"நமக்குள் விழிப்புணர்வு இல்லாதவரை நமக்கு கிடைப்பவை அணைத்தும் வீணே "
சனி, ஜூன் 05, 2010
பாலான்பட்டி பெருமால் கோயில்
எங்க ஊருக்கு அருகில் இருக்கும் பாலான்பட்டி பெருமால் கோயில் அதன் சுற்று பகுதியின் எழில் தோற்றங்கள்... இது சென்னை பெங்களூர் நெடும்சாலையில் பள்ளிகொண்டாவுக்கும் மாதனுருகும் இடையில் உள்ளது. சிறுவயது முதல் இந்த கோவிலுக்கு போகும் பழக்கம் எனக்கு இருக்கிறது. கோவில் எளிமையாகவும் அமைதியாகவும் இருக்கும்.
திங்கள், ஏப்ரல் 26, 2010
திருமண நாள்
அன்புள்ள நண்பர்களுக்கு....
நானும் என் மனைவியும் நலம். அது போல் உங்கள் குடும்பத்தில் அனைவரின் நலன் அவல்.
வரும் வாரம் எனக்கு சந்தோஷமான வாரம்
அந்த வாரத்தில் தான் என் முதல் திருமண நாள் வருகிறது. (30.04.2010)
இந்த ஒரு வருடத்திருமன வாழ்வில் என் மனைவி எனக்கு உணர்த்திய விசயங்கள் அதிகம்.
என் இயலாமைகள்,நான் செய்கின்ற தவறுகளை நான் எடுத்துக்கொள்ளும் விதம், மற்றவர் அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்
என்ற என் எதிர்பார்ப்பு, நான் உபயோகிக்கும் சொற்களின் விளைவுகள், செயல் எல்லாவற்றையும் அக்கறையோடு விமர்சிக்கிறார்.
காதலையும் அன்பையும் வெரும் வார்த்தைகளிலும் வெற்றுக்கற்பனைகளிலும் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருந்தேன். அது நாம் மற்றவர்களுக்கு செய்யும் செயல்களில் இருப்பதை தெளிவு படுத்தி இருக்கிறார்.
பெண்களை பற்றிய என் பொதுவான கருத்துகள் எல்லாம் மறைந்து ஒரு மாயை விலகியது போல இருக்கிறது.
அவர்களை காட்சி பொருளாகவும், கற்பனை செய்து மகிழும் நிழல் பிம்பமாய் பார்க்க மட்டுமே மனம் பழகியிருந்தது.
அதை தெளிவு படுத்தி அவர்களின் இயல்பான நிலைப்பாட்டினையும் உணர்வுகளையும் புரிய வைத்திருக்கிறார்.
உணவின் சுவையும்,நேர்த்தியான ஆடைகள் தரும் அழகான மனநிலையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தியிருக்கிறார்.
மொத்தத்தில் கடவுளுக்கு நன்றி சொல்லுகின்றேன்.
மகிழ்வுடன்
சிவா..
வியாழன், ஏப்ரல் 22, 2010
புதன், ஏப்ரல் 14, 2010
ஒரு விடுமுறை நாளில்...
ஒரு விடுமுறை நாளின் காலை நேரத்தில் எங்கள் ஊர் அருகில் உள்ள ஏரிக்கரையில் நடந்துக்கொண்டிருந்தேன்.ஏரியில் பாதி அளவு தண்ணீர் இருந்தது.
மழைக்காலங்களில் மட்டும் ஏரியில் தண்ணிர் நிறையும்.மற்ற நேரங்களில் வெரும(ண்)னே காயும்.ஏரியின் ஒரு கரையோரம் சாலையும் மறுபுரம் இரயில் பாதையும் இருக்கும்.
புதன், மார்ச் 24, 2010
நீ முத்தமிடும் சத்தமும் செல்லமாய் அடிக்கும் போது எழும் சத்தமும்
எனக்கு ஒன்று போலவே கேட்கிறது.
கை மறந்து வைத்த பொருளை நான் தேடிமுடித்தாலும்
எனக்காய் இன்னும் நீ தேடிக்கொண்டு இருக்கிறாய்
அது கிடைக்க வில்லை என்றாலும் பரவாயில்லை
நீ கிடைத்திருக்கிறாயே அது போதும் எனக்கு.
