அஸ்வின் அவன் நினைத்தது போலவே காலை ஆறு மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்தான், இரண்டு கைகளை உரசி கண்களில் ஒற்றிக்கொண்டான், மெதுவாக கண் திறந்து உள்ளங்கையை பார்த்தான். அவன் எப்போதும் அலாரம் வைத்து தூங்குவது இல்லை. அவன் உடல் எப்போது விழிக்கிறதோ அப்பொழுதே எழுவான். எழுந்து வந்து வெளியில் ரங்கசாமியை தேடினான். ரங்கசாமி மாடுகளுக்கு தீவானம் வைத்துக்கொண்டு இருந்தான்.
அஸ்வின் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மிகு மின்னிலயங்களை அமைக்கும் நிறுவனத்தில் பொறியியல் வல்லுனராக வேலை பார்த்தான். அப்பா சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். அம்மா வீட்டு நிருவாகி. ஒரு தங்கை, வழக்கம் போல US மாப்பிளையை மணமுடித்து அங்கேயே தங்கிவிட்டார். அஸ்வின் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் வேலை பார்த்தான். வேலை நடக்கும் இடம் அந்த நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள கிராமம். அவனுக்கு கிழே ரங்கசாமியும் 50 தொழிலாளிகள் வேலை செய்தனர். மேல் இடத்திலிருந்து எப்போதும் ஒரு அழுத்தம் அவனுக்கு இருந்துகொண்டே இருக்கும் . உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேயே இருப்பான். நேரம் தவறிய உணவு, தூக்கம் மற்றும் நிலை தவறும் போதை என்று ஒரு சராசரி இளஞ்சனாக இருந்தான். தானாக உடல் பருத்தது, தலை முடி கொட்டியது, சின்ன சின்ன நோய்கள் வந்துகொண்டே இருக்கும்.
திடீர் என ஒரு நாள் காலை சென்னையில் இருக்கும் தன் வீட்டுக்கு வந்தான்.அலுவலகத்துக்கு கிளம்பிக்கொண்டு இருந்த அப்பாவின் முன் வந்து நின்றான். உள்ளிருந்து வந்த அம்மா ஆச்சிரியத்துடன் என்னடா திடீர்ன்னு வந்து நிக்கிற, போன் கூட பன்னல என்றார். அப்பாவும் அதே ஆச்சிரியத்தோடு அவனை பார்த்தார். அவன் எதுவும் பேசவில்லை. தன் அறைக்கு சென்று படுத்துக்கொண்டான். அப்பாவும் அம்மாவும் தொடர்ந்து கேட்டும் அவன் எதுவும் கூரவில்லை , அதன் பின் யாரும் எதுவும் அவனை கேட்கவில்லை.
பத்து நாட்கள் மௌனமாக கடந்தது. ஒரு விடுமுறை நாளில்அப்பா ஓய்வாக படுத்துக்கொண்டு இருந்தார். அஸ்வின் மெதுவாக அவரிடம் சென்று அப்பா நமக்கு ஊர்ல எவ்வளவு நிலம் இருக்கும் என்று கேட்டான். அவர் அது இருக்கும் ஒரு ஆறு ஏக்கர், ஏன் என்றார். நா அங்க போய் மாட்டு பண்ணை வைக்கலாம் என இருக்கேன் என்றான். அதை பார்த்துக்கொண்டு இருந்த தங்கை "களுக்" என்று சிரித்தாள். நீ என்ன லூசாட போய் மாடு மேய்க்க போரியா என அம்மா கேட்டாள். அப்பா எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தார். அடுத்த பத்து நாட்கள் இதை பற்றிய பேச்சாக இருந்தது.
இருதியில் அஸ்வின் அவன் சொந்த கிராமத்துக்கு வந்தான். அவன் பெரியப்பா ஒரு இயற்கை விவசாயி. அவர் இவர்களின் நிலத்தையும் சேர்த்து கவனித்து வந்தார். அவரின் உதவியோடு தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் ஒரு மாட்டு பண்ணையை உருவாக்கினான். விவசாயத்தை மெல்ல மெல்ல அவன் பெரியப்பாவிடம் கற்றான். ஆறு ஏக்கர் நிலத்தில் நான்கு ஏக்கர் விவசாயம் செய்யவும் ஒரு ஏக்கர் மாட்டு பண்ணைக்கும் ஒரு ஏக்கரில் ஒரு சிறிய வீடும் அதை சுற்றி தோட்டமும் அமைத்திருந்தான்.
மச்சு வீடு, முன்பக்கம் அகலமான திண்ணைகள், அதன் ஓரங்களில் பூதொட்டிகள் வரிசையாக , உட்பக்கம் ஒரு அகலமான உஞ்சல் , சுவர் ஓரம் அலமாரி அதில் வரிசையாக புத்தகங்கள் . அதன் அருகில் அகலமான நாற்காலிகள் . உட்புறம் அஸ்வினின் அறை . மூலையில் ஒரு மண்பானை அதில் குடிநீர். தெற்கு தலை வைத்து படுக்கும் படி அமைந்த கட்டில் மற்றும் துணி வைக்கும் அலமாரி. ஒரு land line Phoneம் Internetவுடன் ஒரு Laptopம் இருந்தது . வீட்டின் கூரை மேல் சுரைக்காய் கொடியும் அவரை கொடியும் படர்ந்து குடி இருந்தது. வீட்டை சுற்றி மலர் தோட்டங்களும் அறிய வகை மூலிகை செடிகளும் வளர்த்திருந்தான் . சற்று தொலைவில் ஒரு அகலமான பெரிய கிணறு. அதற்க்கு பக்கத்தில் ஒரு பெரிய வேப்பமரமும் சில புங்கை மரங்களும் இருந்தது. அதன் அடியில் ஒரு சிமண்ட் மேடை அமைத்திருந்தான்.
மாட்டு பண்ணைக்கு அருகில் இரண்டு பெரிய அறைகள் இருந்தது. ஒன்றில் விவசாய பொருட்களும் இருந்தது. இன்னொரு அறையில் ரங்கசாமி இருந்தான்.
இப்பொழுது ரங்கசாமி அஸ்வினிடம் வந்தான். பால் காச்சட்டுமா சார் என்றான். சரி நான் குளிச்சிட்டு வரேன் என்று கிணற்றுக்கு போனான். போகும்போது தலைக்கு சியக்காய் தூளும், உடம்புக்கு மற்றொரு தூளும் எடுத்து சென்றான்.
கிணற்றில் இறங்கி குளிர்ந்த நீரில் கண்களை கழுவினான். கொஞ்சம் தண்ணிரை எடுத்து தலையில் தெளித்துக்கொண்டு பின்பு முழுவதும் இரங்கி நீரில் மூழ்கினான். குளிர்ந்த நீர் அவன் உடல் சூழ்ந்து தாங்கியது. சிறிய மீன்கள் அவன் உடல் முழுவதும் முத்தமிட்டது. தன்னிலை இழந்து தன்னை நீராக நினைத்து மிதந்தான். உடலும் மனமும் எடை இழந்து நீர் சிறகாள் நீரிலே மிதப்பது போல உணர்ந்தான்.
குளித்து முடித்து மேலே வந்தான். உடைகளை மாற்றிக்கொண்டு வேப்ப மரத்தடியில் உள்ள சிமண்ட் மேடைக்கு சென்று சூரிய நமஸ்காரம், யோகம் தியானம் மற்றும் பிரணாயாமம் செய்து முடித்தான்.
ரங்கசாமி வந்து சார் அப்பா போன் செசினாடு நாளைக்கு இக்கட ஒச்தராம் என்றான். அஸ்வினுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. கடந்த மூன்று வருடங்களாக அப்பாவும் அம்மாவும் இங்கு ஒரு மமுறை கூட வந்தது இல்லை. இவன் சென்னைக்கு ஆறு ஏழு முறை சென்றிருக்கிறான். அவன் தங்கை திருமணத்தில் கூட விவசாயி என்பதால் சரியாக முக்கியத்துவம் தரப்படவில்லை.
