"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

திங்கள், மே 19, 2014

புதிய உலகை

புதிய உலகில்  புதிய உலகில்  நானும் வாழ்கிறேன்
என்னோடு நீ

விழியன் துளியில் நினைவை கரைத்து நீந்த போகிறேன்
என்னோடு நீ

இரவின் மடியில் பூத்தத்தை உணர்வின் அதிர்வில் கோர்க்கிறேன்
மீண்டும் நான் மீள போகிறேன் மீண்டும் நான் வாழ போகிறேன்

புதிய உலகில்  புதிய உலகில்  நானும் வாழ்கிறேன்
என்னோடு நீ

மார்பில் துன்கினாய் கணங்களை வரங்கலாக்கினாய்
தோளில்லேரினாய் எனை இன்னும் உயரமக்கினாய்

உன் மொழி போல மண்ணில் இங்கு அழகு இல்லை என்பேன்
உன் மொழி பேசி நானும்  எங்கும் அர்த்தங்கள் தேடிச்சென்றேன்

வேறோர் உலகில் வேறோர் வானில் நானும் வாழ்கிறேன்

புதிய உலகில்  புதிய உலகில்  நானும் வாழ்கிறேன்
என்னோடு நீ

விழியன் துளியில் நினைவை கரைத்து நீந்த போகிறேன்
என்னோடு நீ

யாரும் தீண்டிடா இடங்களில் மனதை தீண்டினாய்
யாரும் பார்த்திடா சிரிப்பினை முகத்தில் தீட்டினாய்

உன் விழி போல மண்ணில் இங்கு அழகு இல்லை என்பேன் - அதில்
கண்ணீர் துளிகள் கோர்த்து நின்றாள் நானும் அழுது நின்றேன்

உன் பாதம் ஓராம் முத்தங்கள் கோர்க்க உதடு கேட்குமே

புதிய உலகில்  புதிய உலகில்  நானும் வாழ்கிறேன்
என்னோடு நீ

வியாழன், மே 15, 2014

மகனும் மகிழ்வும்


கரைந்து ஒழுகிய மீதி சாக்லேட்

உருகி வழியும் பாதி ஐஸ் கிரீம்

பக்கவாட்டில் பாதி கொறித்த பழங்கள்

இரைத்து சிதறிய தயிர் சாதம்

அப்பா "ம் ம் " என்று அவன் கொடுப்பவைஎல்லாம்

நான் தின்று தீர்க்கிறேன்.....

ஊஞ்சலில் அவனை மடியில் அமர்த்திக்கொண்டு

ஆடும் வேளையில் ஒரு உச்சியில் நான் அவனாகவும்

மறு உச்சியில் நான் நானாகவும் உணர்கிறேன்.

அவன் கை நீட்டிய திசையில் வெகு நாள் கழித்து

பட்டம் பூச்சியை பார்த்தேன்.

நான் நேரில் பட்டம் பூச்சியை ரசித்தது இல்லை

கவிதைகளில் மட்டும் அதை  ரசித்தது இருக்கிறேன்.

பட்டம் பூச்சி பறந்து போகாத காதல் கவிதைகள் மிகவும் குறைவு.

சமிபத்தில் நான் படித்தது...,

"ஒரு பெரும் காட்டின் ஆன்மா பூக்களில் தேனாக உறைகிறது.
அதை பட்டம் பூச்சி மட்டுமே ருசிக்க முடியும்
காட்டை தின்று மெல்லும் யானையாள் அதை உணர முடியாது"

"பட்டம் பூச்சிக்கு பின்னால் சென்றாள் பூக்களை அடையலாம் "

ஆனால் முதல் முறையாக ஒரு நிமிடம் ஒரு பட்டம் பூச்சியை
பார்த்துக்கொண்டே இருந்தேன்.

மகனும் பார்த்துக்கொண்டே இருந்தான்.

கொத்தான மலரில் அது ஒவ்வொரு பூவாக அமரும் தோறும்
அவன் முகத்தில் மென்சிரிப்பு மலர்ந்து தளர்ந்தது.

அடர் சிவப்பு சிறகுகள். அதில் கரும் புள்ளிகள் கொஞ்சம், வெண்ணிற தெளிப்புகள் கொஞ்சம் , நாம் முச்சு விடுவது போல அதன் சிறகுகள் அசைந்து கொண்டே இருந்தது .

அது பறந்து சென்ற பின்னும் அதன் நிழல் மனதில் பறந்து கொண்டே இருக்கிறது.

அவனோடு இருக்கும் தருங்களில்  என்னுள் ஒவ்வொரு கட்டுக்களும் அவிழ்த்து நான் அவனாக மாறுகிறேன்.

வாழ்வில் நான் கவனிக்கத்தவறிய எத்தனையோ உன்னத தருணங்களை
அவன் எளிதில் மீட்டெடுத்து மறுபடியும் நிகழ்த்துகிறான்.

இந்த மகிழ்வுக்கு முன் அவனுக்கு நான் செய்யும் கடமைகள் கூட எளியவையே என்று தோன்றுகிறது.

என்னக்குள் மழலையை விதைத்துகொண்டே இருக்கிறான். அது வளர்ந்து நான் முதிரும் தருவாயில் குழந்தையாக மாறி இருப்பேன் என்று நினைக்கிறேன்.

அவன் வாழ்க ...

....கிராமத்தான்










திங்கள், மே 12, 2014

மகனின் மொழி


மகனின் மொழி

தத்தி விழுந்து, எழுந்து நடக்க துவங்கியது போலவே அவன் மொழியும் மெல்ல உருவம் கொள்கிறது. காட்சிகளை உள்வாங்கி உணர துவங்கியதுமே அதை ஒலியாக மாற்றும் முயற்சி அவனுக்குள் துவங்கி விட்டது.

முதலில் 'அக்கா ' என்று தான் அவன் மொழியை துவங்கினான். பின் அம்மா , அப்பா, தாத்தா, ஆயா எல்லாம் வந்தது.

உறவுகள் இல்லாமல் வேறு வார்த்தை  ' இல்ல ' என்பது. ஏதாவது கேட்டாள் ' இல்ல ' என்பான்.

பின்பு  'ம் ம்' என்று துவங்கினான். ஏதாவது வேண்டும் என்றாள் அப்பா 'ம் ம் ' என்று கை காட்டுவான். வெளியே கூட்டி போக வேண்டும் என்றாள் என் செருப்பை காண்பித்து அப்பா 'ம் ம் ' என்பான். தண்ணிர் வேண்டும் என்றாலும் அதே 'ம் ம்' தான். அந்த 'ம் ம் ' ல்  அதிகாரம், தவிப்பு எல்லாம் வெளிபடும்.

பசிக்கும் போது ' அம்மா பூ ' என்று சைகையோடு சொல்லுவான். அதை பார்க்கும் போது எனக்கு பாவமாக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உடல் மொழியையும் கற்கிறான் என்று தோன்றியது.

இதுவரை சரி.

இப்பொழுது  அவனுக்கான பிரத்தியோக மொழியில் பேச துவங்கி இருக்கிறான்.

ஒவ்வொன்றும் நமக்கு புரியாத கடவுள் மொழி.

ஒரு நாள் 'ஊட்டு ' என்று துவங்கி 'ஊட்டா ' 'ஊட்டா ' என்று சொல்லிக்கொண்டே இருந்தான். ஒரு வாரம் முழுக்க ....

புதியதாக வங்கி வந்த Tablet ஐ 'பிப்பி' என்று அழைக்கிறான். 'பிப்பி ' என்று ராகமாக அழைத்து அது இப்போது "பிங்யா "  என்று மாறி இருக்கிறது.

சிவகார்த்திகேயன் அவருக்கு பிடித்த ஸ்டார் ஆகிவிட்டார். " உதா கலரு " பாடல் மற்றும் "ஒத்த கட " பாடலையும் ஒரு நாள் முழுவதும் சலிக்காமல் அவனால் மட்டும் எப்படி பார்க்க முடிகிறது என்று தெரியவில்லை.

"அய்யையோ  ஆனந்தமே " பாடலில் "அய்யையோ " மட்டும் சொல்ல வருகிறது.

ஒரு நாள் காலையில் தூங்கி எழுந்து அப்பா " நா பக்கினா " என்றான். நா ஓ நீ பக்கினா வா ? என்று கேட்டேன். அப்பா "நா பக்கினா " என்றான். அப்பா நீ ஆள உட்ரா சாமி என்று நான் தெறித்து ஓட அவன் அம்மாவிடம் சென்று அம்மா நா பக்கினா என்று ஆரம்பித்தான். அவங்க அம்மா உஷாராகி சரி என்று நழுவிவிட்டார்கள். ஒரு நாள் இல்ல இரண்டு நாள் இல்ல மூன்று நாள் இதையே சொல்லி கொண்டு இருந்தான். கடைசியில் நான்தான் பக்கினா என்று மாறி நா பக்கினா இல்லை என்று முடிந்தது. இப்பொழுது அதை சுருக்கி   " நா பக்கி " என்று எப்போதாவது கூறுகிறான்.

இப்போது " அது " "அது " என்று துவங்கி இருக்கிறான். மனம் பலவீனமானவர்கள் வீட்டு பக்கம் வரவேண்டாம்.

குழந்தை அதற்க்கான தனி மொழியோடு தான் பிறக்கிறது. நாம் தான் நமக்கு தெரிந்த மொழியை அதனுள் திணிக்கிறோம் என்று நண்பர் ஆராத்து எழுதிருந்தார்.

அது எவ்வளவு உண்மை.

கோடான கோடி குழந்தைகளின் கோடான கோடி மொழி , செம்மொழி.

உலகில் மிகவும் எளிமையான மொழி தாய் மொழி, இரவில் அவங்க அம்மா அ முதல் ஔ வரை சொல்லிக்கொடுக்கிறார். அவனும் அதை அழகாக சொல்கிறான்.

அவனோடு விளையாடும் குழந்தைகள் முழுமையாக பேசுகிறார்கள். இவனால் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சிரிக்கிறான். அதுவே ஒரு ஏக்கமாக அவனுள் ஊருவதை அவன் அம்மா உணர்த்து சொன்னார். அந்த ஏக்கம் அவனுக்குள் உந்துதலாக மாறி இப்போது அவன் பேசுவதிலே முழு கவனமாக இருக்கிறான்.

அவன் வாழ்க ..


ஞாயிறு, மே 11, 2014

கடவுள்

எனக்கு நன்றி கூரிக்கொண்டு இருக்காதே
எனக்கு நிறய வேலைகள் இருக்கின்றது

ஒன்று என்னோடு வேலை செய்
இல்லை எனக்காக வேலை செய்

                                                        - கிராமத்தான் 

செவ்வாய், மே 06, 2014

காடு





"காடு " நான் படித்த முதல் இலக்கிய நாவல். ஜெயமோகன் எழுதியது . படிப்பது என்ன தந்துவிடும் என்ற எண்ணம் வெகுநாள் எனக்குள் இருந்தது. அப்படி படிப்பதாக இருந்தாள் வேலை சம்மந்தமாக எதாவது படித்தாள் நமக்கு உதவும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் வேலையில், அது செய்யும் போது கிடைக்கும் நேரடி அனுபவம் மிகசிறந்த அறிவு என்று உணர்ந்த பொழுது சந்தேகம் வரும்போது மட்டும் படிப்பது என்று முடிவானது.

நேரம் கிடைக்கும் போது விகடன் குமுதம் போன்ற வணிக இதழ்களை படித்துக்கொண்டு இருந்தேன். அதை தொடர்ந்து கல்கி அறிமுகமாகி பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் என்று வணிக நாவல்களை படிக்க துவங்கி இலக்கிய நாவல் படிக்கலாம் என்ற ஆவல் எழுந்தது. புரியாது என்று நிறைய பேர் சொன்னார்கள், ஒரு முயற்சிக்காக " காடு " நாவலை வாசிக்க துவங்கினேன்.

தமிழக கேரள எல்லை காட்டில், முப்பது நாப்பது வருடங்களுக்கு முன் அரசு contract வேலைகளை செய்யும்  ஒரு சிறு குழுவின் கதை.

ஒரு பதின் பருவ இளஞ்சன் கிரி வேலை பழக அங்கு வருகிறான். contract எடுப்பவர் அவன் மாமா. மேற்பார்வைக்கும் , வேலை பழகவும் அவனை அங்கு அனுப்புகிறார்.

காடு அவனுக்கு புதியது. நாவல் படிக்கும் நாமும் அவன் கண்கொண்டே மெல்ல மெல்ல காட்டுக்குள் நுழைகிறோம். காட்டை அறியும் பொருட்டு தனிமையில் அவன் காட்டுக்குள் நுழையும் போது அவனுக்குள் எழும் பயமும், வியப்பும், வழி தவறி அலையும் போது எழும் பதட்டமும் நாவல் படிக்கும் நம் மனதிலும் குவிந்துக்கொண்டே இருக்கிறது.

