெறும் சோறு தின்பது போல இருக்கும். கோணக்க மரம் ஒரு அரசமரம் போல பெரியதாக வளரும் ஆனால் முட்கள் நிறைந்தது . எனக்கும் ஒரு முள் காலில் ஏறியது. ஆ..என்று முல்லை வெளியே எடுத்தால் கொஞ்சம் ரத்தம் வெளியில் வந்து புன்னகைத்தது. கோபால் ஓடி சென்று ஒரு எருக்கம் இலையை பரித்துவந்தான். அதில் வரும் பாலை ரத்தத்தை துடைத்துவிட்டு அந்த இடத்தில் ஒற்றினான். சில்லென இருந்தது. பின்பு அதன் மீது கொஞ்சம் மண்ணை எடுத்து தூவினான். பை முழுவதும் கோணக்காய் நிரம்பியது. இதுவே போதும் என்று பங்கு பிரித்து கொண்டு நடந்தோம். வழியில் ஒரு உயரமான வரப்பில் அமர்ந்துகொண்டு கோணக்காய் முழுவதும் தின்று தீர்த்தோம். காலுக்கு கிழே ஓடிய கால்வாய் நீரை எடுத்து குடித்து விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
இன்னொரு நாள் மாலை கோபால் ஓடிவந்து " பக்கத்துக்கொல்லியில் ஆளடுறாங்க வரியா போலாம் " என்றான்.
ஆளை ஆடுதல் என்றால் ஆலையில் கரும்பை பிழிந்து வெல்லம் செய்தல் என்று பொருள். இருவரும் ஆலை இருக்கும் இடத்துக்கு சென்றோம். அடிகரும்பை உடைத்து தின்றோம். கரும்பு ஆலை ஒரு சிறிய இயந்திரம். அதில் மூன்ரு இரும்பு உருளைகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு சுற்றுமாறு பொருத்தப்பட்டு இருக்கும். இதை மோட்டாருடன் இணைக்க ஒரு பெரிய சக்கரம் இருக்கும். பிழிந்த கரும்பு சாறு ஒரு தொட்டியில் சேகரித்து வைப்பார்கள். இந்த சாற்றை கொதிக்க வைக்க இரண்டு மீட்டர் விட்டம் உள்ள பெரிய அடுப்பு அதை விட சற்று பெரிய கொப்பரை இருக்கும். கொப்பரையின் பாதி அளவு கரும்பு சாறு நிரப்பப்படும். அடுப்பை எரிக்க கரும்பு சக்கை காயவைத்து பயன்படுத்துவர். காய்ந்த சக்கைக்கு ' கோது ' என்று பெயர். சாறு சற்று கொதித்ததும் கொஞ்சம் சுண்ணாம்பு நீர் சாற்றில் விடுவார்கள். சிறிது நேரத்தில் கருப்பான அழுக்கு மற்றும் சகடுகள் மேலே மிதக்கும். ஒரு முனையில் சிறிய கூடை பொருத்திய நீண்ட கொம்பு மிதக்கும் அழுக்கை எடுக்க பயன்படும். இந்த அழுக்கும் சகடும் பன்றிகளுக்கு உணவாக கொடுக்கிறார்கள். இனி கொஞ்சம் ஐட்ரோஸ் என்ற வேதிப்பொருள் கலந்தால் வெல்லம் மஞ்சளாக வரும். சிலர் வெண்டக்காய் செடியை இடித்தும் போடுவார்கள். எதுவும் கலக்கவில்லை என்றால் கருப்பாக வரும்.
ஆற்று ஓரம் விளையும் கருப்பில் வெல்லம் மஞ்சளாக வரும்.ஒரு கம்பில் கலக்கி கொண்டே இருந்தால் சாறு கொஞ்சகொஞ்சமாக வெல்ல பாகாக மாறும். பதம் பார்க்க பாகை கொஞ்சம் தண்ணீரில் விட்டால் முற்றிலும் கரைந்து விட்டால் பதம் இன்னும் வரவில்லை என்று அர்த்தம். அடியில் தேங்கினால் பதம் வந்து விட்டது என்று பொருள். பாகின் மனம் சுவையான மனம் , அது உடல் முழுவதிழும் பரவும். நான்கு பேர் சேர்ந்து கொப்பரையை தூக்கி பாகை ஒரு அகலமான தொட்டியில் ஊற்றுவர். ஊற்றிய பாகை ஒரு முனையில் சிறிய பலகை பொருத்தப்பட்ட கம்பில் துழவிக்கொண்டே இருப்பர் . பாகு சூடு குறைந்து கெட்டியாகத்துவங்கும். முழுவதும் கெட்டியானபின் பாகு, வெல்லமாக மாறும். உதிரி நிலையில் இருக்கும் வெல்லத்தை ஒரு கை குட்டை போன்ற துணியில் இரண்டு கைநிறைய எடுத்து வைத்து உருண்டை உருட்டுவர். உருண்டைகள் சிறிது நேரத்தில் காய்ந்து விடும்.