அஸ்வின் அப்பாவுக்கு போன் செய்தான். என்ன பா இங்க வரிங்களா என்றான். ஆமாண்டா , நானும் அம்மாவும் இந்த vacation க்கு US போலந்தான் Plan, ஆனா என்னோட passport ல சின்ன Problem அதான் அம்மா மட்டும் US போறா நா தனியா எங்க போறதுன்னு தெரியல அதான் அங்க உன்னோட ஒரு மாதம் தங்கலாமுன்னு வரேன் என்றார். சரிப்பா என்று போன் வைத்து விட்டு வந்தான்.
ரங்கசாமி கேள்விறகு கூழ் நல்ல கெட்டி தயிர் போட்டு கரைத்து வைத்திருந்தான். அதை இருவரும் குடித்துவிட்டு தோட்டத்தில் வேலை செய்ய கிளம்பினார்கள்.
மறுநாள் இரவு அப்பா வந்து சேர்ந்தார். அஸ்வின் பேருந்து நிலையத்திற்கு சென்று அழைத்து வந்தான். அவனை பார்த்ததும் அவரை அறியாமலே சந்தோஷமாக இருந்தது அவருக்கு. எப்படியாவது இந்த ஒரு மாதத்தில் அவன் மனதை மாற்றி சென்னைக்கு அழைத்து சென்று ஒரு நல்ல வேளையில் சேர்த்து திருமணம் முடிக்க வேண்டும் என நினைத்தார்.
காலை அப்பா எழுவதற்கு முன்னாள் அஸ்வின் எழுந்து யோகா செய்து கொண்டு இருந்தான். அப்பா எழுந்து வெளியில் வந்தார். அவர் வருவதை பார்த்த ரங்கசாமி சார் மீக்கு ஏதாவது வேணும்னா என்கிட்ட செப்பண்டி சார் என்றான். நீ ஆந்திராவ என்றார் , ஆமாம் என்றான் ரங்கசாமி, சரி பல்விளக்க pest எடுத்துவா என்றார். சார் பேஸ்ட் இல்ல நிலை அவரை போடி இருக்கு இல்லேனா வேப்பங்குச்சி இருக்கு. அப்பா அவனையே கொஞ்ச நேரம் பார்த்து விட்டு சரி வேப்பங்குச்சிய ஓடிசிட்டு வா அப்புறம் நல்லா கொதிக்க கொதிக்க சுடு தண்ணீர் காய வை என்று சொல்லி விட்டு காலை கடன் முடிக்க சென்றார். ரங்கசாமி வேப்பங்குச்சிய ஒடித்து வந்து வைத்தான், கொஞ்சம் தண்ணிரை சுட வைத்து பச்சை தண்ணிரில் உற்றி வேலாவினான். அப்பா காலை கடனை முடித்து விட்டு வந்தார். சார் பச்ச தண்ணியில பிராணன் இருக்கு அதுல குளிச்சா உடம்புக்கு நல்லது ஆனா உங்களுக்கு பழக்கம் இல்ல அதனால சுடுதண்ணி பச்சதண்ணி இரண்டும் கலந்து வச்சிருக்கேன், சோப்பு இல்ல அதுக்கு பதிலா அஸ்வின் சார் ஒரு பவுடர் வச்சிருக்காரு , அது பாசி பருப்பு , கஸ்துரி மஞ்சள் , செம்பருத்தி, பாதம் , ரோஜா இதழ் போட்டு அரைச்சது , சாம்பு இல்ல சியக்காய் தூள் இருக்கு , குளிச்சிட்டு வாங்க உங்களுக்கு சாப்பாடு ரெடி பண்றேன் என்று சொல்லி விட்டு சென்றான். என்னடா காட்டுவாசிங்க மாதிரி வாழ்ரிங்க என்று சொல்லிவிட்டு குளிக்க சென்றார்.
அப்பா பத்தாம் வகுப்பு படிக்கும் வரை இங்கு தான் வளர்ந்தார், அதன் பின் hostelலில் தங்கி சென்னையில் படித்தார் அதன் பின் ஊர் பழக்கம் அத்தனையும் மறந்து போனார். அவர் குளித்து முடித்து வந்தார் அதே நேரத்தில் அஸ்வினும் வந்தான். இருவரும் சாப்பிட அமர்ந்தனர். ரங்கசாமி இருவருக்கும் தோசை வார்த்து பரிமாறினான். அது வித்தியாசமாக இருந்தது. அப்பா அவனை பார்த்தார் அவன் ராகி, கம்பு, அரிசி , சோளம் எல்லா மாவையும் கலந்து நைட் தண்ணி ஊத்தி வச்சா காலையில தோசைமாவு ரெடி சார் என்றான். தோசை நன்றாக மொரு மொரு என்றிருந்தது , தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி.
பால் பண்ணையிலிருந்து வந்த ஒரு ஆள், வண்டி தயாராக உள்ளது என்றார். அஸ்வின் அங்கு சென்றான், அப்பாவும் சென்றார். 80 லிட்டர் கொண்ட மூன்று பால் கேன்கள் ஒரு சிறிய வண்டியில் ஏற்றி இருந்தார்கள். அதில் ஒன்று உள்ளூர் விற்பனைக்கும் மற்ற இரண்டு பால் சொசைட்டிக்கும் போகவேண்டும்.
மேலும் இரண்டு மூட்டை கத்திரிக்காய் மற்றும் பத்து வாழை தார் உழவர் சந்தைக்கு சென்றது. வண்டி சென்றதும் அஸ்வின் நிலத்துக்கு நீர் பாச்ச சென்றான். அப்பாவும் அவனுடன் சென்று நிலங்களை சுற்றி பார்த்தார். நிலத்தில் கூலி ஆட்கள் வேலை செய்தார்கள். அப்பா மெதுவாக பேச்சு கொடுத்தார், அஸ்வின் நீயேண்ட இப்படிவந்து கஷ்ட படுற சென்னைக்கு வந்து எதாவது கம்பெனில joint பண்ணு உனக்கு பொண்ணு பார்க்கணும் கல்யாணம் பண்ணனும் என்றார் . அஸ்வின் நா இங்க நிம்மதியா இருக்கேன். ஒரு லிட்டர் பால் 20 ரூபாய் 240 லிட்டர் தினமும் கிடைக்குது. அதில்லாம நிலத்திலும் வருது. இன்னும் என்ன வேணும் என்னோட life style க்கு இது அதிகம் . நீங்க வேணுன்ன இங்க வாங்க என்றான். அப்பா எதுவும் பேசவில்லை. மதியம் வரை அங்கேயே வேலை செய்துவிட்டு வீடு வந்தனர்.
ரங்கசாமி நாட்டு கோழி குழம்பு வைத்திருந்தான். நல்ல வாசனை. மூவரும் சாப்பிட அமர்ந்தனர். அஸ்வின் கிழே சம்மணம் இட்டு அமர்ந்து சாப்பிட பழகி இருந்தான் . அப்பாவுக்கு அப்படி அமர கஷ்டமாக இருந்தது. சோறு சற்று மங்கலான நிரத்தில் இருந்தது. முற்றிலும் இயற்கை விவசாய முறையில் விளைந்தது. கையில் எடுத்தாள் சற்று வழு வழுப்பாகவும் நல்ல சுவையாகவும் இருந்தது. அஸ்வின் அப்பா சாப்பிடுவதை கவனித்தான். அவர் வாய் திறந்து உணவை பாதி மென்று அப்படியே விழுங்கினார். அப்பா கொஞ்சமா சோறு எடுத்து வாய்ல போட்டு சுவைய feel பண்ணுக அப்புறம் நல்லா கூழ் மாதிரி எச்சில் சேர்த்து மெல்லுங்க, அப்புறம் விழுங்குங்க என்றன். அப்பா , ஏன்டா என்றார் . நமக்கு பாதி நோய் சரியா சாப்பிடாம தான் வருது நா சொல்ற மாதிரி சாப்பிடு சுகர் இருந்தாலும் இனிப்பு சாப்பிடலாம் என்றான். அப்பா கொஞ்சம் முயற்சி செய்தார். முடியாமல் பழையபடியே சாப்பிட்டார். அஸ்வின் சாப்பிடும் போதும் சாப்பிட்ட பின்பும் தண்ணிர் குடிக்கவில்லை. அரை மணி நேரம் பொருத்து குடித்தான்.
அஸ்வின் இன்டர்நெட்டில் எதையோ தேடிக்கொண்டு இருந்தான். அப்பா ஓய்வாக கண்மூடி நாற்காலில் தூங்கினார்.
முன்மாலையில் அஸ்வின் அப்பாவை எழுப்பினான். மாலையில் பால் கறக்க ஆள் வரும் பார்த்துக்கொள்ளுங்கள் நான் வெளியில் போய் விட்டு வருகிறேன் என்றான். தினமும் ரெண்டு meeting மற்றும் எவ்வளவு பிரச்சனைகளை எவ்வளவு ஆட்கள் நாம face பண்றோம் நம்மள மாடு மேய்க்க விட்ருவான் போல இருக்கே என்று எண்ணினார்.
இரவு அப்பா புத்தகம் படித்து கொண்டு இருந்தார்.தண்ணீர் குடிக்கலாம் என்றால் பானை தண்ணிர் தான் இருந்தது. ரங்கசாமியை அழைத்து கேன் வாட்டர் கிடைக்குமா என்றார் இல்லை என்றான் . அப்ப பெப்சி அல்லது கோக் வங்கி வா என்று பணத்தை நீட்டினார். ரங்கசாமி இல்ல சார் அதெல்லாம் வாங்கினா அஸ்வின் சார் திட்டுவார் என்றான். கிணத்து தண்ணியில pH value 8, மினரல் தண்ணியில pH value 6.8 லிருந்து 7 வரைக்கும் இருக்கும் பெப்சி கோக் ல 2.8 தான் இருக்கும் ஆனா நம்ம ரத்தத்தில 7.2 normal value. அதனால பான தண்ணிய குடிங்க சார் அதுல pH value 8லிருந்து 9 வரைக்கும் இருக்கும். அப்போது அஸ்வின் வந்தான். அஸ்வின் எங்கடா புடிச்ச இவன எது கேட்டாலும் ஒரு கத சொல்றான் என்றார் அப்பா. அஸ்வின் சிரித்துக்கொண்டே இல்ல பா அவன் சொல்றது சரிதாம்பா மண்பானையில இல்ல copper கொடத்துல தண்ணி ஊத்தி வச்சா pH value increase ஆகும் என்றான்.
சரி ஏதோ ஒண்ணு குடுங்கப்பா என்றார்.
இரவு உணாவாக பழங்களை சாபிட்டார்கள். அஸ்வின் ஒவ்வொரு திராட்சை பழமாக எடுத்து சுவைத்து தியானம் போல சாப்பிட்டான். அப்பா அதை பார்த்து ஒருவாரு சிரித்துக்கொண்டார். ரங்கசாமி சுண்ட காச்சிய பசும் பாலை அப்பாவிடம் கொடுத்தான். அந்த சுவையை அவர் மறந்தே போய் இருந்தார். அப்பா நாளையிலிருந்து நீயும் காலையில யோகா பண்ண வரிங்க என்றான் அஸ்வின். ஐம்பது வயசுக்கு மேல எனக்கெல்லாம் அது எதுக்கு பா என்றார் அப்பா . அவர் skapy ல் மனைவி மற்றும் மகளுடன் பேசி கொண்டு இருந்தார், அவர்கள் KFC chicken ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள் , இவருக்கு நா ஊறியது.