அவன் மனது அதன் முன் பெரும் வெளியாக விரிந்து படர்ந்து இருக்கும் காட்டின் உள்நிகழ்வுகளையும், உயிரோட்டத்தையும், அதன் ஆன்மாவையும் அறிந்துகொள்ள துடிக்கும் கனங்களில் பரவசத்தின் உச்சத்தை அடைகின்றது. அந்த பரவசத்தை துளி சிதறாமல் வார்த்தைகளின் வழியே அப்படியே நம் மனதிற்கு கடத்துகிறது நாவல்.

அந்த தருணத்தில் ஒரு மலயத்தியை அவன் பார்க்கிறான். அவள் அந்த காட்டின் ஆன்மாவின் ஒரு துளி அல்லது அவள் ஆன்மாவின் ஒரு துளி இந்த காடு என அவன் உணரும் தருவாயில் காதல் அவனுள் ஊறி பெருகுகிறது. அவன் கண் முழுவதும் பசுமையாக, மனமுழுவதும் பூக்களாக, அவனே ஒரு மரமாக, காட்டினுள் காடாக.....மாறி மகிழ்கிறான். அதன் பின் நாவல் காட்டினுள் காதலையும், காதலினூடெ காட்டையும் வர்ணித்துக்கொண்டே நகர்கிறது.

குட்டப்பன் அவனோடு வேலை செய்யும் மேஸ்த்திரி. எனக்கு பிடித்த காதப்பாத்திரம். காட்டின் நிகழ்வுகளையும் , சில நேரங்களில் அங்கு வாழும் மனிதர்களின் வழ்வையும்  புரிய வைக்கிறான்.  இது போன்ற எண்ணற்ற எளிய, வலிய மனிதர்கள் மூலம் வாழ்வை பற்றிய புரிதலை நம் மனதில் அடிக்கி வைத்துக்கொண்டே வருகிறது  நாவல்.

மனிதர்களின் மேன்மையின் உன்னதத்தையும், கிழ்மையின் சுவாரசியத்தையும் சொல்லிக்கொண்டே நகர்கிறது.

ஒருகட்டத்தில் காட்டை மழை சூழ்கிறது. மேக மிருகம் தன் லட்சவிழிகளின் ஈரத்தை சொட்டுகிறது. காட்டுக்கு பல காட்டாறு கால்கள் முளைக்கின்றன. கால்கள் ஓடுகிறது , காடு  அங்கேயே இருக்கிறது. நீர் வழியே புதுபித்துக்கொள்கிறது. பெரும் தொற்று நோய் வந்து காட்டில் வாழும் சிலர்  மடிகிறார்கள். சிலர் இடம் மாறி போகிறார்கள். புதிய மனிதர்கள் வருகிறார்கள்.

நாவல் ஒரு சுவாரசியமான முடிவை நோக்கி நகரவில்லை. அது முடிவில்லா அனுபவங்களை அடுக்கிக்கொண்டே போகிறது. நாவல் முடியவே இல்லை, அதன் பக்கங்கள் மட்டும் முடிகின்றது.

காட்டின் வழியே செல்லும் சாலை ஒரு பெரும் வடகயிறு. அதை கொண்டு நகரம் காட்டை தன்னை நோக்கி இழுக்கின்றது. அல்லது நகரம் காட்டை நோக்கி நகர்கிறது. இந்த நகர்வு காட்டின் ஆன்மாவை அழித்து அதை ஒரு காட்சி பொருளாக மாற்றுகின்றது.

இனி ஒரு மரம் வெட்டினாலும் இந்த உலகத்தின் சமநிலை குலைந்து விடும் என்ற நிலை என்றாவது ஒரு நாள் வரும். அன்று மனிதன் அந்த மரத்தை வெட்டத்துவங்குவான் , மரம் புன்னகையோடு சரிந்து விழும் , உலகம் அதிர்ந்து குலுங்கும், பெரும் மழை துவங்கும்.

வணிக நாவல் படித்த போது அதில் இருந்த திருப்பங்கள், சாகாசங்கள் சுவாரசிய நிகழுவுகள் என்னை பரவசப்படுத்தியது. உணர்வெழுச்சி எழுந்து படி படி என்னாச்சி  என்னாச்சி அந்த காதாநயகனுக்கு என்று உசுப்பியது. ஆனால் இந்த நாவல் எளிய மனிதர்களின் மனங்களின் வழியே நடக்கிறது. சில நேரங்களில் புல்வெளியில் பனித்துளிகள்  உரச, சில நேரங்களில் கால்களை பிடித்து சண்டையிடும் சகதியின்  வழியாக

ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி .

                                                                                                                           - கிராமத்தான்