எப்போதாவது என்னை ஓரிரு நாட்கள் பிரிந்திருப்பாய் அல்லவா
அந்த நாட்களுக்குண்டான ஆயிரம் முத்தங்களை இப்போதே என்னிடம் கொடுத்து வை.
குளிக்கப்போகும் போது டவலை மறந்து வைத்து விட்டுப்போ
குளித்தபின் நீ கதவுமறைவில் டவலை கேக்கும் போது
உன் ஈர முகத்தில் பூத்திருக்கும் வெக்கத்தை என் கண்கள் பறிக்க ஆசை படுகின்றன .
என் உணவில் பாதியை உன் தட்டில் போட்டுக்கொள்
ஏன்னெனில் உனக்கான உணவில் பாதியை எனக்கே ஊட்டி விடுகிறாய்.
நீ அருகில் இருக்கும் போது இனி கவிதை எழுதப்போவது இல்லை
உன்னை படிப்பதைவிட எழுதுவதில் என்ன சுகம் வந்துவிட போகிறது.
என் மகிழ்வுக்காக உன் எந்த இயல்பையும் நீ மாற்றிக்கொள்ளவில்லை
உனக்குத்தெரியுமா உன் இந்த இயல்பு தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று....
எனக்கு ஒன்று போலவே கேட்கிறது.
கை மறந்து வைத்த பொருளை நான் தேடிமுடித்தாலும்
எனக்காய் இன்னும் நீ தேடிக்கொண்டு இருக்கிறாய்
அது கிடைக்க வில்லை என்றாலும் பரவாயில்லை
நீ கிடைத்திருக்கிறாயே அது போதும் எனக்கு.
எப்போதாவது என்னை ஓரிரு நாட்கள் பிரிந்திருப்பாய் அல்லவா
அந்த நாட்களுக்குண்டான ஆயிரம் முத்தங்களை இப்போதே என்னிடம் கொடுத்து வை.
குளிக்கப்போகும் போது டவலை மறந்து வைத்து விட்டுப்போ
குளித்தபின் நீ கதவுமறைவில் டவலை கேக்கும் போது
உன் ஈர முகத்தில் பூத்திருக்கும் வெக்கத்தை என் கண்கள் பறிக்க ஆசை படுகின்றன .
என் உணவில் பாதியை உன் தட்டில் போட்டுக்கொள்
ஏன்னெனில் உனக்கான உணவில் பாதியை எனக்கே ஊட்டி விடுகிறாய்.
நீ அருகில் இருக்கும் போது இனி கவிதை எழுதப்போவது இல்லை
உன்னை படிப்பதைவிட எழுதுவதில் என்ன சுகம் வந்துவிட போகிறது.
என் மகிழ்வுக்காக உன் எந்த இயல்பையும் நீ மாற்றிக்கொள்ளவில்லை
உனக்குத்தெரியுமா உன் இந்த இயல்பு தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று....
செவ்வாய், மார்ச் 23, 2010
நீ இல்லாமல் நான் இல்லை
சென்ற வாரம் விஜய் டிவியில் "நீயா நானா நிகழ்ச்சி " பார்த்தேன்.
தலைப்பு மனைவி தன்னைவிட சற்று அதிகம் சம்பாதிப்பதை கணவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதை பற்றியது.
ஒரு சிலரைத்தவிர அனைவரும் கணவன் மனைவி உறவு பாதிக்காத வகையில் பேசினார்கள்.
அதனால் அவர்களால் உண்மை நிலையை வெளிபடுத்த முடியவில்லை.
சனி, மார்ச் 06, 2010
சாத்தனூர் அணை
இங்கு சவூதியில் நாங்கள் இருக்கும் இடத்தில் இயற்கையின் வெளிபாடு என்றால் அது மணல் வெளி மட்டுமே, எதாவது ஒரு மரத்தை பார்த்தால் கூட சற்று நின்று பார்துவிட்டு போக தோன்றும்.இங்கு நான் இருகின்ற இடதின் சூழல்,மனிதர்கள்,ஒலிகள்,நிறங்கள்
அனைத்தும் என் மனதுக்குள் இறுக்கமான உணர்வுகளையே ஏற்படுத்தும்.
அதை போக்க வேண்டும் என்பதற்காகவே அங்கு ஊருக்கு வரும் போதெல்லாம் குடும்பத்தோடு எங்காவது வெளியில் போனால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்.
சனி, பிப்ரவரி 13, 2010
கேட்டது கிடைக்கும்
ஒரு அற்புதமான ஓவியர் இருந்தார் ஆனால் அவருக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம்.
அவர் மீது அன்பு கொண்ட ஒரு நல்ல நண்பர் இருந்தார்.
அவர் ஓவியரின் படைப்புகளை கண்காட்சிக்கு வைக்களாம் என அறிவுரை கூறினார்.
அவர் மீது அன்பு கொண்ட ஒரு நல்ல நண்பர் இருந்தார்.
அவர் ஓவியரின் படைப்புகளை கண்காட்சிக்கு வைக்களாம் என அறிவுரை கூறினார்.
புதன், பிப்ரவரி 10, 2010

படித்ததில் பிடித்தது-1
"நாம முட்டையை உடைத்தா ஒரு உயிர் போச்சுன்னு அர்த்தம்
முட்டையே தான உடைந்தா ஒரு உயிர் உருவாகி வெளியே வருதுன்னு அர்த்தம்"
"மத்தவங்க நம்ம செதிக்கினா வலி அதிகமா தான் இருக்கும்
நம்மையே நாம செதுகினா வலி கூட சுகமாதான் இருக்கும்"
உங்களுக்கு யாரை அதிகமா பிடிக்கும்?
உங்க வாழ்கையில் மறக்க முடியாத உதவி பன்னது யார்?
நீங்க நண்பனா இருக்க விரும்பும் நபர் யார்?
இந்த கேள்விகளுக்கு நம்ம பதில் அளிப்பது எளிது
ஆனா இந்த கேள்விக்கு பதிலா இருப்பாது அழகு..
புதன், பிப்ரவரி 03, 2010
செவ்வாய், பிப்ரவரி 02, 2010

நான் காஃபி அருந்தும் போது சுடுகிறது என்றேன்
இயல்பாய் அதை வாங்கி சூடு தனிய ஊதி கொடுத்தாய்
அப்பொழும் நான் உணரவில்லை
நாம் சாலையில் நடந்த பொழுது தூரத்தில் வரும் வாகனத்தை பார்து
இயல்பாய் என்னை சற்று உள்ணோக்கி இழுதுக்கொண்டாய்
அப்பொழும் நான் உணரவில்லை
ஒரு மழை இரவில் உன் இரண்டு உள்ளங்கைகளையும் தேய்து
வெதுவெதுப்பாய் என் கண்ணங்களிள் வைத்தாயே
அப்பொழும் நான் உணரவில்லை
கோவிலில் நாம் வணங்கும் போது உனக்கான என் வேண்டுதல் முடிந்தபின்னும் எனக்கான
உன் வேண்டுதல் முடிவதே இல்லை
இப்படி எத்தனையோ தருணங்களிள் நான் உணரவில்லை
உன்னை பிரிந்து இருக்கும் இப்போது உணர்கின்றேன்
என்னை இரண்டு உயிர்கள் இயக்குகிறது என்று.....
ஞாயிறு, ஜனவரி 31, 2010
சனி, ஜனவரி 30, 2010
தோல்வியில் துவங்கும் காதல்-1
என்னை காதலிப்பாயா என்றேன்
ஏன் உன்னை காதலிக்க வேண்டும் என்றாய்
நான் நல்லவன் உன்னை கண்ணுக்குள் வைத்து காப்பேன் என்றேன்
எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்றாய்
ஏன் நல்லவர்களை பிடிக்காதா என்றேன்
நல்லவர்களை பிடிக்கும் ஆனால்
தன்னை நல்லவன் என்று சொல்பவனை பிடிக்காது என்றாய்
நான் அதிர்ந்து மௌனம் ஆனேன்.
ஏன் உன்னை காதலிக்க வேண்டும் என்றாய்
நான் நல்லவன் உன்னை கண்ணுக்குள் வைத்து காப்பேன் என்றேன்
எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்றாய்
ஏன் நல்லவர்களை பிடிக்காதா என்றேன்
நல்லவர்களை பிடிக்கும் ஆனால்
தன்னை நல்லவன் என்று சொல்பவனை பிடிக்காது என்றாய்
நான் அதிர்ந்து மௌனம் ஆனேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)