மறுநாள் காலை அஸ்வின் அப்பாவை வலுகட்டாயமாக அழைத்து சென்று யோகா மேடையில் நிறுத்தினான். அப்போது தான் அப்பா நன்றாக அஸ்வினை கவனித்தார் அவன் தேகம் மெலிந்து கட்டுருதியாக இருந்தது. முகம் பல பல வென ஒளிர்ந்தது . கண்களில் கண்ணாடி அணியவே இல்லை. சூரியனை பார்த்து வணங்கிவிட்டு சூரிய நமஸ்க்காரம் கற்றுக்கொடுத்தான். பின்பு சில எளிய யோகா மற்றும் மூச்சி பயிற்ச்சிகளை சொல்லி கொடுத்தான். அப்பா வேண்டா வெறுப்பாக செய்து கொண்டிருந்தார்.
மறுநாளும் இது தொடர்ந்தது, அப்பாவுக்கு சற்று வெறுப்பாக இருந்தது வேறு வழி இல்லாமல் செய்து கொண்டு இருந்தார். யோகா முடித்து வரும்போது ரங்கசாமி அப்பாவை அழைத்தான். அவன் கையில் நல்லெண்ணெய் இருந்தது. அப்பாவை கிணற்றடியில் அமரவைத்து உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து விட்டான். கை கால்களை நீவிவிட்டு தலை மற்றும் கண்களை அழுத்திவிட்டான். வெயிலில் அமர வைத்து பின் கிணற்றில் கைபிடித்து இறக்கி குளிக்க சொன்னான். அப்பாவாள் வெகுநேரம் நீந்த முடியவில்லை இருந்தாலும் ஏதோ ஒரு மகிழ்வு அவருக்குள் வெகுநாள் கழித்து நீந்த துவங்கியது. கிணற்றில் சிறுவர்களை போல படிக்கட்டில் ஏறி குதித்து விளையாடிக்கொண்டு இருந்தார். குளித்து முடித்து ரங்கசாமி செய்து வைத்திருந்த மீன்குழம்பு இட்லியும் சாப்பிட்டு விட்டு கலைத்து போய் தூங்கிவிட்டார்.
மறுநாள் ரங்கசாமி அப்பாவை பேதி மாத்திரை எடுக்க சொன்னான். அவர் சிறுவயதில் பேதி மாத்திரை சாப்பிட்டு இருக்கிறார், அதன் பின் அதை மறந்து போனார். வலுகட்டாயமாக ரங்கசாமி அவரை சாப்பிட வைத்தான். அவருக்கு வயிறு கலக்கியது. மூன்று முறை போனதும் பசித்தது, ரங்கசாமி அவருக்கு உப்பிட்ட கஞ்சி கொடுத்தான். அவர் கலைத்து இருந்தார், ஏன்டா இப்படி என்ன சாவடிகிரிங்க என்றார். ஐந்து ஆறு முறை போன பின் ரங்கசாமி சூடாக ரசம் சாதம் கொடுத்தான், அமிர்தம் போல இருந்தது அவருக்கு, நன்றாக சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டார். மாலையில் எழுந்தபோது அவர் உடல் எடை குறைந்தது போல லேசாக இருந்தது.
அன்று இரவு இதைபற்றி மகளோடும், மனைவியோடும் பேசிக்கொண்டு இருந்தார். அங்கே அவர்கள் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டு இருந்தார்கள். அஸ்வின் உள்ளே வந்தான். அஸ்வின் நீ மறுபடியும் சென்னைக்கு வரதபத்தி அம்மா கேக்குரா என்னடா சொல்றே என்றார். Sorry பா என்னால வர முடியாது. டே உன்ன மாதிரி பசங்க சிட்டியில மால்ஸ், தியேட்டர்ஸ், பீசா, பர்கன்னு எப்படி enjoy பண்றாங்க, நீயும் அப்படிதானே இருந்த , இந்த மூனு வருசமா என்னாச்சு உனக்கு, உன்ன யாரோ நல்லா brain wash பண்ணி இருக்காங்க , நீ fallow பண்ற சாமியார் எல்லாம் பெரிய தாடி வச்சிக்கிட்டு பெரிய ஆசிரமங்களை வச்சிக்கிட்டு கோடி கோடியா சம்பாதிக்கிறாங்க, ஒரு ஆறு நாள் ஏழுநாள் classக்கு 5000 ரூபாய்ளிருந்து 13,000 ரூபாய்வரை வாங்குறாங்க. உன்னோட life west பான்னிகாத, உனக்கு என்ன lifeல கஷ்டம் வந்திடுச்சு யோகா தியானமுன்னு இங்க வந்து சாமியார் மாதிரி வழ்ந்துனு இருக்க ?
ஆமா பா எனக்கு கஷ்டம் வந்தது. மூனு வருசத்துக்கு முன்னாடி நா ஆந்திராவுல இருக்கும் போது ஒரு தீபாவளி நாள் நைட் எனக்கு தோல் பட்டை வலிச்சது , கொஞ்ச நேரத்துல சரியகிடுமுனு நெனச்சா வலி அதிகமாகி எந்திரிக்க முடியல, அப்ப ரங்கசாமிக்கு போன் பண்ணி வர சொன்னேன். அவன்தான் ஒரு ஆட்டோ எடுத்து வந்து பக்கத்துல இருந்த hospitalலுக்கு கூட்டிட்டு போனான். தீபாவளி நாள் அதனால டாக்டர் இல்ல , அப்புறம் டாக்டர் வீட்டுக்கு கூட்டிட்டு போய் அவர்கிட்ட கெஞ்சி வைத்தியம் பாக்க சொன்னான். எனக்கு வலில அம்மான்னு கத்தனுன்னு தோனுச்சி ஆனா முடியல அதற்கு பதிலா ரங்கசாமி கைய அழுத்தி புடிசிகிட்டேன். அந்த டாக்டர் First Aid முடிச்சிட்டு ambulance வரவைத்து GH ல சேர்த்தார். மூன்று நாள் அங்க தான் இருந்தேன். அப்ப தான் எனக்கு Hart attack first stage ன்னு தெரிந்தது.
இத ஏன்டா நீ அப்ப சொல்லல என்று அப்பா வேதனையோடு கேட்டார்.
சொல்றதுனால எதுவும் use இல்ல பா. அந்த வலி நா வாழ்ந்த லைப் ஸ்டைல் எனக்கு கொடுத்தது. இந்த யோகா, தியானம் இந்த சாப்பாடு முறை ,லைப் ஸ்டைல் எல்லாம் சாமியார்களுக்கு இல்ல பா இது தான் நம்ம வாழ்கை முறை, நீயும் சின்ன வயசுல இப்படிதான் இருந்திருப்ப.
சின்ன வயசுலிருந்து என்னோட உடம்ப கெடுக்க எனக்கு லட்ச கணக்குல செலவாகி இருக்கும் அத மறுபடியும் நல்லா மாத்த ஐந்தாயிரம், பத்தாயிரம் குடுத்தா ஒன்னும் தப்பு இல்ல. எனக்கு தேவைன்னு மனசுல தோணுச்சி யோகா கத்துகிட்டேன், உணவு, உடம்பு பத்தி கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன்.
எனக்கு தேவை என்பதன்னால யார் எது சொன்னாலும் என்னால நம்ப முடியாது பா. எனக்கும் பகுத்தறிவு இருக்கு. எனக்கு என்ன வேணுன்னு எனக்கு தெரியும். இன்னக்கி என்னோட உடம்புல எந்த நோயும் இல்ல, விவசாயத்திலும் tension இருக்கு, ஆனா அத எப்படி கையாளனும் என்று எனக்கு தெரியும். நீ இங்கு இருக்கும் இன்னும் கொஞ்ச நாள் வரைக்கும் நா சொல்றத கேளு பா.
அப்பா அன்று இரவு வெகு நேரம் தூங்கவில்லை. மறுநாள் காலை குளித்துவிட்டு யோகா மேடையில் அஸ்வினுக்காக காத்துக்கொண்டு இருந்தார்.
நன்றி : HEALER BASKER ( http://anatomictherapy.org/)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக