அவள் மண்வெட்டியை பிடித்த சில நிமிடத்தில் கைகால்கள் நடுங்கத்துவங்கி விட்டன. முதுகு நனைய தளர்ந்து அமரும் தருவாயில் " ருக்கு இதா அந்த மரத்தாண்ட போய் ஒக்காரு போ " என்றாள் மணி. கணவன் இறந்தபின் நூறு நாள் வேலைக்கு வந்துவிட்டாள் ருக்கு. ஒரே மகன் வேலு பத்தாம் வகுப்பில் தவறிவிட்டு , வெல்டிங்க் கடைக்கு வேலைக்கு சென்றுவிட்டான்.
ருக்குவும், மணியும் பின் மத்தியத்தில் வீடு நோக்கி நடந்தனர். மணி மெதுவாக சரோஜாவீட்டுக்கு போகலாமா என்று கேட்டாள். வெம்மையில் ஊறி இறுகிய கரும்பாறை போல் இருந்தாள் ருக்கு.
சரோஜா வீட்டில் அவன் புருஷன் மட்டும் இருந்தான். காலில் விழும் நிலையில் அவனை கெஞ்சிக்கொண்டு இருந்தாள் மணி. " சனியனுங்க சடாவுல அடிச்சாலும் திரும்பிவந்து நிக்கும்க " , கடன் இல்லன்னு சொன்ன கேக்காதுங்க ". கொஞ்ச நேரத்தில் இரண்டு பாட்டிலோடு நமட்டு சிரிப்போடு வெளியில் வந்தாள் மணி.
ருக்குவின் தலை சும்மாடு துணியை வாங்கி அவசரமாக அதை சுற்றி அவள் கைகளில் கொடுத்தாள்.
இரவு ருக்குவின் உடலில் அங்கங்கு நீர் போல உறி எழுந்த வலி கைகோர்த்து ஒற்றை வலியாக மாறியது.
வலி ஒலியாக மாறி அவள் உதடுகளில் முனங்கலாக வழிந்தது.
உடல் முழுவதும் நடுங்கத்துவங்கியது. மணியின் முகம் அவள் நினைவில் எழுந்தது. மூலையில் சுருட்டி வைத்திருந்த சும்மாட்டு துணியை பார்த்தாள்.
வேலு ஊருக்கு வந்தான். நடுத்தெருவை அடைந்ததும் சரோஜா வீட்டு முன்னால் உடைகள் கலைந்திருக்க, புழுதியேறிய தலையுடன் அம்மா கத்திக்கொண்டு இருந்தாள். அவன் ஓட்டமும் நடையுமாக அவளை நெருகும்போது சரோஜாவின் கணவன் வீட்டுனுளிருந்து அவளை உதைக்க காளைதூக்கிக்கொண்டு ஓடி வந்தான். இவனை பார்த்ததும் " தே..........வ்வ்டியா" சனியன் தெனாமும் காலையில வந்திடுது கடன் கேக்க , என்றபடி உள்ளே சென்றான். இவனை கண்டதும் அங்கு எதுவும் நடக்காதது போல " எப்ப குட்டி வந்தே " என்று சிரித்த முகத்தோடு கேட்டாள் ருக்கு. அவள் கண்கள் கலங்கி கைகால்கள் நடுங்கிக்கொண்டு இருந்தன.
இரவு இருவருமே சாப்பிடவில்லை. இவள் ஒரு மூலையில் அவன் ஒரு மூலையில் படுத்துக்கொண்டு இருந்தனர்.
இவனுக்குள் கோவம் ஏறி ஏறி வந்தது. அம்மாவை அவன் திட்டிய போது நான் ஏன் சும்மாவே இருந்தேன் ? திரும்பத்திரும்ப இதே கேள்வி மனதில் எழுந்துக்கொண்டே இருந்தது. அம்மாவின் மஞ்சள் பூசிய முகமும் நெற்றியிலிட்ட பொட்டும் சிரித்த முகமும் அவன் கண்முன்னே எழும் தோறும் கோவம் உச்சிக்கு ஏறியது. இப்போதே அவனை வெட்டி சாய்க்க வேண்டும் போலிருந்தது. அம்மாவை பார்த்தான், அவள் கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தது. கண்கள் இருண்டு நிலைத்து இருந்தது. அவள் முனங்கள் சத்தம் ஏறிக்கொண்டே வந்தது. செய்வதறியாமல் படுத்திருந்தான்.
பின் மெதுவாக எழுந்து தான் கொண்டுவந்த பையை திறந்து ஒரு பாட்டிலை எடுத்து அவள் முன் வைத்துவிட்டு வெளியில் திண்ணையில் படுத்துக்கொண்டான்.
ருக்கு ருக்கு என்று அழைப்பதை கேட்டு மெதுவாக விழித்தெழுந்தான் . " எப்படா குட்டி வந்த" அம்மா வேலைக்கு வரளா கேளு என்று மணி கூறியதும், விட்டுக்குள் நுழைந்தான் வேலு.
பாட்டில் வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. அம்மாவின் கண்கள் அதன் மீது நிலைகுத்தி இருந்தது. இரவெல்லாம் அழுத கண்ணீரின் தடம் அவள் மூக்குவரை நீண்டு இருந்தது.
அனிச்சையாக அவள் நெற்றியை தொட்ட வேலுவின் கைகள் குளிர்ச்சியை உணர்ந்து நடுங்கத்துவங்கியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக