"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "

ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

நீலம் அறக்கட்டளை -3 பள்ளிகுப்பம் தொடக்கப்பள்ளி


சமிபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். நம் எண்ணங்களின் வலிமை பற்றிய கருத்துக்கள் அதில் இருந்தது. நமக்கு என்ன தேவையோ அதை பற்றி நாம் ஆழமாக சிந்திக்கும்போது அந்த எண்ணம்  நம்மையும் அந்த கருத்தை நோக்கி இயக்கம். மேலும் அதே கருத்தையுடைய மற்றவர்களையும் உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும்.  

நானும் ஆசிரியர்களான அண்ணனும், அண்ணியும் அறக்கட்டளை வழியாக பள்ளி மாணவர்களுக்கு உதவுவதை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது பள்ளிகுப்பம் தொடக்கப்பள்ளி பற்றியும் அதன் தலைமை ஆசிரியரை பற்றியும் கூறினார்கள். நாங்கள் பேசிமுடித்ததும் அவரை சந்திக்க சென்றேன்.

பள்ளிகுப்பம் என் கிராமத்துக்கு அருகில் உள்ள கிராமம். பள்ளிகுப்பம் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சேகர். இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு படிப்பதற்க்கு தேவையானா பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் , ஜாமன்ரி பாக்ஸ், செருப்பு , புத்தக பை போன்ற அனைத்து பொருட்களையும் கொடுக்கிறது.  ஆனால் கல்வி ஒரு ஆசிரியரின் தனிப்பட்ட விருப்பத்தினாலும், பிள்ளைகளின் மீதானா தணியாத அக்கறையாலும் மட்டுமே அவர்களுக்கு அளிக்கப்படுக்கின்றது. அப்படியான ஒருவர் திரு சேகர். 

ஸ்ரீ பெரும்புதூர் ஹுண்டாய் நிறுவன நபர்களிடம் பேசி ஒரு வருடத்துக்கான சிறுவர் ஆங்கில நாழிதள் வாங்கி ஆங்கில அகராதி வைத்து மாணவர்களுக்கு  பயிற்சி அளித்திருக்கிறார். சாலை அமைக்கும் L & T நிறுவனத்திடம் பேசி மாணவர்களுக்கு படிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்திருக்கிறார்.  பழைய கணினிகளை பெறுவதற்கு  இன்போசிஸ் நிறுவனத்திற்கு கடிதங்களை அனுப்பி இருக்கிறார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிள்ளைகளின் தனித்திறமை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்சிகளை அந்த பள்ளி ஆசிரியைகள் நடத்துகிறார்கள். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு  திருக்குறளை தனிகவனமெடுத்து சொல்லிக்கொடுக்கிறார்கள். அதே போல ஒரு வருடத்தில் அத்தனை கலாச்சார பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள். நான் சென்ற போது ஓணம் பண்டிகைக்காக மாணவர்களும் ஆசிரியைகளும்  இணைந்து  பூக்கள் மற்றும் தானியங்களை கொண்டு உருவாக்கிய ரங்கோலி கோலத்தின் புகைப்படத்தை காட்டினார்.

அவரிடம் பேசிக்கொண்டு இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு பக்கபலமாக அவருடன் பணிப்புரியும் ஆசிரியைகள் இருக்கிறார்கள். அவருக்கு நீண்டநாளாக  ஒரு வகுப்பறையை Smart Class ஆகா மாறவேண்டும் என்ற ஆசை இருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக உள்ளூர்  MLA விலிருந்து பலபேரிடம் பேசி இருக்கிறார். 

ஒரு Smart Classஐ உருவாக்க கணினி , ப்ரொஜெக்டர், ஸ்க்ரீன் , ஆடியோ சிஸ்டம், அதை பொருத்துவதர்க்கான பொருட்கள் , பேன், லைட் மற்றும் எலெக்ட்ரிக் சாமான்கள் , அதை பொருத்துவதற்கு கூலி   என்று பெரும் செலவு பிடிக்கும்.

அரசு அளித்த மடி கணினியும், ப்ரோஜெக்டர்ரும் மட்டும் அவரிடம் இருந்தது. அனைத்தும் குறைந்த செலவில் செய்தால் கூட  30,000 ரூபாய் செலவாகும்.  நீலம் அறக்கட்டளை முடிந்தவரை உதவுவதாக கூரினோம்.  

அவர் உடனயாக வேலையை துவங்கினார். நான் சவுதி திரும்ப வேண்டி இருந்தது. பணத்தை நாங்கள் அளித்துவிடுகிறோம். நீங்கள் செய்து கொள்ளுங்கள் என்றேன். இல்லை வகுப்பு துவங்கும் போது நீங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றார். அதே வாரத்தில் அவர் புது வீட்டுக்கு கூடி போவதாக இருந்தது. அந்த வேலையை விட்டு விட்டு இந்த வேளையில் இரவு ஒரு மணி இரண்டு மணி என்று வேலை செய்து குறித்த நேரத்தில் பணி முடிந்து விட்டது. அதற்காக இரண்டு எலக்ட்ரிசியன்கள் மற்றும் அந்த ஊர்க்காரர் ஒருவரும் உழைத்திருக்கிறார்கள். 

மொத்தம் 27,000 ரூபாய் செலவானது. அதில் 15,000  ரூபாய் நீலம் அறக்கட்டளை கொடுத்தது. பள்ளியின் சார்பாகவும் மேலும் சிலரும் உதவி இருக்கிறார்கள். அனைவரின் கூட்டு முயற்சியாக அந்த பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் உருவாக்கப்பட்டது.

அதன் துவக்க விழா மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நானும் மனைவியும் அண்ணனும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டோம். சுற்றி உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர் . 

 குழந்தைகள் நடனம், பரதநாட்டியம் , பாடல் என்று அசத்தினர். நடனம் ஆடியா குழந்தைகள் அவர்களிடம் இருந்த அதிகபட்ச நல்ல துணியை உடுத்தி இருந்தார்கள் ஆனால் அதுவும் பழைய துணியாக இருந்தது மனதை நெகுழ்த்தியது. சில மாணவர்கள் ஐம்பது திருக்குறளை சொல்லி அசத்தினர்.

இறுதியில் அவர்கள் நீலம் அறக்கட்டளையையும் என் நண்பர்களையும் வாழ்த்தி பாடியது வாழ்வில் இதுவரை உணராத புதுவித மகிழ்ச்சியை உணரச்செய்தது. 

திரு. சேகர் செவ்வாய் கிரகத்தில் வெண்கலம் இறங்கும் வீடியோ கட்சியை திரையில் ஓடவிட்டார். அந்த வகுப்பு இனிதே துவங்கியது.

மதியம் சிறப்பான விருந்து அளித்தனர். அதை ஆசிரியைகள் தங்கள் வீட்டிலேயே சமைத்து கொண்டுவந்திருந்தனர். 

அன்று மனதும், வைரும் நிறைந்திருந்தது. அங்கிருந்து கிளம்பும் போது அனைத்து குழந்தைகளும் எங்களை சூழ்ந்து கொண்டனர். நீங்க நல்ல டான்ஸ் அடுனிங்க, நல்ல பேசுனிங்க்க என்று சொல்ல சொல்ல அவர்கள் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. நீங்க அடுத்த வருஷமும் வாங்க என்றனர்.

நீலம் அறக்கட்டளையின் உதவியை வெளியில் யாருக்கும் சொல்லவேண்டாம் என தலைமை ஆசிரியரிடம் கேட்டுக்கொள்ளலாம் என்று எண்ணினேன். ஆனால் அவர் பேசும்போது ஒரு விஷயத்தை சொன்னார் . இந்த நிகழ்வை கேள்வி பட்ட மாலத்தீவில்  வேலை செய்யும் அவர் நண்பர்கள் அவர்களின் கிராமப்பள்ளியை தத்தெடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். 

இந்த நிகழ்வை அவர் ஆறு செய்தித்தாள்களுக்கும்  நான்கு வார இதழ்களுக்கும் அறிவித்திருக்கிறார் . அதில் இந்து மற்றும் தினமணி பிரசிரித்துள்ளது. 

இன்று எங்கள் கிராமத்துக்கு அனைத்து ஆங்கில பள்ளியில் இருந்துமே பேருந்துகள் மற்றும் வேன்கள் வந்து பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்கின்றன. ஒரு கிராமம் குறைந்தது மூன்றிலிருந்து நான்கு லட்சம் வருடத்துக்கு அருகில் உள்ள ஆங்கில பள்ளிகளுக்கு நன்கொடை மற்றும் கட்டணமாக செலுத்துகின்றன. அதில் கொஞ்சம் செலவழித்து உள்ளூர் அரசு பள்ளிகளை அவர்கள் மேம்படுத்தல்லாம். அதனால் கால விரயம் பணவிரையம், கல்வி விரையம் அனைத்தையும் தடுக்க முடியும். 

நீலம் அறக்கட்டளை துவங்கும் போது கிராம புற பள்ளி மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று பட்டும் எண்ணம் இருந்தது. ஆனால் எப்படி எந்த விதத்தில் என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் இன்று ஒரு தெளிவு இருக்கிறது. அடுத்து இரண்டு பள்ளிகளுக்கும் நுலகம் அமைக்கும் திட்டம் இருக்கிறது. என்னை சுற்றி நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள்.   

                                                                                                        - கிராமத்தான்






























வியாழன், செப்டம்பர் 24, 2015

நீலம் அறக்கட்டளை -2 அணங்காநல்லூர் ஊரட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி


நீலம் அறக்கட்டளை வழியாக கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவவேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம்.

கிராமத்தில் படித்து நகரத்துக்கு மேற்ப்படிப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு முக்கியமாக மூன்று பிரச்சனைகள் இருக்கின்றன .

ஒன்று ஆங்கிலம் , இரண்டு நகரத்தில் நிலவும் பொது கலாச்சாரம்  மூன்று தொழில் நுட்பம்.

ஆங்கிலம் மிக முக்கிய பிரச்சனை , அது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் நகரத்தில் நிலவும் கலாச்சாரத்தோடு தன்னை பொருத்திக்கொள்வது கிராமத்து மாணவர்களுக்கு பெரும்பாடு. அன்றாட பழக்கவழக்கங்கள் , பேசும் முறை , எண்ணங்கள் அனைத்திலும் பின் தங்கி உள்ளனர். அதேபோல தொழில் நுட்பம். கிராமத்திலிருந்து நகரத்துக்கு படிக்கச்செல்லும் மாணவர்களுக்கு ஒரு நவீன செல்பேசியில் உள்ள அத்தனை செயலி பற்றியும் தெரியும். ஆன்லைனில் பொருட்களை கூட வாங்குகிறார்கள். ஆனால் அதே கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு அதிகபட்சம் டிவி தவிர வேறெதுவும் அறிய வாய்ப்பு இல்லை.

இந்த மூன்று கருத்துக்களை மனதில் கொண்டு நான் படித்த அணங்காநல்லூர் ஊரட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
க்கு சென்றேன். அங்கு  தலைமை ஆசிரியராக இருப்பவர் திரு.பீட்டர். அவரிடம் என் எண்ணங்களை கூறினேன். அவர் பெருமகிழ்ச்சி அடைந்து என்னையும் எங்கள் நோக்கத்தையும் வரவேற்றார். அவரிடம் நீண்ட நேரம் உரையாடினேன். அரசு அளிக்கும் சலுகைகளையும் அதன் போதாமைகளையும் பள்ளியின் தேவைகளைப்பற்றியும் விவரித்தார். நீங்கள் ஒரு பள்ளி அல்லது உங்கள் வசதிக்கேற்ப இரண்டு பள்ளிகளை தேர்வு செய்து அதன் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுங்கள் என்று அறியுரை கூறினார்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித்திட்டம் இன்று நடைமுறையில் உள்ளது. ஆனால் அந்த பள்ளியில் முன்னமே உள்ள ஆசிரியர்களை கொண்டு ஆங்கில வழி கல்வியை செயல் படுத்தவேண்டும். அந்த அளவுக்கு இந்த பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை, அதனால் நான் பெரும்முயற்சி எடுத்தும் எங்களால் ஆங்கில வகுப்புக்களை தொடங்க முடியவில்லை என்று தலைமை ஆசிரியர் கூறினார். நான் அதற்காக உதவுவதாக வாக்களித்தேன்.

அடுத்தவாரம் ஒரு தகுதியான ஆங்கில ஆசிரியையை நேர்முகத்தேர்வு செய்து பணிக்கு அமர்த்தினோம். மூன்றாம் வகுப்புபை ஆங்கில வழி முலம் பாடம் எடுப்பது என்று முடிவானது. அதற்காக ஒரு பிரத்தியோக வகுப்பறையை தலைமை ஆசிரியர் ஏற்பாடு செய்திருந்தார். செப்டம்பர் முதல் தேதியில் இருந்து ஆங்கில வகுப்பு செவ்வனே நடக்கின்றது.

நானும் என் மனைவியும்  ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களோடு ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம் . நாங்கள் எதிர்பார்த்ததைவிட மாணவர்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர். அப்துல் கலாமை பிடிக்குமா என்று கேட்டேன். அனைவரும் கை உயர்த்தினர். ஏன் பிடிக்கும் என்று ஒவ்வொருவராக சொல்லச்சொன்னேன். அவர் எளிமையானவர் என்று பதில் சொன்ன பையனிடம் எளிமை என்றால் என்ன என்று கேட்டேன். அவன் சிரித்தான். இன்னொரு பையன் அவர் குறைந்த எடையில் ஊனமுற்ற குழந்தைக்கு செயற்கை கால் செய்து கொடுத்தார் என்றான். என்னொரு பெண் அவர் ஜனாதிபதியாக இருந்தார் என்றாள். அவர்கள் சொல்லும் பதில்களில் இருந்தே கேள்வி கேட்டு அவர்களை மேலும் சிந்திக்க வைக்க முயன்றோம். பின் நுடுல்ஸ்ன் தீமைகள் குளிர் பானங்களின் தீமைகள் கேள்விறகு மற்றும் கடலை மிட்டாய்யின் நன்மைகள் என ஒருமணிநேரம் சுவாரசியமாக சென்றது.

இங்கலாந்து எழுத்தாளர் திரு ராய் மக்ஸ்சம் பெரும் ஆராய்ச்சிக்கு பின் எழுதிய நூலின் பெயர் The great Hedge of India . இந்த நூல் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆகிலேயர்கள் உப்பின் மீது வரி வசூலிக்க ஏற்படித்திய மாபெரும் உப்பு வேலி பற்றியது. அந்த வேலி மதிய பிரதேசத்தில்  துவங்கி ஒரிசா, உத்ரபிரதேஷ் ,பீகார், காஷ்மீர் வரை நீண்டது. இந்தியாவில் மாபெரும் பஞ்சங்கள் உருவாகி பல லட்சம் மக்கள் இறப்பதற்கு இந்த வேலி காரணமாக இருந்திருக்கிறது. இந்த புத்தகம் தமிழில் திரு. சிறில் அலெக்ஸ் மொழிபெயர்த்திருக்கிறார்.

தலைமை ஆசிரியர் மடிக்கணினி மற்றும் ப்ரொஜெக்டர் ஏற்பாடு செய்திருந்தார் அதை பயன் படுத்தி வரைபடங்களை கொண்டு இந்த உப்பு வேலி பற்றி அவர்களுக்கு விளக்கினேன். முதல் பத்து நிமிடங்கள் மாணவர்கள் நெளிய துவங்கினர். அதன் பின் நான் சற்று இறங்கி அவர்கள் மொழியில் விளக்கத்துவங்கியதும் அடுத்து ஒரு மணி நேரம் சீராக என்னோடு பயணித்தார்கள்.

வகுப்பு முடிந்ததும் அனைவருக்கும் இரண்டு நோட்டு புத்தகங்கள் மற்றும் ஒரு பேனாவும் இனிப்பும் கொடுத்தோம். மாணவர்கள் அனைவரும் மனம் மகிழ்ந்தனர். எங்களுக்கு புது அனுபவமாக இருந்தது. மனம் நிறைந்து இருந்தது.
























நீலம் அறக்கட்டளை - "நாமும் மத்தவகளுக்கு ஏதாவது செய்யணும்டா "

நான் ஒரு சமுக விலங்கு. நான் வாழ எனக்கு மற்றவர் உதவி தேவை. அதே போல மற்றவர்கள் வாழ என் உதவி அவர்களுக்கு தேவை. இதில் உதவி என்ற வார்த்தைக்கு மாற்றாக கடமை என்ற வார்த்தையை பயன்படுத்தினால் இந்த கோட்பாடு இன்னும் எளிமையாகும்.

நான் உனக்காக கடமை ஆற்றுகிறேன் நீ எனக்கு கூலி கொடு. அதை வைத்து நான் வாழ்கிறேன். அந்த கூலி எனக்கானது. என் திறமைக்கானது. அதே போல நீ எனக்காக செய்யும் கடமைக்கு நான் கூலி தருகிறேன். அது உனக்கானது.
இந்த உலகத்தில் அனைவரும் ஏதாவது ஒரு கடமையாற்ற வேண்டும். தன் கூலியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து உங்கள் கூலியில் சிறிது எனக்கு கொடுத்து உதவுங்கள்  என்று யாரவது  கேட்டல்  என்னை பொருத்தவரை அவர்கள் கடமை தவறியவர்கள் சோம்பேறிகள். வாழத்தெரியாதவர்கள். பிச்சைகாரர்கள், மனநோயாளிகள் யாராவது என்னிடம் கை நீட்டும் போது இவனுக்கென்ன நல்லாதானே இருக்கான் என்று முகத்தை திருப்பிக்கொள்வேன். எனக்கு வலிய வந்து யாராவது உதவி செய்தால் கூட அவர் மீது சந்தேகம் தான் எழும்.  அம்மா , அப்பா, மனைவி , உறவினர்கள் , நண்பர்கள் காட்டும் அன்பு கூட அது அவர்களின் கடமை என்று புரிந்துகொள்வது என்னக்கு வசதியாக இருந்தது.

ஆனால் என் வாழ்க்கை விரிவடைய விரிவடைய அந்த கருத்தின்மீது சந்தேகம் எழுந்தது .  பலதரப்பட்ட  மனிதர்களையும் நண்பர்களையும் வாழ்க்கைச்சூழலையும் கடக்கும் தோறும் வாழ்க்கை பற்றிய பெருங்கேள்விகள் எழுந்தன. அதற்க்கான விடைகளை நான் தேடிச்சென்ற இடம் புத்தகங்கள்.

நேரம் கடத்துவதற்கு பட்டுமே பயன் பட்டு வந்த புத்தகவாசிக்கும் பழக்கம் பின் என் தேடலுக்கான வழியாக மாறியது.  அதன் வழியாக நான் சென்று அடைந்தது ஜெ வின் எழுத்துக்களை.

அறம் சார்ந்த அவர் எழுத்துக்களை படிக்கப்படிக்க என் மனதில் வெகு நாட்க்களாக ஒலித்துக்கொண்டு இருந்த ஒரு குரல் தெளிவாக கேட்டது.

"நாமும் மத்தவகளுக்கு ஏதாவது செய்யணும்டா "

இந்த குரல் எப்போதும் என் மனதில் ஒலிக்கும் குரல் தான். ஆனால் என் தர்கபுத்தியால் அதற்க்கு மதிப்பளிக்கவே இல்லை.

"நாமும் மத்தவகளுக்கு ஏதாவது செய்யணும்டா " என்று தீவிரமாக நான் யோசிக்கும் போது ஒரு கருத்து எனக்கு தெளிவாக புரிந்தது.

என் வழிவின் மெரும்பகுதி, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய நண்பர்களாலும், உறவினர்களாலும், முகம் தெரியாத அன்பர்களாலும் கட்டமைக்கப்பட்டது என்று.

நான் வேலையில்லாமல் அலைந்த போது பலநாள் என்னக்கு தங்குவதற்கு இடமும் உணவும் அளித்த நண்பர்கள், விடியற்காலையில்  எழுந்து என்னையும் அழைத்துக்கொண்டு தனக்கு தெரிந்தவர்களை எல்லாம் சந்தித்து எனக்காக வேலை கேட்டு நின்ற பெங்களூர் பெரியப்பா, நான் திருமணத்துக்கு பெண் தேடி அலைந்தபோது என் மனைவியின்  குடும்பத்தை அறிமுகம் செய்த முன்பின் அறிமுகமில்லாத நபர் என்று முகங்கள் ஞாபகத்தில் எழுந்து கொண்டே இருந்தது.

இன்று பொருளாதார ரீதியாக சொல்லிக்கொள்ளும்படி வளர்ந்திருந்தாலும் என் வாழ்வின் பெரும்பகுதி மற்றவர் பிரதிபலன் இல்லாமல் செய்யும் உதவியால் மட்டுமே முன்னகருகிறது.

இறுதியாக முடிவு செய்து   " நீலம் அறக்கட்டளை" துவங்கப்பட்டது.

நான் மற்றும் என்னுடன் வேலை செய்யும் நண்பர்கள் மற்றும் தம்பிக்களுமான வி. சிவக்குமார் , அ. சங்கர் மூவரும் இணைந்து துவங்கி உள்ளோம். கடந்த ஒருவருடமாக  மூவரும் இணைந்து மாதம் ஒரு சிறு தொகையை சேமித்தோம்.

தொடரும் .....

திங்கள், செப்டம்பர் 21, 2015

எழுத்தாளர் திரு. ஜெயமோகன் சந்திப்பு - 2

காலை நான்கு மணிக்கு கோவை இரயில் நிலையத்தில் இறங்கினேன். வெளியில் வந்ததும் ஒரு ஆட்டோ ஓட்டுனர் என் அருகில் வந்தார் . என் அப்பா வயது இருக்கும் . ஏங்கிங்னா போனம் என்றார். பிரின்ஸ் கார்டன் என்றேன். அடுத்த பத்து நிடத்தில் நான் அங்கு இருந்தேன். வரவேற்பரையில் விசாரித்த போது ஜெயமோகன் அவர்கள் இன்னும் வந்திருக்கவில்லை. அங்கே ஒரு அறையை அமர்த்திகொண்டேன். ஓய்வெடுக்க முயன்னும் முடியவில்லை. மனம் செயற்கையான பரபரப்படைந்து கொண்டு இருந்தது. அவரை பார்த்தவுடன் என்ன பேசுவது, எதாவது கேள்வி கேட்கலாமா , அவர் புத்தகங்களில் எதாவது பிடித்த பகுதியை பற்றி விவாதிக்கலமா என்று எத்தனையோ எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தது.

ஒரு பிரபலத்தை சந்திக்கும் நிகழ்வை வாழ்வின் முக்கியமான தருனமாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்ற மனதின் தவிப்பை சற்று தள்ளி நின்று பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தேன்.

காலை ஏழு மணிக்கு குளித்து தயாராகிவிட்டேன். ஏழு முப்பதுக்கு அரங்கா தொலைபேசியில் அழைத்தார். சார் வந்துட்டார் வாங்க என்றார். பரபரப்பு தாங்கவில்லை. மறுபடியும் ஒரு முறை தலைவாரிக்கொண்டேன். உடைகளை சரி செய்து கொண்டேன், குளியல் அறையை திறந்தேன், ஆனால் எதற்கு என்று தெரியவில்லை மூடிவிட்டேன். பின்பு வாட்ச்சை தேடிக்கொண்டு இருந்தேன். வெகு நேரம் கழித்து அது குளியல் அறையில் இருப்பது ஞாபகம் வந்தது. ச்சா மொதல்ல அதுக்கு தான் அந்த அறைக்கதவை திறந்தனா ... சரி சரி நல்லா மூச்சு விடு நல்லா மூச்சு விடு தண்ணி குடி கொஞ்ச நேரம் உட்கார் என்று என்னை நானே அமைதி படுத்திக்கொண்டேன்.

பின் வெளியில் வந்து அடுத்த அறையின் கதவை தட்டினேன். அரங்கா கதவை திறந்தார். வாங்க என்று மகிழ்வோடு வரவேற்றார். ஜெ மெத்தையில் அமர்ந்து அன்றைய உரைக்காக மடிக்கணினியில் தட்டச்சிக்கொண்டு இருந்தார். நான் பவுயமாக வணக்கம் சார் என்றேன். எழுதுவதில் ஆழ்ந்திருந்த அவர் என்னை பார்த்து முகமன் சிரித்து வாங்க என்றார்.

அதன் பின் அரங்கா என்னை பற்றியும் வேலை பற்றியும் கேட்டார்.  நான் வென்முரசு நாவலின் முதல் புத்தகத்தை ஒலி வடிவமாக மாற்றி இணையத்தில் பதிவேற்றி உள்ளேன் என்றேன். ஓ நீங்க தானா அது என்று அரங்கா என்னை தழுவிக்கொண்டார். ஆமாம் அது நான் தான் கிராமத்தான் என்ற பெயரில் பதிவேற்றினேன் என்றேன். உங்களதாங்க தேடிட்டு இருக்கோம் நிங்களே வந்துட்டிங்க என்றார் அரங்கா. புதுசா எழுத வரவங்க இப்படிதான் கிராமத்தான், பிச்சைகாரன் என்று பெயர் வச்சுகுறாங்க என்று ஜெ சொன்னார்.  அதை கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது. இணையத்தில் ஓணாண்டி, குருவிக்காரன், கோவணாண்டி என்ற பெயரில் எழுதுபவர்களை நான் பார்த்திருக்கிறேன் .

ஆனால் நான் வெட்ட வெளியில் கக்கா போய், வேலங்குச்சியில் பல் துலக்கி , பம்பு செட்டில் தலை மூழ்கி, தேங்காய் எண்ணெய் வழிய தலைவாரி ,  பல்பம் டப்பா பலகையில் மோதி டங் டங் என்று சத்தம் வர பள்ளிக்கு ஓடிய  சினிமா கிராமத்து சிறுவன் . இன்றும் என் அகத்தில் அந்த கிராம வாழ்க்கைக்கான ஏக்கம் இருக்கிறது . அது என் பேச்சில் எண்ணங்களில் செயலில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கிராமத்தான் .


 அரங்கா உங்கள் ஆடியோ நன்றாக இருந்தது தொடருங்கள் என்றார் . நம்ம குழுவில் நெறைய சிவக்குமார் இருக்கிறார்கள் அதனால் உங்களுக்கு "ஆடியோ சிவா" என்று பெயர் வைத்து விடலாம் என்றார் . அதன் பின் ராதா எனக்கு நண்பரானார் . அந்த அறையில் நண்பர்கள் கூடிகொண்டே  இருந்தனர். அந்த நட்பு வட்டத்தில் நானும் இயல்பாக ஐக்கியமாகிவிட்டேன். அந்த கூட்டதில் நான் புதியவன் என்ற தனிமையை உணரவே இல்லை. அப்படி யாரும் என்னை தனியாக விட்டு விடவும் இல்லை.  ஜெ உரையை முழுவதும் எழுதி முடித்துவிட்டு அதை எங்களுக்கு படித்துக்காட்டி பொருளும் கூரினார். அந்த அனுபவத்துக்கு தானே இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தேன். அப்போதே மனம் நிறைந்து விட்டது.

மற்ற எழுத்தாளர்களை சுற்றி இருப்பது வாசகர் வட்டம். எழுத்தாளர் அதில் தனியாக தெரிவார். ஆனால் ஜெ வை சுற்றி இருப்பது நட்பு வட்டம் . அதில் ஜெவை நாம் தான் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும்.

பதினைந்து நண்பர்களுக்கும் மேல் அங்கு  குழுமிவிட்டனர். அந்த சிறிய அறை சிரிப்பையும்  அரட்டையையும்  தாளாமல் தவித்தது.

பின் அனைவரும் கூட்டம் நடக்கும் இடத்துக்கு சென்றோம். அது சிந்து சதன் அரங்கம் . ஜெ ஆற்றிய உரையின் தலைப்பு  " கைவிடு பசுங்கழை - கவிதை ரசனையின் ஈராயிரம் வருடங்கள் " . அது தமிழ் கவிதை மரபை பற்றிய பாரஷுட் பார்வை.

குளிருட்டப்பட்ட சிறிய வளாகம். மிதமான கூட்டம். ஜெ ஆற்றிய உரை உணர்ச்சியின் உச்சத்தில் கைதட்டி குதுகலிக்ககூடியது அல்ல. ஒவ்வொரு வார்த்தையும் உள்வாங்கி சிந்திக்க வேண்டிய உரை. அந்த சிந்தனை வழியாக நம்மை வாழ்வின் அழகியலை நோக்கி  நகர்த்தும் உரை.



கூட்டம் முடிந்து மத்திய உணவுக்காக ஒரு ஓட்டலுக்கு சென்றோம். ஓட்டல் பெயர் தெரியவில்லை ஆனால் உட்காரா இடமில்லாமல்  வெளியில் நின்றுகொண்டு இருந்தோம். பின்பு எனக்கும் விஜய ராகவன் சாருக்கும்  இடம் கிடைத்தது. அகத்திகீரைரை கூட்டு , வேப்பம்பூ ரசம் , இயற்க்கை வேளாண் சோறு என்று அனைத்தும்  வித்தியாசமாக இருந்தது.

உணவு முடிந்ததும் மறுபடியும் நண்பர்களின் வம்பு குதூகலம் தொடர்ந்தது. ஜெ  ஒவ்வொரு முறையும் ஏதாவது பேசும் போதும்  குழவில் புதியதாக நிற்கும் எண்ணை அவர் கண்கள் சந்திக்கும்.

அனைவரும் பின்பு ஜெ தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்றேம். விஜய ராகவன் சார் ஒரு கார் வைத்திருந்தார். கொஞ்சம் பழைய வண்டிதான் ஆனால் சீறிப்பாய்ந்தது. அதில் நான் ஒட்டிக்கொண்டேன்.

வரவேற்ப்பரையில் அனைவரும் அமர்ந்துகொண்டோம். ஜாலியாக, அரட்டையாக பேசிக்கொண்டு இருந்த அத்தனை நண்பர்களும் நொடிப்பொழுதில் அறிவு தளத்துக்கு மாறினர். அந்த மாறுதல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜெ காந்தியை பற்றி உரையாடினார்.நண்பர்களின் கேள்விகளின் முலம் மேலும் மேலும் உரையாடல் விரிந்துகொண்டே சென்றது.







 சுகந்திர போராட்டத்தின் இறுதிநாட்களில் படேல் , நேரு போன்றவர்களின் பதவி அதிகார விருப்பு , அதை சார்ந்து காந்தியம் அவர்களுக்கு ஏற்ப்படுத்திய சங்கடம், படேலின் இந்திய ஒருங்கிணைப்பு, காந்தியன் வங்கப்பயனம் , காந்தி படுகொலையில் சர்வர்கர் பங்கு என்று ஜெவின் உரையாடல் நீண்டது. ஒருகட்டத்தில் விஜய ராகவன் சார் உரையாடலை தூக்கு தண்டனை சார்ந்து திசை திருப்பினார். அதை பற்றி ஜெ தன் கருத்துக்களை பதிவு செய்தார்.
வரவேற்பரையில்  நாங்கள் வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தது ஓட்டல்காரர்களுக்கு சங்கடமாக இருந்தது. அனைவரும் கலையலாம் என முடிவு செய்து வெளில் வந்தோம். பரஸ்பர முகமன் சொல்லி நான் பிரிந்து என் அறைக்கு வந்தேன்.

வெகுநேரம் அறையில் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தேன். அசையாத நீர் தடாகத்தின் மேல் நிலைகொண்ட மரத்தின் நிழல் போல  என் சுயம் என் மனதின் மேல் நின்றது. சற்று நேரத்தில் மனம் கலைந்தது. கலைந்து இருந்தால் தான் அது மனம்.

பொதுவாக உடலையும் மனதையும் மகிழ்விக்காத  எந்த விஷயத்தையும் என் மனம் தன் புறவய தர்கத்தால் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். இது தேவையா ? இதெல்லாம் தெரிந்து நீ என்ன செய்ய  போற ? நீ புக்கு படிக்கிற நேரத்துக்கு ஏதாவது உருப்படியா பண்ணலாமே ............,

ஆனால் அறிதலும் அதை சார்ந்த தேடலும் என் ஆன்ம விருப்பம். அது மனதின் புலம்பலை பொருட்படுத்துவது இல்லை. அந்த விருப்பமே என்னை இயக்குகிறது. என்னை இயக்கி அது தன்னை நிறைவு செய்துகொள்ளுகிறது. நம்முள் நல்ல ஆன்ம விருப்பங்களை கண்டறிவதும் அதை வளப்படுத்துவதும் மிகச்சிறந்த ஆண்மிகச்செயல் என்று நம்புக்கின்றேன்.

ஜெவுக்கு நன்றி .