அங்கு இருந்தவர் கொஞ்சம் சூடான வெல்லத்தை கையில் கொடுத்தார். எங்களுக்கு ஜோங்கு வெல்லம் வேண்டும் என்றோம். ஒரு சிறிய கரும்பு துண்டை உடைத்து அதன் ஒரு முனையில் கொப்பரையில் மீதம் இருந்த பாகை எடுத்து சுருட்டி தண்ணிரில் நனைத்து கொடுத்தார். பாகு இளம் சூட்டில் மெது மெதுவென இருந்தது. அப்பா அதன் சுவை இன்று நினத்தாலும் நாவில் உமிழ் ஊருது.
ஒரு நாள் நாவல் பழம் தின்னலாம் என கன்னி கோவிலுக்கு சென்றோம். மரம் நல்ல உயரம். நாவல் மரம் வழுக்கும் எளிதில் ஏறமுடியாது. கிழிருந்தே அடிக்கலாம் என கர்களை எடுத்து வந்தோம். கல்லடி அதிகம் வாங்கும் மரங்கள் மாமரம், புளிய மரம், நாவல் மரம். நம் மூலை அபாரமானது , கண்களில் பழத்தின் தூரத்தை கணக்கிட்டு எந்த திசையில் இவ்வளவு விசையில் கல்லை எரிய வேண்டும் என நொடிபொழுதில் கணக்கிட்டு விடும். கோபாலு கர்களை எறிவதில் கில்லாடி, ஒருகாலை தூக்கி கொண்டு கல்லை முத்தமிட்டு குறிபார்த்து எறிவான் . நாவலின் அடர் நீலம் நாவில் படரும். துவர்ப்பும் இனிப்பும் வாய் முழுவதும் பரவி தொண்டையில் சற்று அடைக்கும். உப்பும் சேர்த்து தின்றால் சுவை கூடும். நாவல் மர கிலையில் வில் செய்தால் அம்பு வெகு தூரம் வரை பாய்ந்து செல்லும் என ஒரு பெரியவர் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்.
என் சிறிய வயதில் நாட்டு பப்பாளி மரம் எங்கள் வீட்டு பின்புறம் இருந்தது. காய் பழக்காயாக இருக்கும் போதே பறித்து விடுவோம். உயரமான மரம் என்பதால் குச்சியில் பப்பாளியை தள்ள முடியாது. அதனால் நான் தான் மரத்தில் ஏறுவேன்.மரத்தில் இரண்டு கால்களையும் பின்னிக்கொண்டு இரண்டு கைகளாலும் பழத்தை அறுத்து கிழே போடுவேன். மரத்திலிருந்து கிழே இறங்கும் பொது மேலே பார்க்கக்கூடாது. பழம் அறுத்த இடத்திளிருந்து பால் வடியும் , அது கண்களில் பட்டால் கண்கள் சிவந்து எறியும். பழக்காயை அடியில் செதுக்கி விட்டால் இரண்டு நாளில் பழுத்து விடும். பழக்காயை முழுவதுமாக தோல் சீவி சாப்பிட்டால் வெள்ளியே சற்று கடினமாகவும் உள்ளே பழமாகவும் சுவையில் திளைக்கலாம்.
வெயில் காலம் பன நுங்கு காலம். பனமரம் ஏற கூடுதல் கவனமும் பழக்கமும் வேண்டும். எங்கள் நிலத்தில் பனைமரங்கள் இருந்தது. ஆள் வைத்து தான் நுங்கு வெட்டுவோம். என் அண்ணன்கள் நுங்கு சீவி தருவார்கள்.முதல்லில் இளம் நுங்கு கிடைக்கும். அதை விரைவாக தின்றுவிட்டால் அடுத்து முற்றிய
நுங்கு கொடுத்து விடுவார்கள். அதை கஷ்ட்டப்பட்டு நோண்டி தின்பதற்குள் அவர்கள் எல்லாம் முடித்துவிட்டு கிளம்பி இருப்பார்கள். ஒரு மாதம் கழித்து வெட்டாத நுங்கு பழுக்க துவங்கும். பழக்காயாக இருக்கும் பொது அதை சீவி ஒரு பானையில் உப்பு போட்டு வேகவைத்தால் அதற்க்கு சக்கை என்று பெயர். அதன் மனம் வீடு முழுவதும் பரவும் சுவை நா முழுவதும் பரவும். பனம்பழம் பழுத்து ஒவ்வொன்றாய் கிழே விழும். அதை பிளந்தால் மூன்று பகுதியாக பிரியும். உள்ளே மஞ்சள் நாறாக, நார் முழுவதும் சாறாக இருக்கும். பனம்பழத்தை நெருப்பில் சுட்டு தின்றால் அதன் சுவையை எந்த வார்த்தை கொண்டு எழுதுவது தெரியவில்லை. பழத்தை சுடாமல் ஒரு மண் மேடு அமைத்து புதைத்து வைத்தாள் அது வேர்விட்டு , வேர் பனங்கிழங்காக மாறும். கிழங்கை அவித்து தின்னலாம். கிழங்கு வராத கொட்டையை குறுக்காக வெட்டினாள் உள்ளே தேங்காய் பூ போல இருக்கும். அதை வாயில் போட்டால் பஞ்சை தேனில் நனைத்து வாயில் போட்டது போல இருக்கும்.
எங்காவது தென்னை மரம் வெட்டினால் எங்களுக்கு கொண்டாட்டம் தான். மரம் வெட்டிகள் மரத்தின் தலையை வெட்டி ஓரமாக போட்டு விடுவார்கள். அதை நாங்கள் ஒவ்வொரு மட்டையாக குருத்துவரை வெட்டுவோம். தென்னங்குருத்து வெண்மஞ்சலில் துவங்கி போகப்போக வெண்ணிறமாக இருக்கும். பார்க்கவே அழகாக இழைத்த தந்தம் போல. அதை சாப்பிட்டால் கெட்டியான வெண்ணிலா ஐஸ் கிரீம் போல சுவைக்கும். நல்ல வைரம் பாய்ந்த பட்டு போன மரத்தை துண்டாக வெட்டினால் வெட்டிய பகுதியிலிருந்து நீர் சுரக்கும். அதை ஒரு பாத்திரத்தில் சேமித்து குடித்தால் இளநீரைவிட இரு மடங்கு சுவைக்கும். அரசு தென்னை மரத்திலிருந்து கள் இறக்க அனுமதித்த பொழுது எங்கள் தோப்பிலும் கள் இறக்கினோம். தென்னம் பாலையை பாதியாக அறுத்து முனையில் கயிர் கொண்டு கட்ட வேண்டும். அதை ஒரு மர சுத்தியல் கொண்டு தட்ட வேண்டும். ஒரு பானையை அதன் மேல் கவிழ்த்தால் மறுநாள் அதில் கள் வடிந்திருக்கும். பானையின் உட்புறம் சுண்ணாம்பு தடவி வைத்தால் பதநீர் வடிந்து இருக்கும். ஒருமரத்து கள் உடம்புக்கு நல்லது என்பர். புதியதாக இறக்கப்பட்ட கள்ளில் பழைய கள் மற்றும் சாக்கிரீம் வேதிப்பொருள் , நீர் கலந்து வியாபாரம் செய்தனர்.
ஒடுக்கத்தூர் கொய்யாபழம் என்றால் வேலூர் மாவட்டத்தில் பிரபலம். மலை சார்ந்த இடம் ஒடுக்கத்தூர். ஆதலால் அந்த ஊர் கொய்யாபழம் தனி சுவை. பக்கத்து தோட்டத்தில் ஒரு மரம் இருந்தது. அதன் பழம் உள்ளே வெண்சிவப்பு வெளியே பச்சைநிறம். அதன் வாசமே எங்களையும் பறவைகளையும் இழுக்கும்.
இந்த பட்டியல் வெகு நீளமானது தென்னை மர பொந்தில் சிறு தேனீக்களை விரட்ட துளசி இலைகளை மென்று அதன் மேல் துப்பி தேனாடையை வாயில் போட்டு சுவைத்திருக்கிறோம். இரவு நேரங்களில் வேர் கடலை செடியை பிடுங்கி கால்வாய் தண்ணீரில் கழுவி மண் மனத்தோடு தின்றிருக்கிறோம். அம்மியில் உப்பும், மிளகாய் தூளும் வைத்து நசிக்கிய வெட்டு மாங்காய் , உப்பு தடவிய சிறு நெல்லி, பொறிகலந்த வறுத்த ஈசல், பழுத்த ஈச்சம் பழம் , மந்தகாளி பழம், சுட்ட கேள்விறகு கதிர், வெள்ளம் கலந்த கம்பு, வறுத்த சோளம், பாதி பழுத்த புளியம் பழம், கோவை இலை எழுதும் பலகைக்கு கோவை பழம் எழுதும் நமக்கு.
நாக்கு இந்த அணைத்து சுவைகளையும மூளையில் அதற்கான folder யில்
சேமித்து வைத்துள்ளது. சுவைகள் மறக்காமல் இருக்கவே நாக்கு எப்போதும் ஈரமாகவே உள்ளது.
இதில் ஒன்றை கூட என் மகன் விரும்பி உண்பான என ஐயம் தான். அவனுக்கு தெரிந்த சிற்றுணவு சிப்ஸ் மற்றும் சில பிஸ்கட் வகைகள். கிராமத்து சிற்றுணவு ஒரு தனி உலகம் அதில் சுவை ஒரு அழகான தேடல். அந்த உலகம் என் மகனுக்கு அறிமுகம் ஆகாமலே போகும் என்பதை நினைத்தால் வருத்தமாகவே உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக